7/07/2015

| |

இன்று வெறும் ஆறு மாதங்கள் கழிந்த பின்னால் எல்லாமே வெட்கம் கெட்ட விதமாக மாறியுள்ளது

ஸ்ரீலங்கா இந்தியாவுக்கான ஒரு அச்சுறுத்தலை ஒருபோதும் முன்வைக்காது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ
ரெடிப் டாட் கொம் (Rediff.com)முக்கு முன்னாள் ஜனாதிபதி வழங்கிய ஒரு நேர்காணல்
சீனாவுடனான ஸ்ரீலங்காவின் உறவு இந்தியாவுடன் அது பகிர்ந்து கொள்ளும்mahinda-72015உறவுக்கு ஒரு அச்சுறுத்தலாக ஒருபோதும் இருக்காது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சொல்லியுள்ளார்.
ரெடிப் டாட் கொம்முக்கு முன்னாள் ஜனாதிபதி வழங்கிய ஒரு நேர்காணலில், நாடு இந்தியா, மற்றும் சீனாவுடன் நல்லுறவைப் பேணவேண்டியது அவசியம் என்று சொன்னார். “ஸ்ரீலங்கா இந்தியாவுக்கு எதிரான ஒரு அச்சுறுத்தலை ஒருபோதும் மேற்கொள்ளாது, மற்றும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக வருவதற்கு மற்றொரு நாட்டுக்கு உதவுவதால் நாங்கள் எந்த இலாபத்தையும் அடையப்போவதில்லை” என்றும் அவர் தெரிவித்தார்
நேர்காணல் பற்றிய முழு விபரத்தையும் கீழே காண்க:
ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் இந்த வருட ஆரம்பத்தில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஸ, வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் மற்றும் அவர் பிரதம மந்திரியாக வருவதற்கும் வாய்ப்பு உண்டு. இதுபற்றி ரெடிப் டாட் கொம் Rediff.com பங்களிப்பாளரான          நித்தின் ஏ கோகுலவுடன் அவர் பிரத்தியேகமாக பேசினார்.
  • நீங்கள்; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக இருப்பீர்களானால் வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள்தான் பிரதமர் வேட்பாளரா?
அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் கண்ணோட்டத்தில்தான் நான் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பு(யு.பி.எப்.ஏ)  அவர்களின் கட்சியின் கீழ் போட்டியிடுமாறு எனக்கு அழைப்பு விடுத்துள்ளது, அதனை நானும் யு.பி.எப்.ஏ யில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவினரும் ஏற்றுக் கொள்வதாக முடிவுசெய்துள்ளோம்.
1994 பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் பொதுசன ஐக்கிய முன்னணியின் கீழ் போட்டியிட்டோம். பத்து வருடங்கள் கழித்து 2004 பாராளுமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணியை நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (யு.பி.எப்.ஏ) என மீளமைத்துக் கொண்டோம். வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் புதிதாக ஒரு கூட்டணியை அமைக்க வேண்டுமா என விவாதிக்கப்பட்டு வந்தது, ஆனால் அதற்கு இப்போது அவசியமில்லை, யு.பி.எப்.ஏ சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்று எல்லோரும் முடிவு செய்து விட்டோம்.
எனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலந்தொட்டே நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசுவாசமான ஒரு அங்கத்தவன்.
  • நாட்டில் உங்களுக்கு உள்ள ஆதரவை நீங்கள் எப்படி கணிக்கிறீர்கள்?
இந்த வருடம் ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் எனக்கான ஆதரவுத் தளம் எவ்வாறு கட்டியமைக்கப்பட்டுள்ளது என்பது கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒரு அரசியல் நிகழ்வு ஆகும். நான் சமூகமளிக்கும்; அல்லது என் சார்பாக நடத்தப்படும் எந்த நிகழ்வுக்கும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு கூட்டம் சேர்ந்தது.
அரசாங்கத்திற்கு; அனைத்து மட்டத்திலுமுள்ள அரசியல்வாதிகளில் பெருந்தொகையானோர் என்னை ஆதரிக்கிறார்கள் மற்றும் அவர்கள் தங்கள் சொந்த மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளார்கள், மற்றும் அனைத்து மக்களும் என்னுடன் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். பல வழிகளிலும் இந்த ஆதரவு நான் ஜனாதிபதி தேர்தல்களில் வென்ற 2005 மற்றும் 2010 ல் கிடைத்ததை விட மிகவும் அதிகம் என்பது வெளிப்படை.
  • ஜனாதிபதி சிறிசேனவுடனான உங்கள் உறவு எப்படியுள்ளது? அவருடனான உங்கள் வேறுபாடுகளை நீங்கள் சீர் செய்து விட்டீர்களா?
