9/30/2015

| |

சந்திரிகாவின் கண்ணைப் பறித்துக்கொண்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் வழக்கில் 300 வருட சிறை


1999 டிசம்பர் 18 சந்திரிகாவின் கண்ணைப் பறித்துக்கொண்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் வழக்கில் 16 வருடங்களுக்குப் பின்னர் இந்த தாக்குதலுக்கு உதவிய குற்றவாளிகள் இருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 300 வருட சிறைத்தண்டனையும், மற்றவருக்கு 260 வருடங்களும் வழங்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

| |

செவ்வாய் கிரகத்தில் நீர் படிமங்கள்

செவ்வாய் கிரகத்தில் நீர் படிமங்கள்சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை பற்றி அமெரிக்கா தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இதற்காக அமெரிக்கா ஏற்கனவே அங்கு அனுப்பி வைத்த விண்கலங்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம், செவ்வாய் கிரகத்தில் நீர் படிமங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
இந்தியா அனுப்பி வைத்த மங்கள்யான் விண்கலமும் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி ஆய்வு செய்து புகைப்படங்களையும் தகவல்களையும் அனுப்பி வைத்துள்ளது. அதன் மூலமும் செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி வடிவத்தில் தண்ணீர் படிமங்கள் இருப்பதாக தெரியவந்து இருக்கிறது.
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ ஏற்கனவே ரெகன்னாய்சன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்துள்ளது.
அந்த விண்கலம் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.
அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் வெப்பம் நிலவும் காலத்தில் சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரங்கள் கிடைத்துருப்பதாக நேற்று தெரிவித்தனர்.
அதாவது செவ்வாய் கிரகத்தில் கோடை காலம் நிலவும் போது அந்த இடத்தில் தண்ணீர் ஓடியதும், குளிர் காலத்தில் அந்த தண்ணீர் உறைந்து காணப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.
உறைந்த தண்ணீரின் அடியில் உப்புப்படிமங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
உயிர்கள் வாழ்வதற்கு தண்ணீர் முக்கிய ஆதாரம் ஆகும். செவ்வாயில் தண்ணீர் ஓடியதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்திருப்பதால், அடுத்த கட்டமாக அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது பற்றிய ஆய்வில் மும்முரமாக ஈடுபடவுள்ளனர்.
»»  (மேலும்)

9/29/2015

| |

மாடு மேய்ப்பது கேவலம், ஒரு "தமிழ்த்தேசியக்" கண்டுபிடிப்பு!!!

ஜெனிவாவில் வைத்து ஒரு திருவாசகம் சொல்லப்பட்டிருக்கிறது, "நாங்கள் என்ன மாடு மேய்த்து விட்டா வந்தோம்". தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்திற்கு வந்த போது ஜெனிவா நகரத் தெருவில் வைத்து தான் வணக்கம் சொல்லியபோது தனக்கு வணக்கம் சொல்லவில்லை என்பதால் வெகுண்டெழுந்த ஒரு அறிவாளியின் அறிக்கை இது. சுமந்திரன் வணக்கம் சொல்லாமல் ஒரு தனிமனிதனை அவமதித்தார் என்றால் இந்த அறிவுக்கொழுந்து உழைக்கும் மக்கள் எல்லோரையும் தனது மேட்டுக்குடித்தனத்திலும், சாதிவெறியிலும் அவமதிக்கிறது.
சுமந்திரனும் அவர் சார்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் எம்மக்களைக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்சவின் கட்சியிலும், ஆட்சியிலும் கூட்டாளியாக இருந்த மைத்திரிபால சிறிசேனாவுடன் கூட்டுச் சேர்ந்து மரணித்த எம்மக்களை அவமதிப்பது குறித்து அவருக்கு கோபம் வரவில்லை. கோணேஸ்வரி, கிரிசாந்தி, இசைப்பிரியா என்று எண்ணற்ற எம்பெண்களை பாலியல் வன்முறை செய்து கொன்று குவித்த இலங்கை இராணுவத்தின் தலைமைத்தளபதி சரத் பொன்சேகாவை வன்னியில் இன்ப்படுகொலை நடந்த சில மாதங்களிலேயே ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு ஆதரித்து எம்பெண்களை அவமதிப்பது குறித்து இந்த மாடு மேய்க்காத விஞ்ஞானிக்கு கோபம் வரவில்லை. அரச பயங்கரவாதத்தால் இன்பம், செல்வம், பரமேஸ்வரன், ராஜேஸ்வரன், சுபாஸ், பாலேந்திரா என்று எண்ணற்ற எம்போராளிகளை 1979 ஆண்டிலேயே அவசரகாலச்சட்டத்தின் மூலம் கொன்று குவித்த கொலைகாரன் ஜெயவர்த்தனாவின் நெருங்கிய உறவினனும், ஐக்கிய தேசியக் கட்சிக்காரனுமான ரணில் விக்கிரமசிங்காவுடன் கூட்டமைப்பு கூடிக் குலாவி கொஞ்சுவதைப் பற்றி இந்த பரமார்த்த குருவிற்கு கோபம் வரவில்லை.
தமிழ்மக்களை இனப்படுகொலை செய்தவர்களை விசாரணை செய்ய வேண்டும் என்று ஜெனீவாவில் புலம்பெயர் பிழைப்புவாதிகள் நடத்தும் ஊர்வலத்தில் உலக மகாபயங்கரவாதிகளான அமெரிக்காவின் நட்சத்திரங்களும், கோடுகளும் கொடிகளை பிடித்துக் கொண்டு தமிழ்மக்களிற்கு நேர்ந்த கொடுமைகளிற்கு நீதி கேட்கிறார்கள். அமெரிக்க கொடியை இவர்கள் பிடித்துக் கொண்டு நின்ற அந்த நேரத்திலேயே அப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும் நேரடியாகவும் மற்ற எத்தனையோ நாடுகளில் மறைமுகமாகவும் எத்தனையோ அப்பாவிப் பொதுமக்கள் அமெரிக்கர்களால் கொல்லப்பட்டிருப்பார்கள். தமிழ் மக்களை மகிந்த ராஜபக்ச அரசு இனப்படுகொலை செய்த போது சேர்ந்து கொன்ற அமெரிக்க, மேற்கு நாடுகளின் கொடிகளை இந்த வியாபாரிகள் தூக்கிப் பிடித்து எம்மக்களை அவமதிப்பது குறித்து இந்த மானஸ்தனிற்கு கோபம் வரவில்லை.
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பெரும்பான்மையானவர்களின் அரசியல் மதிப்பீடுகள், அரசியல் அறிவு என்பன இப்படித் தான் இருக்கிறது. வாழ்க, ஒழிக கோசம் போட்டு ஊர்வலம் போவது தான் அரசியல் என்று அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் கும்பல் அவர்களை பழக்கி வைத்திருக்கிறது. தமிழ்ச்சினிமா குப்பைகள்; அம்புலிமாமாவின் வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்கும் கேள்விகள் முடிந்தாலும் முடியாத சீரியல்கள்; நகைக்கடை, புடவைக்கடை விளம்பரங்கள் போடாத நேரத்தில் தமிழ்த்தேசியத் தொண்டு செய்யும் புலம்பெயர் தொலைக்காட்சிகளில் வரும் அரசியல் விஞ்ஞானிகள் நடத்தும் "அரசியல் ஆய்வுகள்" பராக் ஒபாமா, டேவிட் கமரோன் போன்ற உலகத்தையே விழுங்கும் ஏகாதிபத்தியவாதிகள் தமிழ்மக்களிற்கு நீதியையும், தீர்வினையும் பெற்றுத் தருவார்கள் என்று அவர்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது.
இதுகளின் அரசியல் அறிவு வல்லரசுகளிற்கு வால் பிடிப்பதாக இருக்கும் போது சமுக அறிவு உழைக்கும் மக்களைக் கேவலப்படுத்துகிறது. இவர்களைப் போன்ற மேட்டுக்குடித்தனமும், சாதித்திமிரும் கொண்டவர்களிற்கு மாடு மேய்ப்பது; வயலில் வேலை செய்வது; கடல் தொழில் செய்வது; தென்னை, பனை ஏறிக் கள் இறக்குவது; நெசவு செய்வது; முடி வெட்டுவது; மண்ணைக் குழைத்து மட்பாண்டம் செய்வது; துணி துவைப்பது; பறை முழங்குவது; மரணித்த மனிதர்களிற்கு இறுதிச்சடங்குகள் செய்வது போன்றவை மதிக்கதக்க தொழில்கள் அல்ல. அந்த உழைப்பாளிகள் மதிக்கத்தக்க மனிதர்கள் அல்ல. சமுதாயத்திற்கு தேவையான அடிப்படைகளை செய்பவர்களை சாதி குறைந்தவர்கள் என்று அவமானப்படுத்துவது தான் இந்து சமயம் என்னும் மண்டை கழண்ட மடையர்களின் இது நாள் வரையான வரலாறு.
"பிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்த கரவெட்டி சாதிவெறியர்கள்" என்று எமது இணையத்தில் கட்டுரை வந்த போது இந்த மாடு மேய்க்காத விஞ்ஞானி போன்ற ஒரு அறிவாளி முகப்புத்தகத்தில் " இந்த கட்டுரையை வரைந்தவரிடம் ஓரேயொரு கேள்வி, நீங்கள் நிர்வாக உறுப்பினராக இருந்த அல்லது இருக்கின்ற ஆலயத்தினுள் வேற்று சாதியினர் அல்லது வேற்று மதத்தவர் செல்ல அனுமதிப்பீர்களா??? என்று ஒரு அணுகுண்டைப் போட்டு விட்டு "இதை எழுதிய திரு.விஜயகுமாரனின் சாதிக்கலவரத்திற்கு என்றைக்குமே கரவெட்டி இரையாகாது" என்று வீர சபதம் இடுகிறார். வேறு சாதியினர் அல்லது வேறு மதத்தவரை கோவிலிற்குள் விடுவீர்களா என்று கேட்பது சாதிவெறியின் அநாகரீகம் என்பது கூட தெரியாத அளவிற்கு சாதிவெறியில் மூழ்கி இருக்கும் ஒருவர் சாதிக்கலவரத்திற்கு இரையாக மாட்டோம் என்று சொல்வது சாதிக்கொடுமை எந்த அளவிற்கு இவர்களில் ஊறிக் கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதைத் தான் தமிழ்மக்களிற்காக குரல் கொடுக்கிறேன் என்று விட்டு "நான் ஒன்றும் மாடு மேய்த்தவன் இல்லை" என்று அந்த மக்களின் ஒரு பகுதியினரை அவமதிப்பவனும் செய்கிறார்.
இனம், மதம், மொழி, சாதி என்பன மக்களை பிரிப்பவர்களின் கருவிகளே என்பதை "மாடு மேய்த்து விட்டு வரவில்லை" என்ற சாதித்திமிரும்; அமெரிக்க கொடி பிடிக்கும் அடிமைத்தனமும் மறுபடியும் எடுத்துக் காட்டுகின்றன. ஒன்று சேர்ந்து ஏமாற்றும் முதலாளித்துவ, மேட்டுக்குடித் தலைமைகளிற்கு எதிராக இழப்பதற்கு எதுவும் இல்லாத உழைக்கும் மக்கள் ஒன்று சேருவோம்.


