தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போட்டியிடும் அரசரெத்தினம் என்பவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதை காரணமாக வைத்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்மைப்பில் போட்டியிடும் கருணாகரன் ஜனாவின் குழுவினர் நள்ளிரவு அவரது வீட்டு புகுந்து கதவுகளை உடைத்து அவரையும் மனைவி பிள்ளைகளையும் தாக்கியதுடன் தகாதவார்த்தைகளால் அச்சுறுத்தி வண்ணானுக்கு பாராளுமன்றம் ஆசையா? என்று கூறி கையில் இருந்த வாளியாலும் தடியாலும் தாக்கி உனது சாதியின் வேலையை மாத்திரம் நீ பார் அரசியலில் உனக்கு என்ன வேலையடா? என்று கூறி அடாவடித்தனம் பண்ணியுள்ளர்கள்.
இவர்களது அடாவடித் தனத்தை அடக்க முற்பட்ட வேளை தப்பித்து சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் குண்டர்களில் ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிபட்டடு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிசாரின் மேலதிக விசாரணையின் போது மேலும் இருவர் கைதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.