உண்மை என்னவென்றால் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவதால் அவர்கள் எதிரிகளாகத்தான் இருக்கவேண்டும் என்று அர்த்தமில்லை. 2005ல் நான் ரணில் விக்கிரமசிங்காவை எதிர்த்து போட்டியிட்டேன் மற்றும் நான் வெற்றி பெற்றேன். ஆனால் திரு.விக்கிரமசிங்காவை எனது எதிரியாக நான் ஒருபோதும் கருதியதில்லை.
எதிர்க்கட்சியுடன் நான் எப்போதும் சுமுகமான உறவையே பேணி வந்தேன் அதனால்தான் அநேக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எனது அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்கள். ஜனாதிபதி சிறசேனவை பொறுத்தவரை நான் அவருடன் நல்ல உறவையே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும் மற்றும் பின்பும் பேணிவந்தேன்;.
நீங்கள் கருதும் வேறுவேறான வழிகள் அந்த நேரத்தில் அரசியலின் ஒரு பகுதி.  ஜனாதிபதி சிறிசேன மற்றும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களாக பல தசாப்தங்களாக இருந்துள்ளோம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒற்றுமையாக இருப்பதையே நாங்கள் இருவரும் விரும்புகிறோம்.
  • நீங்கள் வெற்றிபெற்று பிரதமராக வந்தால், நீங்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உங்களின் கீழ் ஒரு அமைச்சராக இருந்த ஒரு மனிதரின் கீழ் வேலை செய்வது உங்களுக்கு சங்கடமாக இருக்காதா?
அரசியலமைப்பின் 19வது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இருந்ததைப் போல அல்லாது இப்போது பிரதமரின் பதவி வித்தியாசமானது. பிரதமருக்கு செய்வதற்கு வரையறுக்கப் பட்ட சில குறிப்பிட்ட பங்கு உள்ளது. அந்தப் பதவி நிலையில் ஜனாதிபதி சிறிசேனவுடன் பணியாற்றுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
  • ஜனவரி முதல் இடம் பெறும் இந்த அரசாங்கத்தின் ஆறுமாத கால ஆட்சியை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
உண்மையில் கடந்த ஆறுமாத காலப் பகுதியை சுதந்திரத்துக்குப் பின்னான எங்கள் வரலாற்றில் பொருளாதார தோல்வியின் மிக மோசமான காலம் என்றே விளக்க வேண்டும். கடந்த காலங்களில் எங்களிடம் தோல்வியான மற்றும் பொறுப்பற்றதுமான பொருளாதார மேலாண்மை இருந்துள்ளது, அனால் இந்தளவுக்கு ஒருபோதும் இருந்ததில்லை.
அரசாங்க மாற்றத்துடன் சில அரசியல் பின்னடைவுகளை சரியாக்க முடியும் என்கிறபோதிலும், பொருளாதார வீழ்ச்சி திருத்துவதற்கு மிகவும் கடினமானது, ஏனெனில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அரசாங்கத்தால் மிகவும் மோசமாக சேதமாக்கப் பட்டுள்ளது.
தற்போதைய தொகுதி ஆட்சியாளர்களிடம் அரசாங்கத்தை நான் கையளித்தபோது, முழு ஆசியாவிலுமே வேகமான வளர்ச்சியை நாடு அனுபவித்து வந்தது, பணவீக்கம் ஆறு வருடங்களுக்கு மேலாக ஒரு ஒற்றை இலக்க வீச்சிலேயே இருந்தது. வட்டி விகிதங்கள் ஒரு நியாயமான குறைந்த மட்டமான ஒரு ஒற்றை இலக்க வீச்சில்  இருந்தது. நாணயமாற்று விகிதம் ஐந்து வருடங்களாக நிலையான வீதத்திலேயே இருந்தது. வெளிநாட்டு கையிருப்பு எப்போதையும் விட உயர்வாக 8.2 பில்லியன் டொலர்களாக இருந்தது.
2005ல் 92 விகிதமாக இருந்த தேசிய கடன் விகிதம் நான் பதவியேற்றுக் கொண்டதும் மிகவும் சமாளிக்கத் தக்க விதமாக 2014 ம் ஆண்டு முடிவில் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டு வந்த பிரமாண்டமான உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் இடம்பெற்று வந்த போதிலும் 75 விகிதமாக குறைக்கப் பட்டது. 2005ல் தலைக்கு 1,240 அமெரிக்க டொலர்களாக இருந்த தனிநபர் வருமானம் 20014ல் 3,650 அமெரிக்க டொலர்களாக மாற்றமடைந்தது. பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள்  ஆசியாவிலேயே சிறந்த பொருளாதார நடைமுறை எங்களிடம் இருப்பதை ஏற்றுக் கொண்டார்கள்.
