7/26/2015
| |
குனேசன் உள்ளிட்ட 8 பேரின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.
7/25/2015
| |
யாகூப் மேமனை தூக்கிலிட ஒத்திகை: ரூ.22 லட்சம் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
| |
பொய் சொல்லும் . கூட்டமைப்பு செல்வராசா - வேட்பாளர் ஆ .ஜோர்ஜ் பிள்ளை
7/24/2015
| |
சிவாஜிலிங்கத்தின் செயல் கோமாளித்தனமானது: சி.வி.கே
| |
மஹிந்தவை சந்திக்க வைத்த பின்னரே பிரபாகரனை கொன்றனர்: கருணா -
7/23/2015
| |
கூட்டமைப்பை ஆதரவளிப்பதில் குழப்பம்; கைகலப்பில் மூவர் காயம்
| |
முகமது நபி வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த குரானின் கையெழுத்துப் பிரதி
7/22/2015
| |
வண்ணானுக்கு தேர்தலில் போட்டியிட என்ன அருகதை இருக்கின்றது? தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் கொலைகாரன் ஜனாவின் குண்டர்கள் கேள்வி?
7/21/2015
| |
சயனைட் குப்பிகளுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது -
| |
அரியநேத்திரனின் ஆதரவாளர் மீது ஜனா ஆயுதமுனையில் அச்சுறுத்தல்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிக்குள்ளே வேட்பாளர்களுக்குள்ளே நாளுக்கு நாள் முறுகல்நிலை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் அரியநேந்திரனுக்கும் ஜனாவுக்குமிடையிலான முறுகல்நிலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அவர்கள் இருவரினதும் ஆதரவாளர்களின் முறுகல்களும் அதிகரித்துள்ளன.
| |
தமிழ் தேசிய கூட்டமைப்பு தன் தவறை நியாயப்படுத்த முடியாது.-மட்/ முன்னாள் பிரதி மேயர்
மக்களின் செல்வாக்கு வேட்பாளர்களுக்கு அதிகரித்து வரும் வேளையில் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.
இச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தாக்க முற்படும் போது கையும் மெய்யுமாக வீட்டில் உள்ளவர்கள் குற்றவாளிகளை பிடித்து காத்தான்குடி பொலிஸில் ஒப்படைத்துள்ளார்கள். இச்சம்பவம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வங்குரோத்து நிலையை காட்டுகின்றது. மக்களின் செல்வாக்கை அராஐகத்தால் பெற்றுக் கொள்ள முடியாது. என்று தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி செயலாளரும் ஐ.ம.சு கூட்டமைப்பின் வேட்பாளருமான ஆ.ஜோர்ஜ் பிள்ளை தனது கண்டன அறிக்கையில் தெரிவித்தள்ளார்.
| |
வேட்பாளர் செல்லத்துரை அரசரெத்தினம் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்
தேர்தல் சட்ட திட்டங்களை மீறி மட்டக்களப்பு பிரதான வீதியிலும் மின் கம்பங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஜனாவின் பெயரையும் அவரின் போஸ்ரர்களையும் ஒட்டி வந்தவர்களே குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் குறித்த வேட்பாளரையும் அவரது குடும்பத்தாரையும் தேர்தல் முடியும் முன்னர் ஊரைவிட்டு வெளியேறு வேண்டும் எனவும் இல்லாது விட்டால் கொலை செய்ய போவதாகவும் அச்சுறுத்தியிருக்கின்றார்கள். கருத்தை கருத்தால் வெல்லும் காலத்தில் கருவியாலும், அடாவடித் தனங்களாலும் ஜனநாயகத்தின் குரவளைகளை நசுக்க முற்படுவது கடந்த கால யுத்த ஆதிக்கத்தை கொண்டு வரும் மிக பயங்கரமான செயற்பாடாக பார்க்கின்றோம்.
இம்முறை நாடாளுமன்ற பொதுத் தேர்தல், சட்டதிட்டங்களை மதித்து வன்முறையற்ற தேர்தலாக நடத்தப்பட வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையாளர் மிகவும் இறுக்கமாக உள்ளார். அதற்கேற்றால் போல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்காக சேவைபுரியப் போவதாக கூறும் வேட்பாளர்கள் தமது ஆதரவாளர்களை மது அருந்திவிட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தி அச்சத்தினை ஏற்படுத்தாதவர்களாக வழி நடத்த வேண்டியது கட்டாய கடமையாகும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது .
| |
மட்டக்களப்பில் முதலாவது தேர்தல் வன்முறையை தொடக்கி வைத்தார்* திரீ ஸ்டார் ஜனா
7/18/2015
| |
எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படவில்லை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்
| |
இரகசிய பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – பூ.பிரசாந்தன்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு இரகசிய பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
7/17/2015
| |
தமிழ் மக்கள் இத் தருணத்தில் சிந்தித்துசெயற்படுவீர்களாயின் எமக்கானவிடிவுதொலைவில் இல்லை- வேட்பாளர் சி.சந்திரகாந்தன்.
