கிழக்கு மாகாணத்தில் தமிழ் அதிகாரிகள் மீதான திட்டமிட்ட அடக்கு முறைகள் மிகவும் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் அதிகாரிகளை மாகாண சபையில் உயர் பீடங்களுக்கு கொண்டு செல்வதற்கு கடந்த காலங்களில் பல தடைகள் இருந்தும் அவற்றினைத் தாண்டி எமது தலைவர் சி.சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக இருந்த காலத்தில் அன்றைய மாகாண சபையின் உதவியுடன் சிரமத்தின் மத்தியில் பல தமிழ் அதிகாரிகள் மட்டக்களப்பு,திருகோணமலை,அம்பாறையிலிருந்துஉள்வாங்கப்பட்டிருந்தனர்.அதுமட்டுமன்;றி பல தகமைகளோடு உரிய இடம் கிடைக்காமல் இருந்த தமிழ் பேசும் அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண சபையின் உதயத்தின் பின்னர்தான் உரிய பதவி உயர்வுகளும் கிடைக்கப்பெற்றது.ஆனால் தற்போதைய நிலையில் கிழக்கு மாகாண உயர் பதவிகளில் இருக்கும் தமிழ் அதிகாரிகள் பழி தீர்க்கப்படுகின்றனர் இன் நிலை நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பெதுச் செயலானருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான திடீர் அதிகாரிகள் இடமாற்றம்,பதவிக்குறைப்புக்கள் ஏனைய அதிகாரிகள் மத்தியில் இன முரண்பாட்டையும் ஓர் அதிகாரியை இன்னும் ஓர் அதிகாரி இனக்குரோத சந்தேகத்துடன் பார்க்கும் நிலமையினையும் தோற்றுவித்துவிடும். எனவே மூவினங்களும் இணைந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் முன்னுதாரணமாக மாகாண சபை செயற்பட வேண்டும் மாறாக தமது சொந்த நோக்கோடு தமிழ் அதிகாரிகளை யாரும் அடிமையாக்க முற்படக் கூடாது.
குறிப்பாக கிழக்கு மாகாண சபை அமைச்சுக்களிலும்,திணைக்களங்களிலும் உயர் பதவிகளில் இருக்கின்ற இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள் ¬(ளுடுயுளு) தமிழ் அதிகாரிகள் பலருக்கு பதவிமாற்றங்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள்; மேற்கொள்ளப்பட்டுள்ளது அறிய முடிகின்றது.தமிழ் அதிகாரிகளை மாற்றி விட்டு இஸ்லாமிய அதிகாரிகளை நியமிக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
தகமைகளுக்கு ஏற்ப கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம்,சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்படுவது சாதாரணமானது மாறாக திட்டமிட்;டு செயற்படுவது கண்டிக்கத்தக்கது.அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிருவாகம்) திருமதி கலாமதி பத்மராஜாவை மாற்ற முற்படுவது நிறுத்தப்பட வேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணக்க அரசியலில் தமிழர்கள் இருப்பதனையும் இழக்கும் அரசியலாக மாறிவிட்டது வேடிக்கைக்கும்,வேதனைக்கும் உரியது எனவும் குறிப்பிட்டார்.