»»  (மேலும்)

| |

இறுதி யுத்தத்துக்குப் பிந்தைய கொடுங்கனவுகள்

ஷோபா சக்தியின் ‘BOX கதைப் புத்தகம்’ நாவலில் ஓரிடத்தில் இப்படி ஒரு வரி மேற்கோள் காட்டப்படுகிறது. “இந்த உலகத்தில் நடந்த எந்த யுத்தத்தைப் பற்றிய வரலாறும் உண்மையாக, நடந்தது நடந்தபடி எழுதப்பட்டதில்லை. அந்த பொது விதிக்கு இந்த யுத்தமும் விதிவிலக்கல்ல.”
ஆம், யுத்தத்தின் உண்மையான வரலாறுகள் காலத்தின் ரத்த வெள்ளத்தில் முழ்கடிக்கப்படுகின்றன. மறதியின் ஆழத்தில் அவை எங்கோ ஒரு கூழாங்கல்லைப் போல அமிழ்ந்துபோகின்றன. ஷோபா சக்தியின் நாவல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிந்தைய மானுட அவலத்தையும் ஆறாத் துயரங்களையும், அந்த துயரக் கதைகளின் ஊடே யுத்த காலத்தின் சித்ரவதைகள், வன்புணர்ச்சிகள், படுகொலைகளின் துர்க்கனவுகளையும் எழுதிச் செல்கிறது. யுத்தத்தின் நெருப்பில் கனவுகளும் லட்சியங்களும் மனித கவுரவமும் மிகக் குரூரமாகச் சிதைக்கப்பட்ட சாமானிய மனிதர்களின் உறைந்த சொற்களின் வழியே இந்தக் கதை சொல்லப்படுகிறது.
யுத்தத்தின் வெற்றிகளையும் தோல்விகளையும் வரலாறு எப்போதும் அரசியல் கணக்குகளாக எழுதுகிறது. அல்லது இறந்த உடல்களின் எண்ணிக்கையாக எழுதுகிறது. இப்படி எழுதப்படும் வரலாறுகள் எல்லாமே ஒரு யுத்த காலத்தின் நெருக்குதல்களின் ஊடே ஒரு குடிமைச் சமூகத்தின் சாமானிய மனிதர்கள் அடைந்த, கற்பனைக்கெட்டாத பேரவலங்களையும் பேரழிவுகளையும் சொல்லாமல் இருப்பதன் மூலம் புதிய யுத்தங்களுக்கான வாய்ப்புகளை மிச்சம் வைத்துக்கொள்கிறது. புதிய லட்சியவாதங்களின் பெயரால் மனிதர்களை, புதிய கொலைக் களங்களுக்கும் சித்ரவதை முகாம்களுக்கும் அனுப்புவதற்கான ஏற்பாட்டை வரலாறு தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.
பெரிய பள்ளன் குளம் என்ற கிராமத்தை மையமாக வைத்து இந்த நாவல் பின்னப்படுகிறது. அந்தக் கிராமத்தை நோக்கிச் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் வந்துசேர்கிறான். வாய்பேச முடியாத சிறுவன் அவன். காவல்துறை அவனைத் தேடுகிறது. அவன் அந்த கிராமத்தில் மக்களோடு கலந்துவிடுகிறான். அங்குள்ள ஒரு கல்லறை வீட்டைத் தன் இருப்பிடமாக்கிக்கொள்கிறான். அந்த கிராமம் முழுக்க குண்டு வீச்சில் கைகால்களை இழந்த சிறுவர்களும் சிறுமிகளும் போர்முனைக் காட்சிகளையே நாடகமாக்கி விளையாடுகிறார்கள்.
அந்த அந்நிய சிறுவன் அந்தப் பேரவலத்தினூடே தன்னை ஐக்கியமாக்கிக்கொள்கிறான். அந்த கிராமத்தின் கதையினூடே யுத்தத்தின் கதைகள் சொல்லப்படுகின்றன. கதைக்குள் வரும் கதாபாத்திரங்கள் பிறகு யுத்தத்தில் தங்கள் ரத்த சாட்சியங்களைப் பேசத் தொடங்குகின்றன. இந்த நாவல் எண்ணற்ற பிரதிகளின் சிலந்தி வலையாக மாறுகிறது. அந்த சிலந்தி வலையை அறுத்து வெளியேறுவது சாத்தியமே அல்ல என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
இடையறாத பாலியல் வன்புணர்ச்சிக்குப் பின் கொடூரமாகச் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்படும் பெண் போராளிகளின் கதைகள், சிங்கள ராணுவத்தின் சித்ரவதை முகாம்களில் நிர்வாணமாக மாடிப் படிகளில் படுக்க வைத்து, இழுத்துவரப்பட்டு, மண்டை உடைத்துக் கொல்லப்படும் இளைஞர்களின் கதைகள், புலிகளின் ரகசியச் சிறைச்சாலைகளில் கொடூரமாகக் கொல்லப்படும் கைதிகளின் கதைகள் என நமது அரசியல் சார்புகளுக்கும் லட்சியவாதங்களுக்கும் அப்பாற்பட்டு எல்லாத் தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட வதைகளின் கதைகளைத்தான் இந்த நாவல் சொல்கிறது. யுத்தத்தைப் பற்றி எழுத வரும் சைபீரிய எழுத்தாளன் ஒருவன், பாலியல் தொழில் நடைபெறும் பிரபலமான விடுதியொன்றைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே செல்கிறான்.
ரகசியமான விடுதி அது. உள்ளூர் செல்வந்தர்களாலும் பணக்காரர்களாலும் அதிகம் விரும்பப்படும் விடுதி என்றும், அந்த விடுதியில் வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் அனைவரும் புலிகள் ராணுவத்தில் முக்கியமான தளபதிகளாகவும் போராளிகளாகவும் இருந்தவர்கள் என்றும், அவர்கள் தன்னகங்காரமும் உடலுறுதியும் மிக்கவர்கள், அவர்களைப் பாலியல் அடிமைகளாக நடத்துவது உங்களை முழு ஆண்மகனாக உணர வைக்கும் என்றும் அந்த எழுத்தாளனுக்குச் சொல்லப்படுகிறது.
ஆனால், அவர்கள் யாரும் புலிகள் அல்ல என்பதையும், கிராமப்புறங்களிலிருந்து கடத்திவரப்பட்ட, வீட்டு வேலைக்கென்று ஏமாற்றி அழைத்துவரப்பட்ட பெண்கள்தான் அவர்கள் என்பதையும் வேறொரு சந்தர்ப்பத்தில் அறிகிறான். பிறகு எதற்காக இந்தக் கட்டுக் கதை? ஒரு இனம் அல்லது ஒரு போராட்டம் முழுமையாக வெல்லப்பட்ட உணர்வை அடைய வேண்டும் என்றால் அதற்கு, தோற்றவர்களின் பெண்களைப் பாலியல்ரீதீயாக வெல்ல வேண்டும், சிதைக்க வேண்டும் என்பது ஆதி யுத்த கால பாலியல் அரசியலின் நியதி.
BOX என்பது என்ன? அது நான்கு புறமும் சூழப்பட்டு நெருக்கப்படுவது. பத்ம வியூகம். நாவலின் ஆரம்பத்தில் ஒரு சிறிய அட்டைப் பெட்டிக்குள் நிர்வாணமாக மணிக்கணக்கில் நிற்கவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களின் பாதங்கள் லேசாகப் பெட்டியை விட்டு நகர்ந்தாலும் அவர்கள் விரல்கள் நறுக்கப்படுகின்றன. பிறகு, யுத்தத்தில் நாலாபுறமும் போராளிகள் சூழப்பட்டு வெளியேற முடியாதபடி பாக்ஸ் அடிக்கப்படுகிறார்கள்.
பாலியல் தொழில் நடக்கும் விடுதிக்கு வரும் சைபீரிய எழுத்தாளனைப் பெண்கள் அட்டைப் பெட்டி வடிவில் சூழ்ந்துகொண்டதாக ஒரு வரி வருகிறது. முள்ளிவாய்க்காலில் மக்கள் எப்படிச் சூழப்பட்டார்கள் என்பதையும் நாம் இப்போது நினைத்துக்கொள்ளலாம். பாக்ஸ் என்பது ஈழத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கொடுங்கனவின் சின்னம்.
பெரிய பள்ளன் குளம் ஒரு நாள் ராணுவதளமாக மாற்றப்படுகிறது, மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். வாய்பேசாத சிறுவன் மட்டும் போக மறுத்து ஊரிலேயே கல்லறை வீட்டுக்குள் மறைந்துகொள்கிறான். ராணுவத்தினர் அவனை வெளியே கொண்டுவருகின்றனர். அவன் உயர் சிங்களக் குடும்பத்தைச் சேர்ந்த, பெளத்த மடாலயத்தில் துறவியாக விடப்பட்ட, அங்கிருந்து ஓடிவந்துவிட்ட சிறுவன் என்று தெரிந்து ராணுவம் அவனுக்குத் தலை வணங்குகிறது. இனவெறுப்புக்கு அப்பால் பெளத்தத்தின் மகத்தான மானுடப் பேரன்பின் ஒரு துளியை தரிசிக்கும் அனுபவத்தை இந்த நாவல் அந்த சிறுவனின் வழியே வழங்குகிறது. BOX கதைப் புத்தகம் ஒரு யுத்த கால சிவில் சமூகத்தின் கதை.
- மனுஷ்ய புத்திரன், கவிஞர், 
»»  (மேலும்)