தமிழ் மக்களின் தூரநோக்கற்றபலவீனமானஅரசியல் தலைமைகளினால் தமிழர்களுக்கானகிழக்குமாகாணஆட்சி முஸ்லீம் காங்கிரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 11 உறுப்பினர்களைகொண்டதமிழ்த் தேசியக் கூட்டமைப்புவெறுமனே 07 உறுப்பினர்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரசின் கீழ் கூத்தாடிகளாக இருக்க,வேலைவாய்ப்பிலும்,நிதிஒதுக்கீடுகளிலும் தமிழர் பகுதிதிட்டமிட்டுபுறக்கணிக்கப்படுகின்றன. தமிழர் பகுதிகளுக்கானநிதிகளும்,தமிழ் இளைஞர் யுவதிகளுக்கானவேலைவாய்ப்புக்களும் முஸ்லீம் பிரதேசங்களுக்கும் முஸ்லீம்இளைஞர் யுவதிகளுக்கும் திருப்பிவிடப்படுகின்றன.
| |
யாழ்ப்பாணத்தில் காணப்படுவது ஊடக மாபீயாவே- வித்தியாதரன்-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு தற்போது ஆதரவளிப்பதில்லை. நாங்கள் தனியாகவே நீந்த வேண்டியுள்ளது. போதியளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்வது கூட எமது பிரதான சவாலாக கருதப்பட முடியாது.யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஊடக மாபீயாவே பிரதான சவாலாக கருதப்பட வேண்டும். ஊடகங்கள் மிக மோசமாக எம்மைத் தாக்கி வருகின்றன. அவர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அரசியலில் ஈடுபடவில்லை, மாறாக தங்களது சுயலாப அரசியல் தேவைகளை பூhத்தி செய்யவே முயற்சிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் சுயாதீனமான ஊடகம் இயங்கி வந்தால் எங்களினால் இலகு வெற்றியீட்ட முடியும்.
7/16/2015
| |
விருப்பு இலக்கங்கள் நாளை வெளியிடப்படும் – மஹிந்த தேசப்பிரிய
| |
காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் விபத்தில் மரணம்
7/14/2015
| |
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் -நாம் திராவிடர் கட்சி
| |
ஆகக்கூடுதலாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டுள்ளன
7/13/2015
| |
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களின் பெயர்களும்
| |
மட்டக்களப்பில் அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் வேட்புமனுத் தாக்கல்
| |
ஐ.தே.கவின் புதிய கூட்டமைப்பு எமக்கு சவாலாக அமையாது சு.கவின் ஒற்றுமை எதையும் எதிர் கொள்ளும்
7/12/2015
| |
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வெற்றிலைச் சின்னத்தில் போட்டி
7/09/2015
| |
தமிழர்களின் வாக்குகள் துண்டாடப்படுவதை தவிர்க்க தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே போட்டியிடும்-சிவநேசதுரை சந்திரகாந்தன் -
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே போட்டியிடும் என தெரிவித்த அவர்,இணைந்து போட்டியிடுவதா,தனித்து போட்டியிடுவதாக என்பது தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இன்று காலை மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் கிழக்கு மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் கட்சி.கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் வீதசாரம் மிகவும் குறைவாகவுள்ளது.ஆகக்கூடிய இரண்டு ஆசனங்களை இங்கு பெறமுடியும்.மட்டக்களப்பில்தான் தமிழர்கள் ஆககூடுதலாக நான்கு ஆசனங்களை பெறக்கூடியதாகவுள்ளது.அம்பாறையில் ஒரு ஆசனத்தினை மட்டுமே பெறமுடியும்.
ஆதனால் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல கட்சிகள் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகள் துண்டாடப்படுவதை என்னைப்பொறுத்தவரையில் ஒரு தமிழனாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.அங்கு சிறந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு தமிழர்களுக்கு சேவையாற்றக்கூடியவர்கள் பாராளுமன்றம் அனுப்பப்படவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் தேசிய வாதிகளின் பேச்சுகளுக்கு பின்னால் இழுபட்டுச்செல்லாமல் மக்களுக்கு ஆக்கபூர்வமான விடயங்களை செய்யக்கூடிய பாராளுமன்றம் செல்லும்போது அங்கு பார்வையாளராக இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய நிலையில் இருக்கவேண்டும் என்பது கொள்ளையாகவுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலமடைந்து அவர்களின் இனம் பலமடைந்துசெல்லும்போது நாங்கள் இன்னும் அதனை பார்த்துக்கொண்டிருக்கும் நிலைமையை இனிவரும் காலங்களில் ஏற்படுத்தக்கூடாது என்பது எமது நோக்கமாகும்.
அதற்கான நகர்வுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்துவருகின்றோம்.எமது கட்சியின் அடிமட்ட போராளிகள் தனித்துவமாக படகுச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அதேவேளையில் மகிந்த ராஜபக்ஸவும் ஜனாதிபதி மைத்திரிபால ஒன்றிணைந்துள்ள ஐக்கிய சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதிலும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இன்னும் சரியான முடிவுக்கு வரவில்லை.எதிர்வரும் 10ஆம் திகதி இது தொடர்பில் எமது கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என்றார்.