நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாண சபை மூலம் அவசர அவசரமாக வழங்கப்படும் இன் நியமனங்களில் மாவட்ட வீதாசாரமோ,இன வீதாசாரமோ பேணப்படாது பல ஊழல்களுடன் இன் நியமனங்கள் வெளிப்பாட்டுத் தன்மை அற்ற நிலையில் வழங்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இதனால் அனேகமான தகுதி மிக்க அப்பாவி தமிழ் இளைஞர்கள்,யுவதிகள் பாதிக்கப்படுகின்றார்கள்.எனவே தேர்தலுக்கான தயார் படுத்தல் காலங்களில் மேற்படி செயற்பாடு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இன் நடவடிக்கையானது தேர்தலுக்கான அரசியல் தொழில் இலஞ்சமாகவே இதனை மக்கள் கருதி எம்மிடம் முறையிடுகின்றனர். ஆகவே தாங்கள் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிட்டிருந்தார்
தேர்தல் கால தொழில் இலஞ்சமாகவும் தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவும் வழங்கப்பட்டு வரும் இவ்வாறான அரச நியமனங்கள் தேர்தல் சட்ட திட்டங்களுக்கு முரணானது எனச் சுட்டிக்காட்டிய பொதுச் செயலாளர் கிழக்கு மாகாண சபை வேலைவாய்ப்பிலும்,நிதி ஒதுக்கீட்டிலும் தமிழர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்ப்பதுடன் கிழக்கு மகாண சபை ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு,மாகாண சபை உறுப்பினர்கள்,அமைச்சர்களையும் இலகுவில் ஏற்பதற்காக ஒரு சில சலுகைகளைச் செய்து விட்டு உள்ளதையும்,உரியதையும் தங்களது சமூகத்திற்கு கொடுப்பது இனச் சமத்துவத்தினை சீர்குலைக்கும் செயலாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.