| |

படகு வெடிப்பில் தப்பினார் மாலைதீவுகள் ஜனாதிபதி

மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயூம் பயணித்த அதிவேகப் படகொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் அவர், பாதிப்பெவையுமின்றித் தப்பியுள்ளார். எனினும், அவரது மனைவிக்கும் பாதுகாவலர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

மாலைதீவுகளின் தலைநகரான மாலேயின் பிரதான இறங்குதுறைமுகத்தை அவரது படகு அண்மித்த போதே, இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

»»  (மேலும்)

9/28/2015

| |

ஓவியர் அ. மாற்கு 15 வருடங்கள் கடந்துபோயின.

.
இன்று ஓவியர் மாற்குவின் நினைவு தினம். 27 September 2000.
எம்மை விட்டுப் பிரிந்த நாள். 15 வருடங்கள் கடந்துபோயின.
இவர் வாழ்ந்த காலங்களில் எம்மவர்களில் பலர் இவரைக் கண்டுகொள்ளவில்லையே என்பது வேதனை தரும் விஷயம். தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்கொள்ளாத உன்னதமானதொரு கலைஞர். மேற்கத்தைய ஓவியர் வான்கோ போல், இவரும் தனது காதைத் தானே அறுத்தெறிந்திருந்தால், அக்காலத்திலேயே இவரும் பிரபல்யம் அடைந்திருப்பாரோ என்னவோ!
இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தின் பிதாமகன் என்று இவரைக் குறிப்பிட்டால் அது மிகையாகாது.
இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரைக் கெளரவிக்கும் நோக்குடன் நண்பர்கள் அ.யேசுராசா, Dr. க. சுகுமார், பத்மநாப ஐயர் ஆகியோரின் பெருமுயற்சியால் `தேடலும் படைப்புலகமும்` என்னும் ஓர் அரிய ஆவணநூலை வெளிக்கொனர்ந்தார்கள். இவருடனான நேர்காணல், சில ஓவியங்கள், இவரது காலத்தில் வாழ்ந்த சில ஓவியர்கள் பற்றிய கட்டுரைகளும் இதில் அடங்கியுள்ளன. ஓவியர் மாற்கு பற்றிய ஓரளவு தகவல்களையாவது நாம் அறிந்து கொள்வதற்கும் இனி வரும் சந்ததியினருக்கு விட்டுச்செல்லவும் இந்த நூல் ஒன்றுதான் தற்போது கைவசம் உள்ளது. இந்த நூலை noolaham.org இல் யாவரும் படிக்கலாம்.
``என் மாணவர்களாலேயே நான் அறியப் படுவேன்`` என்று ஒரு நேர்காணலில் இவர் கூறியதுபோலவே, உலகெங்கிலும் பரந்து வாழும் இவருடைய மாணவர்களில் முதன்மையானவர்களாக அருந்ததி, வாசுகி,கருணா, சுகுணா, ஜெயந்தன் ஆகியோரை நான் அறிவேன். இவர் பற்றிய ஆவணப்படமொன்றை சுவிட்சர்லாந்தில் வாழும் ஜெயந்தன் தயாரித்துவருவது மகிழ்வூட்டும் செய்தியே.
»»  (மேலும்)

| |

ஜெனிவாவில் தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ் அரசியல்வாதிகள்

