6/18/2015

| |

2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையான நல்லாட்சி நடத்திக்காட்டினோம்.


16.06.2015 அன்று கிழக்கு மாகாணசபை அமர்வில் கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார அமைச்சு மூலம் ஒதுக்கப்பட்ட பெருந்தொகையான நிதி திட்டமிட்ட முறையில் அம்பாறை மற்றும் சம்மாந்துறைக்கு மாற்றப்பட்டது தொடர்பாக வெளிப்படையான அறிக்கை இடப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாணத்தில் நிதி ஒதுக்கீட்டிலும், வேலை வாய்ப்புக்களின் போதும் இன வீதாசாரம் போணப்பட வேண்டும் எனவும் சி.சந்திரகாந்தனினால் தனி நபர் பிரரேரணை கிழக்கு மாகாணசபையில் முன்வைக்கப்பட்டது. இப் பிரேரணை தொடர்பாக இடம் பெற்ற விவாதத்தின் போது குறிக்கிட்ட கோ.கருணாகரன் (ஜனா) அவ்வாறு நிதிகள் மாற்றப்படவில்லை கிழக்கில் இணக்க ஆட்சி சிறப்பாக நடை பெறுகின்றது என நியாயப்படுத்த முற்பட்ட போது கருத்து தெருவித்த சி.சந்திரகாந்தன் நான் முதுகெலும்பு இல்லாத ஆட்சி நடத்தவில்லை 2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையான நல்லாட்சி நடத்திக்காட்டினோம்.
இன முறுகலோ அரசியல் பேதங்களோ அன்று காணப்படவில்லை ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை வைத்துக் கொண்டு 07 ஆசனங்களைக் கொண்டுள்ள ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரசின் இழுப்புக்கு இழுபடுகின்றீர்கள் இவ்வாறு முதுகெலும்பு இல்லாத ஆட்சியை நாங்கள் நடத்தவில்லை  வாக்களித்த  சமுகத்தினை நடுக்கடலில் தவிக்க விட்டு பெயரளவில் கூக்குரலிட்டுத் திரிவதில் எந்தப் பயனும்  ஏற்படப் போவதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் போர்வைக்குள் மறைந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ரெலோ தனித்து நின்று வெற்றி பெற்றுக் காட்டுங்கள் மக்கள் வாக்களிப்பார்களா? அல்லது உங்களை விரும்புகின்றார்களா? என்று அப்போது தெரியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அப்படியல்ல மக்களால் ஏற்றிக் கொள்ளப்பட்டு மக்களுக்காக தனித்து நின்று குரல் கொடுக்கின்ற கட்சி என்பதனை யாரும் மறந்து விட கூடாது கிழக்குமாகாண நிதி ஒதுக்கீட்டில் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக சுகாதார அமைச்சின் நிதி ஓதுக்கீட்டில் பாதிக்கப்படுகின்றது என்றால் கிழக்கில் ஆளும் கட்சிக்கு முட்டுக் கொடுக்கின்ற நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும் மாறாக பிள்ளையான் சொல்கின்றான் என்பதற்காகவோ அல்லது அமைச்சரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவோ ஓர் இனம் பாதிக்கப்படும் நிலையில் உண்மையை மறைத்து முட்டுக் கொடுக்க முற்படக் கூடாது மக்களின் வாக்குகளைப் பெற்றுவந்த அரசியல் தலைமைகள் உண்மையாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.