திருகோணமலை மாவட்டத்தின் தமிழருக்கு கிடைக்கக் கூடிய ஒரு பிரதிநிதித்துவத்தினை பாதுகாக்கும் தூர நோக்குடனே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி திருமலையில தேர்தலில் பங்கு பற்றுவதில்லை என்ற முடிவினை மேற்கொண்டது என்று திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பாளர் திரு கு நளினகாந்தன் தெரிவித்துள்ளார் 2015 பாராளுமன்றத் தேர்தலில் மேற்படி கட்சி பங்கு பற்றாமைக்கான காரணம் பற்றி கட்சி தொண்டர்கள் ஆதரவாளர்களிடையே விளக்கமளிக்கையில் மேற் கண்டவாறு குறிப்பிட்ட அவர் கட்சியின் தலைமை சாணக்கிய மான முறையில் முடிவுகளை மேற்கொண்டு உள்ளதாலேயே நான்கு பிரதி நிதித்துவம் பெறக்கூடிய மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டி இட்டு ஒரு பிரதி நிதித்துவத்தை பெற தீர்மானித்து உள்ளது.மேலும் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நம்பிக்கை நட்சத்திரமான ஐனாதிபதி மைத்திரிபால அவர்களின் தலைமையிலான வெற்றிலை சின்னத்தில் நிபந்தனையுடன் தேர்தலில் பங்கு பற்றுவதால் ஒரு பிரதிநிதித்துவ வாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமையினது தந்திரோபாய நகர்வு என்றும் கூறிய அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் சின்னத்தை கவனத்தில் கொள்ளாது வேட்பாளரை கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும். அந்தவகையில் மாவட்டத்தில் அதிக வேலை வாய்ப்புகளையும் அபிவிருத்திளையும் மேற்கொண்ட கிழக்கி;ன் முதல் முதலமைச்சரும் வேட்;பாளரும் ஆன திரு சந்திரகாந்தன் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்வதன் மூலம் கிழக்கில் தமிழர்கள் உரிமை அபிவிருத்தியென்ற சமாந்தரப்பாதையில் பயணம் செய்ய வழிவகுக்கும் என்று கூறினார்.