பிரான்சில் புலி பினாமி பரமலிங்கம் தாக்கப்பட்டதன் பின்னணி என்ன?என்பதை உறுதி .கொம் என்னும் இணையத்தளம் ஒப்புவித்துள்ளது.அதுவே இங்கு மீள்பிரசுரமாகின்றது
பிரான்சில் விடுதலைப்புலிகளின்பெயரை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்கள்.
தமிழீழ மக்களையும்,தமிழீழ தேசியப் போராட்டத்தையும்,மனசில் நிலைநிறுத்தி அதற்கான மீள் கட்டுமான வேலைத்திட்டங்களை ஒழுங்கமைத்து மிகுந்த அர்ப்பணிப்போடும், பொறுப்புணர்ச்சியுடனும் தமிழீழம் நோக்கிய பயணிப்பை மேற்கொள்ள வேண்டிய அனைத்துலக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள்.அந்தப்பொறுப்புக்களை உதாசீனம் செய்யும் வகையில் நடந்து கொள்ளும் சில நிகழ்வுகளை நாம் இன்று கண்கூடாக காணக்கூடியதாகவுள்ளது. .
கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அனைத்துலக பொறுப்பினை வகித்து வந்த திரு:கோகுலன் அவர்கள் பொறுப்பிலிருந்து விலகி திரு : நாயகன் அவர்களை 08/02/2015 அன்றைய தினம் அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டு தெரிவு செய்யப் பட்டார் .
அதுவரை அனைத்துலக பொறுப்பு வகித்து வந்த திரு :கோகுலன் அவர்களது காலப்பகுதியில் ஈரோ 80,000 செலவிடப்பட்டதாக கணக்கறிக்கை ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் அந்த அறிக்கையில் 80 ஆயிரம் ஈரோ எந்தவகையில்,எப்படி செலவு செய்யப்பட்டது என்பது தெளிவுபட வழங்கப்பட்டிருக்கவில்லை
இந்த நிலை இப்படியிருக்க அனைத்துலக பொறுப்பினை ஏற்றுக்கொண்ட திரு: நாயகன் அவர்கள் ஒவ்வொரு கிளைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போல மேற்கொண்டு தமிழீழம் நோக்கிய வேலைத்திட்டங்களை நகர்த்துவதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போதும், அவருடைய அழைப்புக்களை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஒத்துழைக்கும் நோக்குடன் பெரியளவில் யாரும் முன்வரவில்லை என்பதும், அதே நேரம் ஒற்றுமையை சிதைக்கும் நோக்குடன் செயற்பட்டு வரும் அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும் அதற்கு ஒத்தூதும் சில குழுக்களுமாக சிலர் பிரிந்தும் செயற்பட்டு வருவதும் தமிழீழம் பற்றிய பயணிப்பு எதிர்காலத்தில் பெரும் பின்னடைவைக் கொண்டுவருமென்ற அச்சப் பாட்டை இந்தச் சம்பவங்கள் எடுத்துரைத்து நிற்கின்றன.
இன்றுள்ள இந்த சூழ்நிலையில் தாயக விடுதலையை மறந்து இரட்டைவேடம் போடும் சிலரையும் நாங்கள் வெளிக்கொண்டுவர வேண்டியிருக்கிறது . அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஆதரவாகச் செயற்படும் சிலரில் திரு:கிருஷ்ணா (பிட்டுக்கடை) மற்றும் திரு: ஆனந்தன் அவர்களுடைய செயல்முறையானது.இரண்டு பக்கமுள்ளவர்களையும் கோர்த்துவிட்டு அதில் குளிர்காயும் வண்ணமே அமைந்துள்ளது இவரைப்போலவே அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பக்கப் பாட்டு பாடுவதற்கு முனைந்துள்ளார்கள்.
இதற்கிடையில் 14/06/2015 அன்று பிரான்சு நாட்டின் கிளைப்பிரிவிற்கான பொறுப்பாளர் மாற்றம் சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்று நடாத்தப் பட்டது. இந்தக் கூட்டத்தில் திரு:அலெக்ஸ் என்பவர் புதிய பொறுப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். இந்த நிகழ்வானது வழமைக்குமாறாக இடம்பெற்றிருப்பதும். விடுதலைப் புலிகளின் இரகசியசெயற்பாட்டுக்கு முற்றிலும் முரணான வகையிலும் இடம்பெற்றிருக்கிறது.
பொதுவாக இதுவரை காலங்களில் பொறுப்பாளரைத் தெரிவு செய்வது என்பது கிளையில் கூடியிருப்பவர்களின் விருப்பங்களுக்கமைவதோடு, அந்தப் பொறுப்பை சரிவர ஏற்று நடாத்தக் கூடியவகையில் அவரிருக்க வேண்டும். அதே நேரம் பழைய பொறுப்பிலிருந்தவர் புதிதாக பொறுப்பை ஏற்பவருக்கு தட்டிக்கொடுத்து அவரை வழிநடாத்த உதவவேண்டும் .

