நிதி ஒதுக்கீட்டில் படுவான்கரை புறக்கணிப்பு
100 நாள் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதி முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அபிவிருத்திக்கென சுமார் 149.28 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வாழைச்சேனை மத்திக்கு 54.25 மில்லியனும், ஓட்டமாவடிக்கு 55.00 மில்லியனும் கோறளைப்பற்று தெற்கு 10.75 மில்லியனுமாக இஸ்லாமிய பகுதிகளுக்கு மொத்தமாக ரூபா 120.00 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடனான. 29.28 மில்லியன்கள் மண்முனை வடக்குக்கு 2.00 மில்லியனும், ஏறாவூர்பற்றுக்கு 6.10 மில்லியனும், கோறளைப்பற்று வடக்கிற்க்கு 6.15 மில்லியனும், கோறளைப்பற்றிற்கு 8.20 மில்லியனும், மண்முனை தென் எருவில் பற்றிற்கு 7.40 மில்லியன் ரூபாக்களுமாக இஸ்லாமிய எல்லைப் பகுதிகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வவுணதீவு, பட்டிப்பளை, போரதீவு, பிரதேசங்களுக்கும் ஆரையம்பதி பிரதேசத்திற்க்கும், எதுவித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இது முற்றிலும் நல்லாட்சியில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், இணக்க ஆட்சி நடத்தும் நிலையில் படுவான்கரை தமிழ் பிரதேசம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.