ஆனால் இன்று வெறும் ஆறு மாதங்கள் கழிந்த பின்னால் எல்லாமே வெட்கம் கெட்ட விதமாக மாறியுள்ளது. பொருளாதாரம் மந்தமாகியுள்ளது, உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் நிறுத்தப் பட்டுள்ளன. வெளிநாட்டு கையிருப்பு  தீவிரமாக குறைந்துவிட்டது, வேலையில்லா திண்டாட்டம் உயர்வடைந்துள்ளது, உள்வரும் வருவாய் குறைவடைந்து அரசாங்க நிதி முற்றிலும் சரிவடைந்துள்ளது, மற்றும் அரசாங்க செலவினங்கள் கட்டுமீறிப் போகிறது, அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தீவிரமாக சரிவடைந்து வருகிறது.
இவை எல்லாவற்றையும் விட மேலாக வங்கி முறைமையின் தலைமை நிறுவனமான மத்திய வங்கி இதுவரை அரசாங்கத்துக்கு 55 பில்லியன் ருபாவுக்கும் மேலான இழப்பை ஏற்படுத்தியுள்ள நிதி மோசடி ஊழலில் சிக்கியுள்ளது.
வாழ்க்கையில் ஒருபோதும் நினைத்தப் பார்க்க முடியாத வகையில் இந்தளவு பாரிய பொருளாதார சீரழிவு இந்தளவு குறுகிய காலத்திற்குள் ஏற்பட்டுள்ளது.
  • வரப்போகும் தேர்தலில் உங்கள் அரசியல் அடிப்படையிலான பிரதான பிரச்சாரம் என்னவாக இருக்கும்?
எங்களுக்கு மூன்று பிரதான முன்னுரிமைகள் உள்ளன,  பொருளாதாரத்தை மீண்டும் பழைய பாதையில் அமைப்பது, ஐதேக அரசாங்கத்தால் நிறவப்பட்டுள்ள காவல்துறை அரச கருவியை கலைத்து ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது மற்றும் இந்த ஜனவரி முதல் எங்கள் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களைக் கையாள்வது.
  • உங்களுக்கு எதிராக பெருமளவில் வாக்களித்திருப்பதாக நம்பப்படும் சிறுபான்மையினரின் நம்பிக்கையை எவ்வாறு நீங்கள் திரும்பவும் வெற்றி கொள்வீர்கள்?
எனது அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களை எல்.ரீ.ரீ.ஈ இடமிருந்து பாதுகாத்தது. இப்போது அவர்கள் பிள்ளைகள் ஒரு பயங்கரவாத அமைப்பால் கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள், மற்றும் அவர்கள் ஒரு இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.
அநேக தமிழ் மக்கள் இதை உணர்ந்துள்ளார்கள் இதனால்தான் வடக்கில் நான் பெற்றுள்ள தமிழ் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி தேர்தல் 2010க்கும் மற்றும் 2015 க்கும் இடையில் இரட்டிப்பாகியுள்ளது.
ஆனால் கடந்த ஆறு தசாப்தங்களாகவோ அல்லது அதற்கு அதிகமான காலமாகவோ தமிழ் மக்கள் அவர்களது தலைவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறார்கள், அந்த தலைவர்கள் தனி நாடு என்கிற கானல் நீரைக் காட்டி வருகிறார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தங்களது இலட்சியத்துக்கு அருகில் நெருங்கி வருவதற்கு உதவக்கூடிய வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி தமிழ் மக்கள் கேட்கப்பட்டார்கள். என்னால் அதனுடன் போட்டியிட முடியாது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியும் என்றால் இந்த நாட்டில் உள்ள மற்ற ஒவ்வொருவருக்கும் உள்ள அதே வசதிகளையும் மற்றும் வாய்ப்புக்களையும் தமிழ் மக்களுக்கும் வழங்க முடியும் மற்றும் அந்த வகையில்; தமிழ் மக்களுக்கு அதற்கு மேலான எதையும் எந்த ஒரு தலைவரும் என்னைக் காட்டிலும் அதிகமாக கொடுக்க முன்வரமாட்டார்கள்.
எங்களது கட்சி முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகளை ஒன்றில் நேரடியாகவோ அல்லது எங்களுடன் கூட்டணி அமைக்கும் முஸ்லிம் அரசியற் கட்சிகளினூடாகவோ பெற்று வருகிறது. 2012 முதல் மேற்கத்தைய சக்திகள் பல்வேறு முஸ்லிம் எதிர்ப்பு தீவிரவாத குழுக்களை ஊக்குவித்து எங்கள் அரசாங்கம் நிலைநிறுத்திய சமாதானத்தை குழப்பி வருகிறது.
