6/03/2015

| |

பாராளுமன்றத்தை நடத்தக்கூட முடியாதநிலையில் தவிக்கும் மைத்திரி

Résultat de recherche d'images pour "நாடாளுமன்றம்"நாடாளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்றுக்காலை 9.30க்கு கூடியது. விசேட அமர்வை நடத்துவதற்கு நாடாளுமன்றம் கூடப்பட்டபோதும் அவையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அவையமர்வை 5 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே அவை நடவடிக்கை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் தீர்மானம் எதுவும் எட்டப்படாததையடுத்தே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.