8/17/2015

| |

ஆதிவாசிகள் தலைவரும் வாக்களித்தார்

நாடாளுமன்ற தேர்தல் 2015  வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை தொகுதியில் 76 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ, காலை 10 மணியளவில் தம்பான கனிஷ்ட வித்தியாலயத்தில் தனது வாக்கினை அளித்தார். அவருடன் அவரது மனைவி மற்றும் குழுவினர் சமூகமளித்து  வாக்களித்தனர்.