2004.07.25ம் திகதி கொட்டாவையில் நித்திரைத் தூக்கத்தில் வைத்துபடுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் குகனேசன் உள்ளிட்ட 08 பேர் படுகொலைசெய்யப்ட்ட இந்நாளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிவிடுத்தஊடகஅறிக்கை.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உருவாக்கத்திற்காக விதையாக இருந்த எமதுபோராளிகள் கொழும்பில் வைத்துபடுகொலைசெய்யப்பட்ட 15வது ஆண்டுநினைவை நாம் கனத்த இதயத்துடன் நினைவு கூருகின்றோம்.
இதன் முதன்மைப் போராளியாகவும், இவ்வுருவாக்கத்திற்குஆரம்பவித்தாகஅமைந்தகுகுநேசன் உட்பட ஏனைய எம் பெறுமதிமிக்க போராளிகள் இந்நாளில்தான் (25.07.2015)மிகவும் நயவஞ்சகமானமுறையில் கொல்லப்பட்டனர்.
அவர்கள்சுமந்திருந்த இலட்சியம்,கனவுகளின் விதையாகபெருவிருட்சமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாக நாம் வளர்ந்திருக்கின்றோம். இந்தஉருவாக்கத்திற்குநாம் அடைகின்ற ஒவ்வொரு வெற்றிகளில் நாம் அடைந்திருக்கின்ற வெற்றிப் படிகளின் முழு முதற் காரணக் கர்த்தாக்கள் அவர்கள் தான். அவர்களை நினைவூட்டும் இத் தருணத்தில் நாங்கள் மிகமுக்கியமான விடயம் ஒன்றை சுட்டிக் காட்டவிரும்பிகின்றோம். இன்றுபலஅரசியல் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதுவரவேற்கப்பட வேண்டியதும் கூட. சட்டத்தின் முன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்விதமாற்றுக் கருத்துக்களும் எமக்கு இல்லை.அதேபோன்று ஜனநாயகவழியில் நம்பிக்கைகொண்டு பயங்கரவாதத்தை எதிர்த்து தம் சமுக மக்களின் விடிவுக்காக திரும்பியிருந்த இப் போராளிகளின் படுகொலையும் சந்தேகமற்ற ஓர் அரசியல் படுகொலைதான்.
எனவேயுத்தம் முடிவுக்குகொண்டு வரப்பட்டுபுலிகள் தோற்கடிக்கப்பட்டநிலையில் இந்த படுகொலையின் உண்மையாக சூத்திரதாரியார்? இந்த படுகொலையை புலிகள் மேற்கொள்வதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் யார்?அவர்களின் யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த அந்த காலப் பகுதியில் புலிகளை ஆயுதங்களுடன் கொழும்புக்கு அழைத்துவந்தமுன்னாள், இந்நாள் பாராளுமன்றஉறுப்பினர்கள் யார்? அமைச்சர்கள் யார்? முகவர்கள் யார்? என்ற அனைத்து உண்மைகளும் விசாரிக்கப்பட்டு வெளிக் கொணரப்படவேண்டும்.
அதன் அடிப்படையில் இந்தமாபெரும் கொடும் செயலுக்கு காரணமாக இருந்த அனைத்துகுற்றவாளிகளும் தண்டிக்கப்படவேண்டும். எனவேபுதிதாகஅமைய இருக்கின்ற அரசாங்கமும் பாராளுமன்றமும் இதனை ஒரு முக்கியவிடயமாககருத்தில் எடுத்து இதனைஒருஅரசியல் படுகொலையாக ஏற்று சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழுவை அமைத்து இந்த படுகொலையுடன் தொடர்புபட்ட அனைத்து முகவர்களையும், உதவியாளர்களையும் கைதுசெய்துசட்டத்திற்குமுன் நிறுத்தவேண்டும் என்றுதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாகியநாம் இந்நாளில்உறுதியாகக் கோருகின்றோம்.
இதற்காகஅமையவிருக்கின்றபாராளுமன்றத்தைநாம் ஒருகளமாக பயன்படுத்துவோம். பாராளுமன்றத்திற்குஉள்ளும்,வெளியும் இப்படுகொலைக்கு நீதிவேண்டியும் இவ் உண்மையானவிசாரணைகள் வெளிக்கொணரப்படும். அகிம்மை ரீதியில் போராடநாம் பின் நிற்கவும்மாட்டோம் எனதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிவிடுத்துள்ளஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது