9/09/2015

| |

10பேர் கொண்ட அரசியல் சாசன பேரவைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க நியமனமகின்றார்

அரசியல் சாசனப் பேரவைக்கான ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பிரதிநிதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியானவர் இனவாதியாக அறியப்பட்ட சம்பிக்க ரணவத்தையை தனது பிரதிநிதியாக தேர்ந்தேடுத்துள்ளமை  தமிழ் பேசும் மக்களின் முகத்தில் கரிபூசும் நடவடிக்கையாகும்.

சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் அரசியல் சாசன பேரவையில் அங்கம் வகிக்கின்றனர்.

அரசியல் சாசனப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 10 என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் பிரதிநிதிக்கு மேலதிகமாக சிறு கட்சிகளின் பிரதிநிதி ஒருவரும், எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி ஒருவரும், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூவரும் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசியல் சாசனத்தின் 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அரசியல் சாசனப் பேரவை நிறுவப்பட உள்ளது..