ஜெனிவா செல்கிறோம், ஐ.நா.மனித உரிமை ஆணையாளரை சந்திக்கிறோம், கூட்டத்தொடரில் பேசுகிறோம், சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்திக்கிறோம் என கூறிவிட்டு வரும் தமிழ் அரசியல்வாதிகள் இங்கு இவ்வாறு தேனீர்ச்சாலைகளில் காலம் கழிப்பதைத்தான் காணமுடிகிறது.
ஜெனிவாவுக்கு வரும் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் எந்த இராஜதந்திரிகளையும் சந்திப்பது கிடையாது. சந்திப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையாளரும் சரி, தூதுவர்கள் இராஜதந்திரிகளும் சரி, இலங்கை என்று வரும் போது இரு தரப்பைத்தான் சந்திக்கிறார்கள். ஒன்று அரச தரப்பு பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அல்லது ஜெனிவா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க,
/இரண்டாவது தரப்பாக தமிழர்களின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை மட்டுமே சந்தித்திருக்கின்றனர். இம்முறை ஜெனிவாவில் பிரித்தானிய தூதுவர், சுவிட்சர்லாந்து ஜனாதிபதி, வெளிநாட்டு தலைவர்கள் அரசதரப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் தமிழர் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் மட்டுமே சந்தித்தனர்.
»»  (மேலும்)

9/27/2015

| |

கிழக்கிலங்கையில் தமிழ் பாடசாலை மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பாடசாலைகளில் பயிலும் மாணschool eastவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கள, முஸ்லிம் சமூகங்களைக் காட்டிலும் விகிதாச்சார அடிப்படையில் பாடசாலைகளிலிருந்து விலகும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையே கூடுதலாக உள்ளது என மாகாண கல்வி அமைச்சின் உயரதிகாரி அப்துல் நிசாம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குறைந்தது 2,000 தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கணக்கெடுப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.

இந்த அளவுக்கு மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து வெளியேறுவது அதிர்ச்சியளிப்பதாக நிசாம் தெரிவித்தார்.

தமிழ் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து கல்வியை முடிக்காமல் வெளியேறுவது தொடர்ச்சியாக அதிகரித்து வருவது குறித்து ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

பாடசாலைகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், அரசு கிராமப் புறங்களில் கூடுதல் கவனத்தை செலுத்தவுள்ளதாகவும் அப்துல் நிசாம் கூறுகிறார்.
»»  (மேலும்)

| |

யாழ்ப்பாணத்தில் 27 - 28 ஆம் திகதிகளில் மௌனகுருவின் காண்டவதகனம்

யாழ்ப்பாணத்தில் 27  -   28 ஆம் திகதிகளில் மௌனகுருவின்  காண்டவதகனம்

Kaandavathakanam.02மட்டக்களப்பில் கடந்த 24 ஆம் திகதி நடந்த விஞ்ஞான விழாவில் பேராசிரியர் மௌனகுருவின் காண்டவதகனம் காலையும் மாலையுமாக இரண்டு காட்சிகள் அரங்காற்றுகை செய்யப்பட்டிருக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் மூத்த தலைமுறையினரும் இளம் தலைமுறையினரும் இணையும் கலை இலக்கிய அரங்குகளின் தேவையே அவசியம் என்பதை உணர்ந்துள்ளமையால் மீண்டும் மேடையேறிய காண்டவதகனம் அதில் பங்கேற்ற கலைஞர்களுக்கும் பார்வையாளர்களான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் புதிய கலாரசனை அனுபவத்தை வழங்கியிருக்கிறது.
இதுதொடர்பாக பேராசிரியர் மௌனகுருவின் தகவல்களிலிருந்து அறியப்படுவதாவது: விஞ்ஞான வழிகாட்டிகள் சங்கம்  நடத்திய கோலாகலமான விஞ்ஞான விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் காண்டவ தகனம் நாடகத்தை நிகழ்த்தும் வாய்ப்பும் கிடைத்தது.
காலையும் மாலையும்  ஆற்றுகை செய்யப்பட்ட காண்டவ தகனத்தின்  பார்வையாளர்கள்
காலையில் மிகவும் இளம் வயதினர். பாடசாலை மாணவர்கள்.
மாலையில் அதன் பார்வையாளர்கள் பெரியவர்கள்.
காலையில் நாடகம் பார்த்தவர்கள் மாலையில் தமது பெற்றோரை அல்லது பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர்.
இம்முறை எமக்குக் கிடைத்த காண்டவ தகனத்தின் பார்வையாளர்கள் வித்தியாசமானவர்கள்
மாலையில் நாடகம் முடிய பார்த்தோர் எழுந்து நின்று கரகோசம் செய்தமையும் .நாடகம் முடிந்தவுடன் மேடையேறி வந்து நடிகர்களுக்கு கைலாகு கொடுத்து பாராட்டியமையும் நாடகம் அவர்களுக்கு நன்கு பிடித்துக் கொண்டமையைக் காட்டின.
சில பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் தமது பாடசாலையில் இதனை கொணர்ந்து காட்டுமாறும் கேட்டுக் கொண்டனர்
25 ஆம் திகதி  காலை 30 பேர் கொண்ட அரங்க ஆய்வு கூடக் கலைஞர் குழு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமாகிறது
காண்டவ தகனமும் நெட்டை மரங்களும் அங்கு 27, 28 ஆம் திகதிகளில் முறையே  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும்  மேடை காணும்
வழமையாக அர்ச்சுனனாக வரும் சசிதரன் இம்முறை வர முடியமையினால் ஞான சேகரன் அப்பாத்திரத்தை ஏற்றார்
அர்ஜுனனையும் அவன் உணர்வுகளையும் அவர் இன்னொரு விதமாக வெளிப்படுத்தினார்.  பலரது பாராட்டுகளையும் பெற்றார்
ஆற்றுகையின் பன்மையும் சுதந்திர வெளியும் அங்கு வெளிப்பட்டது
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைத்தியமானார்

