7/21/2015

| |

அரியநேத்திரனின் ஆதரவாளர் மீது ஜனா ஆயுதமுனையில் அச்சுறுத்தல்.

Résultat de recherche d'images pour "அரியநேத்திர"தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களிடையே யார் வெற்றி பெறுவது என்கின்ற போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழ்
தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கடம்சிகளுக்குள்ளே குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிக்குள்ளே வேட்பாளர்களுக்குள்ளே நாளுக்கு நாள் முறுகல்நிலை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் அரியநேந்திரனுக்கும் ஜனாவுக்குமிடையிலான முறுகல்நிலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அவர்கள் இருவரினதும் ஆதரவாளர்களின் முறுகல்களும் அதிகரித்துள்ளன.

அரியநேந்திரன் அவர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசடித்தீவு பாடசாலை ஒன்றின் அதிபரின்; வீட்டிற்கு சென்ற ஜனா அவர்களும் அவரின் சகாக்களும் அரியநேந்திரன் அவர்களுடன் வேலை செய்யவேண்டாம் எனவும் அதையும் மீறி வேலை செய்தால் தான் பழைய ஜனாவாக மாறவேண்டிவரும் என்று ஆயுதத்தைக் காட்டி மிரட்டிச் சென்றிருக்கின்றனர்.