7/17/2015

| |

யாழ்ப்பாணத்தில் காணப்படுவது ஊடக மாபீயாவே- வித்தியாதரன்-

Résultat de recherche d'images pour "வித்தியாதரன்"யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள பதவி சண்டைகளில் இதுவரை காலமும் "ஊடக மாபியா வேலை செய்து வந்த வித்தியாதரன்" இப்போது ஓர் உண்மையை சொல்லியுள்ளார்.அதாவது யாழ்ப்பாணத்தில் காணப்படுவதி ஊடக மாபியாத்தனம் என்று உதயன் பத்திரிகையை சுட்டி குற்றம் சாட்டியுள்ளார். இதைதொடர்ந்து உதயன் சரவணபவான் வித்தியாதரனை இனி ஊடக மாபியா என எழுதுவார்.
முன்னாள் போராளிகளின் (ஜனநாயகப் போராளிகள் அமைப்பின்) தலமை வேட்பாளரும், முன்னாள் ஊடகவியலாளருமான (அண்மையில் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது நான் இப்போ ஊடகவியலாளன் அல்ல என கூறினார்) ந. வித்தியாதரன் யாழ் ஊடகங்களை மாபியா என குறிப்பிட்டு உள்ளதுடன் உதயன் பத்திரிகை மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் எவ்வாறான சவால்களை தற்போது எதிர்நோக்குகின்றனர்?என்பதற்கு பதிலளித்த ந.வித்தியாதரன்... தனது டெய்லி எவ்.ரீ  பத்திரிகை செவ்வியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு தற்போது ஆதரவளிப்பதில்லை.  நாங்கள் தனியாகவே நீந்த வேண்டியுள்ளது. போதியளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்வது கூட எமது பிரதான சவாலாக கருதப்பட முடியாது.யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஊடக மாபீயாவே பிரதான சவாலாக கருதப்பட வேண்டும். ஊடகங்கள் மிக மோசமாக எம்மைத் தாக்கி வருகின்றன. அவர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அரசியலில் ஈடுபடவில்லை, மாறாக தங்களது சுயலாப அரசியல் தேவைகளை பூhத்தி செய்யவே முயற்சிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் சுயாதீனமான ஊடகம் இயங்கி வந்தால் எங்களினால் இலகு வெற்றியீட்ட முடியும்.