முஸ்லிம் அரசியற் கட்சிகள் இதுதான் தங்கள் வாக்குகளை அதிகரிப்பதற்கான அரியதோர் சந்தர்ப்பம் எனக் கண்டது மற்றும் எனது அரசாங்கம் இந்த தீவிரவாத குழுக்களுக்கு அனுசரணை வழங்குவதாக கதைகளைப் பரப்பியது. எங்களுக்கு எதிராக வாக்களித்த அநேக முஸ்லிம்கள்  எனது அரசாங்கத்துக்கு இந்த தீவிரவாத குழுக்களுடன் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதை இப்போது உணாந்திருப்பார்கள், மற்றும் உண்மையில் இந்த தீவிரவாதக் குழுக்கள் எனக்கு எதிரானவை.
  • எல்.ரீ.ரீ.ஈ யின்  வெளிப்படையான ஆதரவு வலைத்தளம் இன்னும் அப்படியேதான் உள்ளது என்கிற சமீபத்தைய அமெரிக்க அறிக்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
எல்.ரீ.ரீ,ஈ யின் யுத்த இயந்திரத்தை 2009ல் நாங்கள் தோற்கடித்தோம். ஆனால் மேற்கத்தைய நாடுகளை தளமாகக் கொண்ட அவர்களின் வெளிநாட்டு நிதி மற்றும் அரசியல் வலையமைப்புகள் தொடர்ந்தும்  செயற்பட்டே வருகின்றன. எல்.ரீ.ரீ.ஈ யின் எச்சங்கள் இந்த நிதியை பயன்படுத்தி மேற்கத்தைய தலைநகரங்களின் செல்வாக்கை வாங்க முயல்கின்றன இதன்மூலம் தங்கள் இலட்சியமான தனிநாட்டை அடையலாம் என்கிற எதிர்பார்ப்புடன்.
  • பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ஒரு நேரடி போட்டிக்கு வருமாறு உங்களுக்கு சவால் விடுத்துள்ளாரே அந்த சவாலை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
நிச்சயமாக. திரு.விக்கிரமசிங்கா 2005ல் எனக்கு எதிராகப் போட்டியிட்டார் மற்றும் அதன்பின் ஒருபோதும் என்னை தேர்தலில் எதிர்கொள்ளவில்லை. இந்த நேரத்தில் என்னை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு அவர் ஆளாகியுள்ளார், ஏனென்றால் போட்டியிலிருந்து தப்பிப்பதற்கு வேறு ஒரு வழியுமில்லை.
  • ஸ்ரீலங்காவில், இந்திய மற்றும் சீனா இடையேயான போட்டி, வரும் தேர்தலில் மீண்டும் ஒரு அரசியல் பிரச்சாரக் கருத்தாக மாறுமா?
1950ன் தொடக்கம் முதலே ஸ்ரீலங்கா சீனாவுடன் எப்போதும் ஒரு நெருங்கிய உறவினைக் கொண்டிருந்தது. சீனாவுடனான ஸ்ரீலங்காவின் உறவு தொடர்பாக  இந்தியாவின் கவலை ஒரு புதிய நிகழ்வு, ஆசியாவில் உயரும் உலகின் வல்லரசுகள் என்கிற நிலையில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான போட்டி ஏற்பட்டுள்ள சூழலில் அது இடம்பெற்று வருகிறது.
இந்தியா மற்றும் சீனாவுடன் நல்ல உறவை பேண வேண்டியது எங்களுக்கு அவசியம்.
இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக வருவதற்கு மற்றொரு நாட்டுக்கு உதவுவதால் நாங்கள் எந்த இலாபத்தையும் அடையப்போவதில்லை.
இந்த பின்னணியில் மறைந்த எங்கள் தலைவர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா, 1962ல் நடந்த சீன இந்திய யுத்தத்தின் போது சீனாவுக்கும் மற்றும் இந்தியாவுக்கும் இடையே  மத்தியஸ்தராக ஆற்றிய பங்களிப்பை நான் இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.
எனது அரசாங்கம் உள்நாட்டு பிரச்சினைகளை அதாவது பயங்கரவாதத்துக்கு எதிரான போர், மற்றும் அபிவிருத்தி என்பனவற்றையும் கூட உள்வாங்கி சர்வதேச விவாகாரங்களில் திருமதி. பண்டாரநாயக்காவை போன்ற ஒரு பாத்திரத்தில் செயல்படும். ஆனால் 1962ல் நடந்த சீன - இந்திய யுத்தத்தின் போது அவர் செயலாற்றிய பங்குக்கு இன்று மிகப் பெரிய சம்பந்தம் உள்ளது.
எழுச்சி பெறும் இந்த இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் நான் ஒரு பாலமாக இருப்பதற்கு என்னால் இயன்றதை செய்ய உத்தேசித்துள்ளேன்.