எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு இரகசியப் பொலிஸாரினால் விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் இரகசிய பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு என்று வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.