இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்துட்டு சபாநாயகரிடம் நேற்று வியாழக்கிழமை கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்படும் என எதிர்க்கட்சியினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.