இது நல்­லாட்­சியா? -
-முன்னாள் எம்.பி. பா. அரி­ய­நேத்­திரனRésultat de recherche d'images pour "முன்னாள் எம்.பி. பா. அரி­ய­நேத்­திரன்-"
சிறை­களில் எமது தமிழ் இளை­ஞர்­களை அர­சியல் கைதி­க­ளாக அடைத்து வைத்துக்­கொண்­டி­ருக்­கும்­போது நல்­லாட்சி என்று கதைப்­பது வெட்­க­க்கே­டான செயல் என்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்பினர் பா.அரி­ய­நேத்­திரன் தெரிவித்துள்ளார்.
மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீவு பிர­தே­சத்தில் காஞ்­சி­ரங்­குடா ஜெகன் விளை­யாட்டுக் கழ­கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவை பூர்­த்தி­செய்து நடத்­தப்­பட்ட கால்­பந்தாட்ட சுற்­றுப்­போட்­டி­விழா அதன் தலைவர் வீ.ஜெக­நாதன் தலை­மையில் இடம்­பெற்­றது.
இந் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
இளை­ஞர்­களின் கரங்­க­ளி­லேயே ஒரு­நாட்டின் தலை­விதி தங்­கி­யுள்­ளது. இளை­ஞர்­களை நல்­வழிப்படுத்­தவும் புரிந்­து­ணர்வு, விட்­டுக்­கொடுக்கும் தன்மை என்­ப­வற்றை வளர்க்­கவும் விளை­யாட்­டுக்கள் உந்துசக்­தி­யாக அமை­கின்­றன. கடந்­த­கா­லத்தில் விடுத லைப்­போ­ராட்­டத்தில் பல்­லா­யி­ரக்­கணக் கான இளை­ஞர்கள் எமக்­காக மிகப்­பெரிய தியா­கங்­களை புரிந்து மாண்­டுள்­ளனர். அவர்கள் இன்று அவ்­வா­றான தியா­கங்க ளை செய்­யாமல் இருந்­தி­ருப்­பார்­களானால் எமது அர­சியல் பலம் இன்று சர்வதேசத்­திற்கு சென்­றி­ருக்­காது.
ஒருநாள் அவர்­களின் தியா­கத்­திற்­கான தீர்வு எமக்கு கிடைக்கும் என்­பதை நாம் மறந்­து­விட முடி­யாது. தற்­போது நல்லாட்சி மலர்ந்­துள்­ள­தாக பலர் கூறு­கின்­றனர். ஆனால் இலங்­கையில் உள்ள பல சிறை ச்சாலை­களில் எமது நூற்­றுக்­க­ணக்­கான இளை­ஞர்கள் விடு­த­லை­ செய்­யப்­ப­டாமல் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்­ளனர். அவர்கள் விடு­த­லை ­செய்­யப்­ப­ட­ வேண்டும் என புதிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­திரி பத­வியேற்ற பின் தமிழ்த் ­தே­சி­யக் ­கூட்­ட­மைப்பு வேண்டுகோள் விடுத்தது.
அது­ ந­டை­பெ­ற­வில்லை. தற்­போது பாரா­ளு­மன்­ற­த் தேர்தல் முடிவடைந்து ஒரு ­மா­த­மா­கி­ய­ போதும் எவ­ருமே விடுதலை செய்­யப்­ப­ட­வில்லை. எமது இளைஞர்கள் தொடர்ந்தும் சிறை­களில் வதை­படும் போது அவர்­களை விடு­தலை­ செய்­ய­முடியாத வக்­கற்ற­வர்­க­ளாகத் தான் நாமும் எதிர்க்­கட்­சித் ­த­லை­வர் ­ப­தவியையும் குழுக்­க­ளின்­ பி­ர­தித்­ த­லை­வர்­ப­த­வி­யையும் எடுத்­துக் ­கொண்டு பாரா­ளு­மன்­றத்தை அலங்­க­ரிக்­கின்றோம். போதாக்­கு­றைக்கு மாவட்ட அபி­வி­ருத்தி அமைச்சு பத­வியும் எமக்கு கிடைக்கும் எனவும் சிலர் கூறு­கின்­ற­ன­ர்.
எந்­தப்­ ப­த­வி­களை நாம் பெற்­றாலும் சிறை­களில் உள்ள எமது இளை­ஞர்­களை விடு­த­லை­செய்ய முடி­யாமல் இருக்­கு­மானால் இவ்­வா­றான பத­விகள் எமக்­கு ஏன் என ­பா­திக்­கப்­பட்ட உற­வுகள் கேட்­பதில் நியாயம் இல்­லாமல் இல்லை. எம்மில் சிலர் அர­சியல் என்­பது அபி­வி­ருத்­திதான் என்று கரு­து­கி­றார்கள். அத­னால் ­ப­த­வி­களை அபி­வி­ருத்திக்காக பயன்­ப­டுத்­த ­வேண்டும் என நினைப்­ப­தை­யிட்­டு நாம் ஒன்றும் செய்­ய­முடி­யாது. எமது உரி­மைக்­கான போராட்டம் அபி­வி­ருத்­தியில் மட்டும் கவனம் செலுத்­தி­யி­ருந்தால் தந்­தை­ செல்வா காலத்தில் எமது தலை­வர்கள் பல அமைச்­சுப் ­ப­த­வி­க­ளையும் சலு­கை­க­ளையும் பெற்று வடக்கு, கிழக்கு தா­ய­கத்தை சிங்­கப்­பூ­ராக மாற்­றி­யிருக்க முடியும். அதனை தந்தை செல்வா செய்யவில்லை. எமக்­கான சுய­நிர்­ணய உரிமை கிடைக்­க­வேண்டும். அதனூடான அபிவிருத்தியே எமக்கு தேவை என்பதில் இலட்சியப்பற்றுடன் செயலாற்றினார்.
அவரால் எதுவுமே பெற முடியாத நிலையில் தான் வட்டுக்கோட்டை தீர்மானத்தை 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி நிறைவேற்றிய பின் இயற்கை எய்தினார். அதன் பின்பு தான் உங்களைப் போன்ற இளைஞர்கள் விளையாட்டுப் பந்துகளையும் கிரிக்கெட் மட்டைகளையும் தூக்கி வீசிவிட்டு ஆயுதம் ஏந்தி போராடினர் என்றார்.


»»  (மேலும்)

9/25/2015

| |

வெதமுல்லையில் பாரிய மண் சரிவு: இருவர் பலி

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை பிரதேச செயலக அதிகாரத்துக்கு உட்பட்ட  கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல கயிறுகட்டி (Lily's Lane Estate) தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் மூவர் பலியானதுடன், அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பிற்பகல் 2.30 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்ற இந்த பாரிய மண்சரிவில் தனி வீடொன்றும் (குவாட்டஸ்) 6 வீடுகளை கொண்ட லயனும் (தோட்டக்குடியிருப்பு) சேதமடைந்துள்ளன. கயிறுக்கட்டி தோட்டத்து கோயிலுக்கு அண்மையில் உள்ள ஒத்தசைட் (ஒரு பக்கத்தில் மட்டும் 6 வீடுகளை கொண்ட லயன் அறை) அல்லது ஆற்றோர லயன் என்று கூறப்படுகின்ற தோட்டக்குடியிருப்புகளே இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளன. ஆறு வீடுகளை கொண்ட லயனும், அந்த லயதுக்கு மேல் உள்ள தனி வீடுமே பாதிக்கப்பட்டுள்ளன. லயன் அறைகளின் பின்பக்கம் முற்றாக சேதமடைந்து, பாராங் கற்களுடன் கூடிய மண், வீடுகளை உடைத்துக்கொண்டு முன்பக்கமாக வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மண்சரிவுக்குள் அகப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கு பெக்கோ இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. மரணமடைந்த மூவரில் சிறுவரொரும் 50 வயதான முதியவர் ஒருவரும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது, ஒத்தசைட் லயத்துக்கு மேலே உள்ள தனிவீட்டுக்கு அருகில் பாரிய இடியொன்று விழுந்துள்ளது. கடும் மழைக்கு மத்தியில் அந்த சத்தத்துடன் அள்ளுண்டு வந்த மண்ணும், பாராங்கற்களும் தனிவீட்டை அப்படியே சேதப்படுத்தி, புரடிக்கொண்டு லயத்தின் பின்புறமாக விழுந்துள்ளது. அந்த தனி வீட்டில், பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுபேர் இருந்ததாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. லயத்தின் பின்புறத்தில் விழுந்து சரிந்த மண்ணும் பாராங்கற்களும், வீடுகளை உடைத்துக்கொண்டு முன்பக்கமாக வந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. பாரிய மண்சரிவு என்பதால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் இறங்க முடியாதுபோய்விட்டதாக தெரிவித்த, பிரதேச வாசிகள், மண்சரிவில் சிக்குண்டுள்ளோரை மீட்பதற்காக பெக்கோ இயந்திரத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். அந்த பகுதியில் வழமையை விடவும் கடுமையான மழை பெய்துகொண்டிருப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இதேவேளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை இன்று மாலை 6 மணியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. சம்பவத்தில் ஒருகாலை இழந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண்ணொருவர், கொத்மலை வைத்தியசாலையில் இருந்து, கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். -
»»  (மேலும்)

| |

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்டில் ஹஜ்ஜுப்பெருநாள் சிறப்பு சங்கமம்

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்டில்  ஹஜ்ஜுப்பெருநாள் சிறப்பு சங்கமம் 


»»  (மேலும்)

9/24/2015

| |

ஞாயிறன்று சிவப்பு சந்திரக்கிரகணம்

பௌர்ணமி தினமான ஞாயிற்றுக்கிழமை (27) பூரண சந்திரகிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவை காணக்கூடியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 17 மாத காலப்பகுதி இடம்பெறும் நான்காவது நிகழ்வு இது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திரக்கிரகணத்தை, பூமியின் மேற்கத்தேய அரைக்கோளத்திலுள்ள 1 பில்லியன் மக்களுக்கும் ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிலுள்ள சுமார் 1.5 பில்லியன் மக்களுக்கும், மேற்கு ஆசியாவிலுள்ள 500 மில்லியன் மக்களுக்கும் காணக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திரக்கிரணகம் காரணமாக, பௌர்ணமி தினத்தன்று மாலை  சிவந்த நிலவைக் காணலாம் என்றும் இதற்கு ஞாயிறு ரெட் மூன்  என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
»»  (மேலும்)

| |

மக்காவில் 310பேர் பலி; 450பேர் படுகாயம்

வருடாந்த ஹஜ் யாத்திரையின் போது, புனித நகரான மக்காவுக்கு அருகே ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310ஆக அதிகரித்துள்ளதாகவும் 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சவூதி அரேபிய சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக, செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 1 மில்லியன் மக்கள் இன்று மக்காவுக்கு சென்றிருந்ததாகவும் சனநெரிசலில் நசுங்குண்டே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புனித மக்கா பள்ளிவாசலிலிருந்து 5 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள மினாவில் நடந்த இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டடோரை மீட்கும் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பில் மீண்டும் சுனாமி

Résultat de recherche d'images pour "லங்காசிறி"
கடந்த காலங்களில் பொய்களையும் புரட்டுகளையும் மூலதனமாக கொண்டும் மக்களின் மரணங்களை விற்றும்  பிழைப்பு நடாத்திய லங்காசிறி இப்போது கிழக்கில் நேரடியாக களமிறங்குகின்றது. 

லங்காசிறி கிழக்கு பிரிவின் போது படுகொலைகளை ஊக்குவித்து செய்திகள் வெளியிட்டதில் முன்னணி வகித்தது.
2004 ஆம் ஆண்டு கிழக்கு பிளவு நடந்த போது ஜனநாயக பாதைக்கு திரும்பிய 210கிழக்கு போராளிகள் படுகொலை செய்யப்படவும் அவர்களில் பல பெண் போராளிகள் மானபங்க படுத்தப்பட்டு நிர்வாணமாகாகப்பட்டு கொன்று வீச படவும் காரணமாக இருந்த வெருகல் படுகொலை நிகழ்ந்தபோது "கத்தியின்றி இரத்தமின்றி தேசிய தலைவர் கிழக்கை மீட்டார்" என்று பிணவாடைகளின் மீது வெற்றி களிப்பை கொண்டாடி செய்தி வெளியிட்டது.

மட்டக்களப்பின் தமிழ் புத்திஜீவிகளான சத்தியமூர்த்தியும்  கிங்ஸ்லி இராசநாயகமும் தில்லை நாதனும் கொன்று வீசப்படும் போது துரோகிகள் ஒழிந்தார்கள் என்று சங்கநாதம் எழுப்பியது இந்த லங்கா சிறிதான் அகோர சுனாமிக்கு நிகராக படுகொலைகளை உருவாக்குவதில் முன்னணி வகித்ததமிழ் இணையத்தளங்களில் முதன்மையானதாகும்.இது இப்போது முதன் முறையாக மட்டகளப்பில் அலுவலகத்தை முதன் முறையாக திறந்துள்ளது. இத்தோடு ஐயகோ  அழிந்தது எஞ்சிக்கிடக்கும் தமிழினமும். 
»»  (மேலும்)

| |

நல்லாட்சியிலும் சிங்கள மொழியில் தேசிய கீதம் -தமிழ் மக்கள் கவலை

Résultat de recherche d'images pour "சம்பந்தர்"தேசிய கடற்கரை சுத்திகரிப்பு தினத்தினை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்ற பிரதான நிகழ்வின்போது சிங்கள மொழியில் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 


இலங்கையில் அரச மொழியாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் பேசும் மக்கள் பகுதி வாழும் பகுதியில் சிங்கள மொழியில் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தமிழ் பகுதிகளில் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்ற பணிப்புகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் தமிழ் மொழியிலும் இசைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.

நல்லாட்சி நிலவும் இந்தக்காலப்பகுதியிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் தமிழிழ் தேசிய கீதங்களை அரச நிகழ்வுகளில் ஒளிபரப்ப தேவையான நடவடிக்கையினை உரிய தரப்பினர் மேற்கொள்ளவேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

»»  (மேலும்)

9/22/2015

| |

மலையக மக்கள் பிரச்சினை பற்றி ஐ.நா சபையில் உரையாற்றும் திலகர் எம்பி

ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடருடன் இணைந்த மாநாட்டில் பங்கு கொள்ளும் நோக்கமாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமுமான எம்.திலகராஜ் நியூயோர்க் சென்றுள்ளார். 

´புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளாக இருந்த சர்வதேச அபிவிருத்தி சார்ந்த நடைமுறைகளை மேலும் விரிவுபடுத்தி நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளாக´ திட்டமிடும் மாநாட்டில் இலங்கையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக கலந்து கொள்ளும் எம்.திலகராஜ் ´நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை´ நிர்ணயம் செய்யும் போது இலங்கை, குறிப்பாக மலையக மக்கள் சார்ந்து எவ்வாறான இலக்குகள் அடையப்படல் வேண்டும் என்பது தொடர்பாக 22ம் திகதி நடைபெறும் மாநாட்டில் உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட தென்னாசிய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், சிவில் சிவில் சமூக பிரதிநிதிகளும், ஐ.நா வதிவிடப்பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.

செப்டெம்பர் 28ம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் பல்வேறு அமர்வுகளிலும் கலந்துகொண்டு மலையக மக்கள் தொடர்பில் பரப்புரை செய்வதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
»»  (மேலும்)

| |

டென்மார்க் மேற்குபிராந்திய உயர் நீதிமன்ற ஜுரர் சபைக்கு இலங்கைத் தமிழர் நியமனம்

டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நற்பெயருக்கு மகுடம் சூட்டும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத் தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரி க்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ் கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல் தடவையாகும். சுமார் 31 ஆண்டுகளாக் டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து வரும் திரு. தர்மாதர்மகுலசிங்கம் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்ற ஜுரர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
மெடன்மார்க் நாட்டின் அரசியல், சமுதாயம், கலை, இலக்கியம், மனித உரிமைகள் என்று பல்துறைகளிலும் கால்பதித்து அந்நாட்டு புலம்பெயர்ந்தோர் வரலாற்றில் பல காத்திரமான சாதனைகளை படைத்துள்ளார். அது மாத்திரமன்றி, டென்மார்க் சோஷிலிச ஐனநாயகக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் செயற்படு கின்றார்.
முற்போக்கு சிந்தனைமிகு இலக்கிய வாதியாகவும், எழுத்தாளராகவும் விளங்கும் திரு. தர்மா தர்மகுலசிங்கம் டேனிஸ் மொழியில் வெளியான கோ. சி. ஆனர்சன் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கம் செய்துள்ளார். இவ் நூலுக்கு 1997ஆம் ஆண்டிற்கான இலங்கை சாகித்திய விருது கிடைக்கப்பெற்றதே புலம் பெயர் இலக்கியத்தின் சிறப்புமிகு வரலாறாகும்.
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் எஸ். பொவின் படைப்புக்களை டென்மார் க்கில் அறிமுகம் செய்து வைத்த பெருமையும் திரு தர்மகுலசிங்கத்தை சாரும். இவரோடு இணைந்து பணியாற்றியதில் காலஞ்சென்ற டென்மார்க் கவிஞர் எம். சி. லோகநாதனுக்கும் முக்கிய பங்குண்டு.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற கால கட்டத்தில் டென்மார்க், வயன் நகர கலை, இலக்கிய மன்றத்தின் சமாதானத்தூதுக்குழு திரு தர்மா தர்மகுலசிங்கம் தலைமையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது. இத்தூதுக்குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய தலைவர் களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.
நீதித்துறையில் நீண்ட கால அனுபவமுள்ள திரு தர்மா தர்மகுலசிங்கம் டென்மார்க் நாட்டின் புலம் பெயர் தமிழர்கள் நீதியை நிலை நாட்டுவதில் முன்னின்று உழைக்கின்றார்கள். என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார் என்பதில் இலங்கையர்களாகிய நாமும் பெருமைப்படு கின்றோம்.
»»  (மேலும்)

| |

கிழக்கு முதலமைச்சரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளைக் கண்டித்து முறைப்பாடு

அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்புக்கள் கிடைப்பதில்லை. இதுதொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்ற போது அந்தந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு என்னைப்போன்ற ஏனைய ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களை அழைக்க வேண்டாமென முதலமைச்சர் உத்தரவிடுவதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வாறான முதலமைச்சரின் செயற்பாடுகளை தான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

9/21/2015

| |

சிறப்பு முகாம் நூல் வெளியீடு

சிறப்பு முகாம் நூல் வெளியீடு 
»»  (மேலும்)

| |

"சரியான நிலைப்பாடு"; சம்பந்தன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார  அமைச்சர் மங்கள சமர வீர முன்வைத்திருக்கும் யோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிவில் சமூகமும் பாராட்டியுள்ளன.  ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய  அமைச்சர் மங்கள சமரவீர, புதிய அரசியலமைப்பை உள்ளீர்த்துக் கொள்வது தொடர்பாகவும் உண்மை ஆணைக்குழுவை அமைப்பது பற்றியும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஏனைய விடயங்கள் குறித்தும் யோசனைகளைத்  தெரிவித்திருந்தார்.   ”முன்னைய ஆட்சியாளர்களிலும் பார்க்க இந்த விவகாரத்தில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு வேறுபட்டதாக இருக்கின்றது. சரியான நிலைப்பாட்டை அரசாங்கம் உள்ளீர்த்திருக்கின்றது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் "இந்து' பத்திரிகைக்கு தெரிவித்திருக்கிறார்.  - 
»»  (மேலும்)

| |

இலங்கையில் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் தொடர்கின்றன; ஐ.நா. நிபுணர் சூகா கூறுகிறார்

