வடமாகாணசபை தேர்தல் அன்று அதிகாலையில் போலி உதயன் பத்திரிகை வெளியாகியிருந்தது. அதில், அனந்தி சசிதரன் மகிந்தவுடன் இணைந்துவிட்டார், யாரும் அவருக்கு வாக்களிக்க வேண்டாமென மாவை சேனாதிராசா அறிவித்ததாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-இந்த பத்திரிகையை அரசசார்பு குழுக்கள் அச்சிட்டு வெளியிட்டதாக கருதப்பட்டு வந்த நிலையில், அதனை நிராகரித்து, அந்த பத்திரிகையை உதயன் பத்திரிகையே வெளியிட்டதாக அனந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
‘உதயன் பத்திரிகையின் சின்னம், அவர்கள் பாவிக்கும் அதே எழுத்துருதான் பாவிக்கப்பட்டுள்ளது. அதனை உதயன் பத்திரிகையினர்தான் அச்சிட்டனர். எனது வெற்றியை சீர்குலைப்பதை நோக்கமாக கொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில் நீதிமன்றத்தை நாடும் சூழ்நிலையில் நான் இருக்கவில்லை’ என்றார்.