
இந்த எழுத்துப் பிரதியை கார்பன் டேட்டின் முறையில் பரிசோதித்தபோது அவை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெரியவருகிறது.
இந்தப் பிரதியை எழுதியவர் இறைதூதர் முகமதுவை கண்டும் கேட்டும் இருந்த ஒருவராக இருந்திருப்பார் என பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இராக்கில் பிறந்த சரித்திர ஆர்வலரான அல்ஃபோன்ஸ் மிங்கானா என்பவரால் 1920கள் காலகட்டத்தில் இந்த குரான் எழுத்துப் பிரதியின் பக்கங்கள் பர்மிங்ஹாமுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.