Résultat de recherche d'images pour "இலங்கை"இலங்கையில்  ஜனநாயக அரசாங்கம் ஆட்சியிலிருக்கும் நிலையிலும் போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒடுக்குமுறை கட்டமைப்புகளை அழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படாத காரணத்தினாலேயே இந்நிலைமை மீண்டும் அங்கு தொடர்வதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின்  இலங்கை மீதான நிபுணர்கள் குழுவின் முன்னாள் உறுப்பினரும் தென்னாபிரிக்காவின் பிரபல சட்டத்தரணியுமான ஜஸ்மின் சூகா  நேற்று முன்தினம் ஜெனீவாவில் கூறியுள்ளார்.  
»»  (மேலும்)

| |

அடுத்த வருடம் முதல் மரண தண்டனை அமுல்; ஜனாதிபதி மைத்திரி

பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தில் இணக்கப்பாடு ஏற்படுமாயிருந்தால்  அடுத்த வருடம் முதல் அதனை  நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை காலி நகரசபை மைதானத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இந்த நிகழ்வில் உரையாற்றும் போது மேலும் தெரிவித்துள்ளதாவது, “சேஷா என்ற சிறுமியின் கொலை உள்ளடங்கலாக கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுகள் மற்றும்  சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். எனினும் மரண தண்டனை தொடர்பாக மனித உரிமைகள் தொடர்பாக பேசும் சர்வதேச அமைப்புகள் இதில் குறுக்கிடுகின்றன. ஆனால் உலகில் பிரபல நாடுகளில் குறிப்பாக சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மரண தண்டனை இன்றும் செயற்படுத்தப்படுகின்றது. இதனால்  இதனை நான் நிராகரிக்கப்போவதில்லை. நாட்டின் ஒழுக்கம் மற்றும் ஜனநாயகத்தை மதிப்பவர் என்ற வகையில் இது தொடர்பாக நான் அவதானம் செலுத்தியுள்ளேன்.  இதன்படி,  இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் சகல உறுப்பினர்களினதும் நிலைப்பாடு என்ன என்பதனை அறிய எண்ணுகின்றேன். யோசனை கொண்டு வரப்பட வேண்டும் என்று அவசியமில்லை. ஆனாலும் பாராளுமன்றத்தின் விருப்பத்தை அறிய எதிர்பார்க்கின்றேன்.  இதற்கு பாராளுமன்றத்தில் இணக்கப்பாடு எட்டப்படுமாயிருந்தால் அடுத்த வருடம் முதல் மரண தண்டனையை  அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

உணவு ஒவ்வாமையால் 25 மாணவர்கள் பாதிப்பு

மட்டக்களப்பு தாழங்குடா தேசிய  கல்வி கல்;லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 25 பேர் உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீனமுற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் நேற்றிரவு(19.9.2015) 8 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் நேற்று முன்தினமிரவு(வெள்ளிக்கிழமை இரவு) உணவை உட்கொண்டுள்ளனர் அதன் பின்னரே இவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம், தலைசுற்று,வயிற்றோட்டம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டே இம்மாணவர்கள் வைத்தியசாலைக்கு வந்துள்ளதாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். 21 பெண் ஆசிரியமாணவிகளும், 4 ஆண் ஆசிரிய மணவர்களுமே இவ்வாறு திடீர் சுகயீனமுற்றுள்ளனர். இந்த மாணவர்கள் நேற்று சனிக்கிழமை காலையிலேயே திடீர் சுகயீனமுற்ற போதிலும் அம்மாணவர்கள் நேற்றிரவு 8மணிக்குப்பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இம்மாணவர்கள் உட்கொண்ட உணவு ஒவ்வாமையினால் இவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதா என்பது தொடர்பாகவும் விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அங்கு அம்மாணவர்கள் உட் கொண்ட உணவுமாதிரியை பரிசோதனை செய்வதற்கு அவர்கள் உட் கொண்ட உணவு எதுவுமில்லையெனவும் அவர்கள் அருந்திய குடிநீரை பரிசோதனை செய்யவுள்ளதாகவும் குடிநீரின் மாதிரியை பொறளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பவுள்ளதாகவும் ஆரையம்பதி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.பசீர் தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
»»  (மேலும்)

9/19/2015

| |

பிள்ளையானும் டக்ளசும் எடுத்தால் எலும்புத்துண்டு நாங்கள் எடுத்தால் இறைச்சித்துண்டு- தமிழ் தேசிய கூட்டமைப்பு

அமைச்சரவைக்கு இணையான மாவட்ட அமைச்சர் பதவி! பெயர் விபரங்கள் வெளியீடு


புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு மேலதிகமாக நியமிக்கப்படும் மாவட்ட அமைச்சர் தொடர்பில் பெயர் விபரங்கள் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.
அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சிக்கு 11 மாவட்ட அமைச்சு பதவிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 08 பதவிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மூன்று பதவிகளும் கிடைக்கவுள்ளன.

பதவிகளை பெற்றுகொள்ளும் மாவட்ட அமைச்சர்களின் பெயர் விபரங்கள்,

அனுராதபுரம் - எஸ்.எம். சந்தசேன 
குருநாகல் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 
கொழும்பு - எஸ்.எம்.மரிக்கார் 
கம்பஹா - அஜித் மான்னப்பெரும 
கண்டி - மயந்த திஸாநாயக்க 
பொலன்னறுவை - நாலக கொலொன்னே 
அம்பாந்தோட்டை - நாமல் ராஜபக்ஷ 
திருகோணமலை - இம்ரான் மஹரூப் 
மொனராகலை - உதயஷாந்த குணசேகர 
மாத்தளை - ரஜித் அலுவிஹாரே 
பதுளை - வடிவேல் சுரேஷ் 
மாத்தறை - மஹிந்த யாப்பா 
காலி - ரமேஷ் பத்திரண 
யாழ்ப்பாணம் - எஸ்.ஸ்ரீதரன் 
புத்தளம் - ஹெக்டர் அப்புஹாமி 
நுவரெலியா - திலகராஜா மையில்வாகனம் 
திகாமடுல்லை - பைஸல் காஸிம் 
மட்டக்களப்பு - ஞானமுத்து ஸ்ரீனேசன் 
கேகாலை - துசிதா விஜேமான்ன 
இரத்தினபுரி - பவித்ரா வண்ணயாராச்சி 
களுத்துறை - பாலித்த தெவரப்பெரும 
வன்னி - சார்ல்ஸ் நிர்மலனாதன்
»»  (மேலும்)

9/18/2015

| |

உடனடி மறுசீரமைப்புக்கான 20 யோசனைத் திட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ளது

உடனடி மறுசீரமைப்புக்கான 20 யோசனைத் திட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ளதுநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முழுமையாக நீக்குதல் உள்ளிட்ட உடனடி மறுசீரமைப்புக்கான 20 விடயங்கள் உள்ளடங்கிய யோசனைத் திட்டமொன்றை மக்கள் விடுதலை முன்னணி இன்று முன்வைத்தது.
இதன்போது, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, தொழில்சார் நிபுணர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.
கட்சி தாவுகின்றவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகும் வகையிலான சட்ட மறுசீரமைப்பு இந்த யோசனைத் திட்டத்தில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ளது.
அத்துடன், அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் முன்மொழியப்பட்டுள்ளதுடன், அந்த எண்ணிக்கைகளை அதிகரிப்பதற்கான 19
ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் காணப்படுகின்ற வழிவகைகளை நீக்குதல் மக்கள் விடுதலை முன்னணியின் மூன்றாவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு யோசனையாகும்.
பலவித அரசியல் கலாசார பிரதிநிதித்துவத்திற்கு இடமளிக்கும் வகையிலான புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தல், தகவலறியும் சட்டம், தேசிய கணக்காய்வு சட்டம் போன்ற சட்டங்களை நிறைவேற்றுதல் தொடர்பிலும் முன்னணியின் யோசனைத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

| |

உள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்: மங்கள

உள்ளக விசாரணைகள் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை ஒன்றரை ஆண்டு காலப்பகுதிக்குள் விசாரணைகள் பூர்த்தியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