ஆனால் 14/06/2015 அன்று நடந்த இந்த நிகழ்வானது அப்படியல்லாமல் பழைய பொறுப்பாளராகவிருந்த திரு:பரமலிங்கம் அவர்கள் சமூகளிக்காமல் அவருக்குப்பதிலாக பிரான்சு காவல் துறையை அனுப்பிவைத்துள்ளார்.இந்த அணுகு முறையானது மிகவும் வெறுக்கத்தக்க துரோகம் நிறைந்த செயற்பாடாகும்,காலாகாலமாக புலிகள் கட்டிக்காத்து வந்த ஒழுக்க விழுமியத்தை மீறிய காட்டிக் கொடுப்பாகும்,ஏன் இவர்கள் காவல்த்துறையை அணுகினார்கள்? யாருக்கு இதனால் என்ன பயன் ?எங்களுக்குள் உள்ள கருத்து முரண்பாடுகளை நாங்களே பேசித்தீர்த்துக் கொள்ளவேண்டாமா? இதற்குள் அந்நியர்களின் வரவு தேவைதானா ? இதை நினைத்து இவர்கள் வெட்கப் பட வேண்டாமா ?
விடுதலைப் புலிகளின் பிரான்சு கிளை அமைந்திருக்கும் கட்டிடத்தின் உரிமையாளரான திரு:ஆனந்தன் அவர்களும், திரு :பரமலிங்கம் அவர்களும் நெருங்கிய நண்பர்கள் ஆதலால்,தனது பொறுப்பாளர் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தானே என்றென்றும் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் என்று புலம்பித்திரியும் மதிப்புக்குரிய திரு:பரமலிங்கம் திரு:ஆனந்தன் மூலம் பிரான்சு கிளை அமைந்திருக்கும் அலுவலகத்தை மூடி சாவியைப் பெற்றுக்கொள்ள அதற்கான வியூகத்தையும் ஏற்படுத்தி,தன்னிடம் சாவியை தந்துவிடும் வண்ணம் ஆனந்தன் அவர்கள் புதிய பொறுப்பாளரிடம் வினாவியிருப்பதும் வேடிக்கையான ஒன்றாகும். அந்தக் கட்டிடம் அவருடைய சொந்த உழைப்பிலிருந்தோ அல்லது அவரது ஊரில் உள்ள சொத்துப் பத்துக்களை விற்ரெடுத்தோ வாங்கிய ஒன்றல்ல.இவர்கள் இன்று இந்த புலம் பெயர் தேசத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சொத்துக்கள் அனைத்துமே விடுதலைப் புலிகளின் தியாகத்தின் மத்தியிலும்,பொதுமக்களின் சாவிலும்,இரத்தத்திலும் வாங்கியதென்பதை மறந்துபோய் எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டு அதிகாரம் செலுத்தும் நிலைக்கு துணிந்து விட்டார்கள்.
இவர்கள்தானே கருணா,பிள்ளையான் ,கேபி,தயாமாஸ்ரர் போன்றவர்களை துரோகி என்றதும் மற்ற அமைப்பினரை வாய் ஓயாது ஒட்டுக்குழு என்றதும். ஆனால் இன்றோ இவர்கள் செய்யும் இந்த பாதகமான செயல்களை என்ன பொருள் கொண்டு அழைப்பது ? இவர்கள் செய்வது தர்மமா? இவர்கள் செய்வது தார்மீகமா? இவர்கள் செய்வது நாகரீகமா? இவர்கள் சந்திரமண்டலத்திலோ இல்லை செவ்வாய் மண்டலத்திலோ இருந்து வந்தவர்களல்லர் எமது ஈழ தேசத்தில் பிறந்து வளர்ந்து வந்தவர்கள்தானே ஏன் இப்படியானா இழிவான கேவலமான நடவடிக்கைக்குள் விழுந்து போனார்கள் ? மனிதாபிமானமற்ற முறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் ? எதிரி என்று தெரிந்தால் அவனுக்கு ஏற்றால் போல் நாம் எங்களை தயார்படுத்தி செயற்பட முடியும். ஆனால் இவர்களைப் போன்ற பச்சோந்தி தன்மைபடைத்தவர்களால் எதிர்காலப் போராட்டமே சூனியமாகிப் போய்விடுமோ என்றெண்ணத்தோன்றுகிறது.

பதவிக்கும்,பொறுப்புக்கும் ஆசைப்படும் இவர்கள் எப்படி ஈழப்போராட்டத்தை முன்னிறுத்தி வழிநடத்தப்போகிறார்கள் ?கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப்போல் ஆளுக்காள் ஒரு குழுவாகச் செயற்பட ஆரம்பித்தால் இவ்வளவு காலமும் களத்தில் உயிர்களையும்,சொத்துபத்துகளையும் இழந்து நிற்கும் ஈழமக்களுக்கும்;கைதாகி விடுதலையாகிநிற்கும்;அங்கவீனர்களாகினிற்கும் போராளிகளுக்கும் என்ன விலைகொடுக்கப் போகிறார்கள் ?
ஏற்கனவே தாயகத்திலுள்ள மக்களும்,போராளிகளும் புலம் பெயர்தேசத்து விடுதலை அமைப்புக்கள் மீதும், விடுதலைப் போராளிகள் மீதும் அதிருப்தியடைந்திருக்கும் இந்தவேளையில் இப்படியான பொறுப்பற்ற ,இழிவான செயல்களால். தாயகத்தில் உள்ள பொதுமக்கள் ,போராளிகள் மத்தியில் வெறுப்பையும்,கோபத்தையும் உருவாக்குமென்பதை ஏன் அறியாது நடக்கிறார்கள்?

இதனால் அர்ப்பணிப்போடும் ,நல்லெண்ணத்தோடும் மேலும் பாடுபடும் உண்மையான போராளிகளுக்கும் அவற்பெயரல்லவா ?
விரால் இல்லாத குளத்திற்கு
குறவை அதிகாரம் செலுத்தும்
குறவை அதிகாரம் செலுத்தும்
இன்னும் பல செய்திகள் வெளிவரும்...