நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்படும் என்று மிக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 52-66 நாட்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்யவேண்டும். ஓகஸ்ட் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 52 நாட்கள் நிறைவடைகின்றன. அதன்பிரகாரம் வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 6முதல்- ஜூலை 15 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும். பொதுத்தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் புதிய நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு செப்டெம்பர் 1 ஆம் திகதி நடத்தப்பட்டவேண்டும்.