»»  (மேலும்)

9/16/2015

| |

உதயன் பத்திரிகை அவதூறு வழக்கில் தண்டம் கட்டியது

உதயன் பத்திரிகை உரிமையாளர், பிரதம ஆசிரியருக்கு எதிராக வழக்கு செலவு உத்தரவு !
16.09.2015 - புதன்கிழமை
உதயன் பத்திரிகைக்கு எதிராக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தொடுத்திருந்த அவதூறு வழக்கு நேற்று தொடர் விசாரணைக்கு வந்திருந்தபோதே மேற்படி உத்தரவை யாழ் மாவட்ட நீதிபதி திரு கஜநிதிபாலன் விடுத்திருந்தார்.
மேற்படி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது உதயன் பத்திரிகையை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி சுமந்திரன் வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் வழக்கைத் தவணையிடுமாறு உதயன் பத்திரிகை சார்பாக மன்றில் தோன்றியிருந்த சட்டத்தரணி துளசி தர்மகுலசிங்கம் விண்ணப்பித்திருந்தார்.
இந் நிலையில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன் மேற்படி விண்ணப்பம் காரணமாக தனது கட்சிக்காரருக்கு ஏற்பட்ட வழக்குச் செலவை உதயன் பத்திரிகை உரிமையாளரும், பிரதம ஆசிரியரும் வழங்கவேண்டும் என கோரியபோது அதனை ஏற்றுக்கொண்ட மன்று நேற்றைய வழக்குச் செலவாக ரூபா பதினைந்தாயிரத்தை ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்குமாறு கட்டளையிட்டு வழக்கை வரும் மார்கழி மாதத்திற்கு தவணையிட்டிருந்தார்.
»»  (மேலும்)

| |

எம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்த தினம்

அஷ்ரஃபைக் கண்டேன்!
1969களின் நடுப்பகுதி, அக்கரைப்பற்று பீச் ரோட்டில் எனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த நாட்கள். எனக்கு அண்மையில் மர்ஹூம் அ.ச. அப்துஸ்ஸமதும் வாழ்ந்து கொண்டிருந்தார். மாலைப்பொழுது, பெரும் மகிழ்ச்சியாகக் கழிந்த நாள்கள்.
அப்படியொரு நாளில்தான், அருமை நண்பர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களைச் சந்திக்கிறேன். எனது உறவு முறை ராத்தாவின் வீட்டில் சாப்பு அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, மருமகன் யஹ்யா (தற்பொழுது ஆசிரியராக இருக்கிறார்), "மாமா! உங்களைத் தேடி யாரோ வந்திருக்கிறார்கள்". வெளியில் வந்து பார்க்கிறேன். மூன்று இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒருவர் சிராஜ் மஷ்ஹூருடைய தகப்பனார் மசூத் மௌலவி அவர்கள். மற்றவர் சித்தீக் எனும் நண்பர். இன்னுமொருவர் அந்த நாட்களில் சின்னப்பள்ளிவாயல் முஅத்தினாராக இருந்தவரின் மகன். இவர்களுடன் அபூ தாஹிரும் வந்த ஞாபகம் எனக்குண்டு.
அஷ்ரஃப் ரொம்ப அழகான இளைஞனாகத் தோற்றம் தந்தார். என்னைக் கண்டதும், "காக்கா! நான்தான் எம்.எச்.எம். அஷ்ரஃப். அவ்வப்போது கவிதைகள் எழுதுவேன். உங்களிடம் இந்த நூல்களைக் கொடுத்து விடுமாறு எனது தமிழாசிரியர் சண்முகம் சிவலிங்கம் தந்தார்".
அவர் கதைத்து முடிவதற்கு முதல், "போன வாரம் வீரகேசரியில் மூதூர் இக்பால் சனசமூக நிலையம் நடத்திய கவிதைப் போட்டியில் உங்களுக்குத் தங்கப் பதக்கம் கிடைத்த கவிதையைப் படித்தேன். நல்ல கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்" என்று அவரை உற்சாகப்படுத்துகிறேன்.
மீண்டும் நான், இப்பொழுது என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறேன். "ஏ.எல். பரீட்சை எழுதிவிட்டேன். முடிவைப் பொறுத்து சட்டக் கல்லூரிக்குச் செல்லும் எண்ணமுண்டு" என்கிறார்.
அத்தோடு எங்கள் பேச்சு முடிவுக்கு வருகிறது. அனைவரும் அக்கரைப்பற்று பசாருக்குச் சென்று பிளேன்டீ குடித்து விட்டு, அஷ்ரஃப் அவர்களை கல்முனை பஸ்ஸில் ஏற்றி விட்டு நான் தங்கும் அறைக்கு வருகிறேன்.
அன்று, அவருடைய மாணவப் பருவத்தில் தொடங்கிய நட்பு, இந்த நாட்டு முஸ்லிம்களின் உன்னத தலைவனான அந்தஸ்தை எட்டும் வரையிலும் தொடர்ந்து வந்தது. அவரைப் பற்றி எழுதவும் பேசவும் விமர்சிக்கவும் நிறைய விஷயங்கள் உண்டு.
இன்று அவருடைய ஞாபகார்த்த தினம். அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய, நமது பிரார்த்தனைகளில் அவரையும் இணைத்துக் கொள்வோம் நண்பர்களே!
நன்றி -முகனூல் *எஸ்.எல்.எம்.ஹனிபா  

»»  (மேலும்)

| |

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க பதவியேற்பு

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க பதவியேற்புஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சமித் தசநாயக்க இன்று (15) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் .
ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹரின் பெர்னான்டோ கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார் .
இதனையடுத்து நிலவிய மாகாண சபை முதலமைச்சர் பதவி வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
»»  (மேலும்)

9/15/2015

| |

பிரமிள் பிறந்த திருகோணமலை மண்ணில் மகுடம் (பிரமிள்சிறப்பிதழ்)அறிமுகவிழா

Résultat de recherche d'images pour "பிரமிள்"


பிரமிள் பிறந்த திருகோணமலை மண்ணில்
மகுடம் (பிரமிள்சிறப்பிதழ்)அறிமுகவிழா
-----------------------------------------------------------------------------
நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டம் நடாத்தும்
மகுடம் (பிரமிள்சிறப்பிதழ்)அறிமுகவிழா 20- 09-2015 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் பின்புறம் உட் துறைமுக வீதியில் அமைந்துள்ள Jesuits Academy மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நீங்களும் எழுதலாம் ஆசிரியர் திரு. எஸ். ஆர். தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் பிரபல சிரேஷ்ட சட்டத்தரணி ஆ. ஜெகசோதி பிரதம அதிதியாக கலந்து கொள்ள எழுத்தாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான திருமலை நவம் விமர்சனவுரை ஆற்றுகிறார்.
( அனைவரையுஅன்புடன் அழைக்கும் அழைப்பிதழ் இதோ....)



»»  (மேலும்)

| |

சிறுமியின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட வேண்டாம்

Résultat de recherche d'images pour "சிறுமி பாலியல்"கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) அறிவித்துள்ளது.
கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை (12) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த சிறுமியின் உடைகள் கலைந்த நிலையில் வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்திலிருந்தே மீட்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் நடந்த வேளை, வீட்டில் சிறுமியின் பெற்றோர், சகோதரன், தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் இருந்த நிலையில் வீட்டின் ஜன்னலின் ஊடாக சிறுமி கடத்திச்செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார், சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், பிரேதபரிசோதனைகளிலிருந்து சிறுமி பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு, கழுத்துநெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி பிறந்த குறித்த சிறுமியின் 5ஆவது பிறந்த தினம், நாளை என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.tamilmirror.lk/154186#sthash.tJDeT9LX.dpuf
»»  (மேலும்)