7/21/2015

| |

சயனைட் குப்பிகளுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது -

இலங்கைத் தமிழர்கள் இருவர் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில் வைத்து நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு பொலிஸார் கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட போதே இவற்றை கைப்பற்றியுள்ளனர். அந்தக் காரில் இருந்து, செய்மதி தொலைபேசி, புவிநிலைகாட்டி கருவிகள் நான்கு, 75 சயனைட் குப்பிகள், 300 கிராம் சயனைட் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் இருவரை தவிர ஏனையோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளாலேயே சயனைட் குப்பிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரிஐ குறிப்பிட்டுள்ளது