நாளைய தேர்தல் முடிவின் பின் எம் மக்கள் யாழ் மேலாதிக்கத்திற்கு அடிபணியாதவர்கள் என்பதனையும். எமது மண்ணிற்க்கு என்று ஒரு தலைமை உருவாகியுள்ளது என்பதனையும் இந்த உலகிற்கு பறைசாற்றவுள்ளனர்.
காலம் காலமாக அரசியல் அநாதைகளாக கிடந்த ஒரு சமூகம் தமக்கான அரசியல் தலைமையினையும், அதற்கான அங்கீகாரத்தையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனிடம் ஒப்படைக்கவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களநிலவரப்படி கிட்டத்தட்ட 29,000 ஆயிரம் விருப்பு வாக்குகளை சி.சந்திரகாந்தன் பெறுவார் என்பது ஊர்ஜீதமாகவுள்ளபோதும் தமிழர்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கும் பட்சத்தில் இவ் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் சந்திரகாந்தனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும் கூட பிள்ளையானை அரசியலிலிருந்து ஓரம்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டி அலையும் ஒரு கூட்டம் தாங்கள் 4 ஆசனங்களைப் பெறுவோம் என்று மார்தட்டி சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள்.
இத் தேர்தலில் மட்டக்களப்பான் மடையன் என்று கூறும் யாழ்மேலாதிக்கவாதிகளுக்கு நாம் கூறப்போகும் செய்தியானது வீரம் விளைநிலத்தில் விளைந்த விருட்சங்கள் நாங்கள் என்பதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூத்தாடிகளின் வாய்ச் சவாடல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை எமது மாவட்டத்திலிருந்து துரத்தியடிப்போம்.