வேட்பாளர்களுக்கான அனைத்து விருப்பு இலக்கங்களையும் நாளை (வியாழக்கிழமை) 12 மணிக்கு முன்னர் வெளியிட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணையாளர், தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.