6/30/2015

| |

யாழில் 11 தொகுதிகள் 6 ஆக குறைவடையும் அபாயம் : எச்சரிக்கும் கபே அமைப்பு

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய புதிய தேர்தல் முறைமையின் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தொகுதிகளை 5 அல்லது 6ஆக குறைக்க நேரிடும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. 
நாட்டில் உள்ள தொகுதிகளை 10 அல்லது 15 வரை குறைத்தால் பிரச்சினை இல்லை ஆனால் ஒரே நேரத்தில் 35 தொகுதிகளை குறைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை அல்ல என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சிறுகட்சிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமாயின் கட்டாயம் பாராளுமன்றில் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என கபே இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
அரசயலமைப்பின் 20-வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்ததை வரவேற்கிறோம். 
ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 225ஆக வைத்துள்ளமை மற்றும் தொகுதிகளை 125ஆக குறைத்துள்ளமை சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 
முஸ்லிம் கட்சிகள், இந்திய வம்சாவளி மலையக கட்சிகள், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறையில் கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்தமை இலங்கை அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முதல் படியாகும். 
ஆனால் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவத்தில் நியாயம் வழங்க 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற போதுமானதல்ல. தேர்தல் திருத்தத்திற்கு முதலாவதாக கொண்டுவரப்பட்ட யோசனையில் கூட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 234, 235 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காமல் சிறு கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியாது. 
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள 125 தொகுதிகள் அடங்கிய 225 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் முறையில் பிரதான மூன்று பிரச்சினைகள் உள்ளன.
முதலாவதாக தற்போதுள்ள தொகுதிகளை 125 தொகுதிகளாக மட்டுப்படுத்துவதற்கு கூடிய காலம் எடுக்கும். இரண்டாவதாக சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவென போதியளவு பல் அங்கத்தவர் தொகுதி இல்லாத நிலை உள்ளது.
மூன்றாவதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்கள பிரதிநிதித்துவம் (வவுனியா, சேருவில, அம்பாறை) மற்றும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அனைத்து தொகுதிகளிலும் உறுதி செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
தேர்தல் நிருவாகத்தின் படி 1970களில் அறிமுகம் செய்யப்பட்ட 160 தொகுதிகளில் 168 உறுப்பினர்கள் தெரிவு செய்யும் முறை தற்போதும் இருந்து வருகிறது. 
காலனித்துவத்தில் இருந்து செய்யப்பட்ட ஒவ்வொரு எல்லை நிர்ணயத்தின் போதும் இலங்கையில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 
  எனினும் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட யோசனையின் மூலம் 160 தொகுதிகளை 115-118 ஆக குறைக்க வேண்டும். (குறைந்தது 9 பல் அங்கத்தவர் தொகுதியேனும் இருக்க வேண்டும்)
சரியாகச் சொல்வதாயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தங்களது தொகுதி அமைப்பாளர்களை 40-45வரை குறைக்க நேரிடும். மாவட்ட அடிப்படையில் பதுளையில் உள்ள 9 தொகுதிகள் 6 தொகுதிகளாக குறைக்கப்படும். 
காலியில் 3 தொகுதிகள், மாத்தறையில் இரண்டு தொகுதிகள், குருநாகலில் 3 அல்லது 4 தொகுதிகளை குறைக்க நேரிடும். கேகாலை, இரத்தினபுரி, அநுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 2-4 தொகுதிகள் வரை குறைக்க வேண்டிவரும். யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தொகுதிகளை 5 அல்லது 6ஆக குறைக்க நேரிடும். 
நாட்டில் உள்ள தொகுதிகளை 10 அல்லது 15 வரை குறைத்தால் பிரச்சினை இல்லை ஆனால் ஒரே நேரத்தில் 35 தொகுதிகளை குறைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை அல்ல.
அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்ட புதிய தேர்தல் முறைமை தொடர்பில் மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டியது அனைத்து கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பிரஜைகளின் பொறுப்பாகும். 
இல்லையேல் புதிய தேர்தல் முறையை பாராளுமன்றில் நிறைவேற்ற முடியாது போவதோடு, பழைய ஜனநாயகமற்ற தேர்தல் முறைமையே கடைபிடிக்க வேண்டிவரும். 
சா/த சித்தியடையாத 94 உறுப்பினர்கள், உ/த சித்தியடையாத 142 உறுப்பினர்கள் கொண்ட 5 வீத மகளிர் அற்ற பாராளுமன்றை மீண்டும் உருவாகுவதை தடுக்க அமைச்சரவை யோசனை மாற்றியமைக்கப்பட வேண்டும்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

6/26/2015

| |

ஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத்தேர்தல்

Résultat de recherche d'images pour "தேர்தல்"நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்படும் என்று மிக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 52-66 நாட்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்யவேண்டும். ஓகஸ்ட் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 52 நாட்கள் நிறைவடைகின்றன.  அதன்பிரகாரம் வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 6முதல்- ஜூலை 15 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும். பொதுத்தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் புதிய நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு செப்டெம்பர் 1 ஆம் திகதி நடத்தப்பட்டவேண்டும். 
»»  (மேலும்)

| |

ரணிலின் மைனோரெட்டி அரசாங்கம் கலைந்தது

Résultat de recherche d'images pour "நாடாளுமன்றம்"நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 
 
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளிவரவிருக்கும் அந்த விசேட வர்த்தமானியில் தேர்தலுக்கான திகதி வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
 
அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்படவிருப்பதனால் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

»»  (மேலும்)

6/25/2015

| |

ஜனாதிபதி அநீதி இழைத்துவிட்டார்-ஹக்கீம் விசனம்

Résultat de recherche d'images pour "ரவூப் ஹக்கீம்"சிறிய மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கு அநீதி இழைக்க இட­ம­ளிக்­கப்­ப­ட­ மாட்­டாது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்த போதிலும் எமது ஆலோ­ச­னை­க­ளை நிரா­க­ரித்து வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யிட்­டிருப்­பதன் மூலம் அவர் எமக்கு அநீ­தி­யி­ழைத்­து­விட்டார் என்று அமைச்­சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் குற்றம் சுமத்­தினார்.
அமைச்­ச­ர­வையில் எமது குரல்கள் அடக்­க­ப்ப­டு­கின்­றன. புதிய தேர்தல் முறை விட­யத்தில் சர்­வா­தி­கா­ரமும் தான் தோன்­றித்­த­னமான போக்­குமே கடைப்­பி­டிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­ப­தியோ பிர­த­மரோ தங்­க­ளது கட்­சி­களை பற்றி சிந்­திக்­கின்­ற­னரே தவிர சிறிய, சிறு­பான்மை கட்­சி­களைப் பற்றி சிந்­திக்­க­வில்லை. இதே­நேரம் புதிய தேர்தல் முறையை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கும் சிறு­பான்­மை­யி­னரின் கருத்­துக்­க­ளையும் குறிப்­பாக என்­னையும் விமர்­சிப்­ப­தற்கு சில இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் குத்­த­கைக்கு அமர்த்­தப்­பட்­டது போன்று செயற்­ப­டு­கின்­றன என்றும் அவர் குறிப்­பிட்டார்.

»»  (மேலும்)

6/24/2015

| |

தேசிய கொடியை ஏற்ற மறுத்த சங்கரி

பளைப் பொது விளையாட்டு மைதான திறப்பு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானம், 10 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு இன்று புதன்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இந்த மைதானத்தை திறந்து வைத்தார். மைதான திறப்பு நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றும்போது, அதற்கு ஆனந்தசங்கரி மறுப்பு தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட சங்கரி அங்கு கருத்து தெரிவிக்கையில், 'தேசிய கொடியை இதுவரை நான் எந்தவொரு நிகழ்விலும் ஏற்றவில்லை. அதற்காக தேசிய கொடியை அவமானப்படுத்துகின்றேன் என்று கருதக்கூடாது. தேசிய கொடியை ஏற்றக்கூடிய காலம் வரும்' என்றார். 'நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமாதானத்தை குழப்பும் வகையில் பல்வேறு கருத்துக்கள் மாணவர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர்' என அவர் மேலும் கூறினார். பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு அண்மையில், வசதிகள் குறைந்த நிலையில இருந்த இந்த மைதானத்தை புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையிடம் கோரிக்கை முன்வைத்தனர். மக்களின் கோரிக்கையை அடுத்து நெல்சிப் திட்டத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் கீழ் மைதானம் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/149052#sthash.GJI1oH5o.dpuf
»»  (மேலும்)

| |

வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றமட்டோம்!-நாடாளுமன்றத்தில் ரணில் உறுதி

Résultat de recherche d'images pour "பிரதமர் ரணில்"தற்போதைய அரசாங்கத்தினால் வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படவில்லை என்றும், முன்னைய அரசாங்கத்தினாலேயே 59 இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Résultat de recherche d'images pour "பிரதமர் ரணில்"
சிறிலங்கா நாடாளுமன்றத்தில்  நேற்று, வலிகாமம் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய அவர்,

“ வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுகின்ற முடிவையும் தற்போதைய அரசாங்கம் எடுக்கவில்லை.

எங்கெங்கு இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும், எங்குள்ள முகாம்களை அகற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை சிறிலங்கா படையினருக்கே தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்த விடயங்களில் அரசாங்கம் தலையிடாத கொள்கையை கடைப்பிடிக்கிறது.

சம்பூரில் உள்ள கடற்படைத் தளத்தை அகற்றும் முடிவை முன்னைய அரசாங்கமே எடுத்தது. தற்போதைய அரசாங்கம் அந்த கடற்படைத் தளத்தை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளது.

அதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

»»  (மேலும்)

6/23/2015

| |

அரியேந்திரனின் ஆச்சரியம் மிக்க வாசிகசாலை

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2012ம் வருடம் கரவெட்டியில் கட்டப்பட்ட வாசிகசாலையினை ஆச்சரியம்; மிக்கதாக மக்களால் பார்க்கப்படுகின்றது. மிக நவீனத்துவத்துடன் உலக நீரோட்டத்தில் சமூகம் முன்னோக்கிச் செல்லும் போது தமிழ் மக்களை மேலும் மேலும் மடையர்களாக்க எண்ணும் தமிழ் தலைமைகளின் வெளிப்பாட்டை இவ்வாசிகசாலை வெளிப்படுத்தி நிற்கின்றது. 
2012ம் வருடம் தனது நிதி ஒதுக்கீட்டில் ஊராரின் வளவுக்குள் மலசலகூடம் கட்டுவது போல் மிகக் கேவலமாக கரவெட்டி மக்களையும் கேவலப்படுத்துவது போன்று ஒரு இலட்சம் ரூபாவில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாம்.மிகுதி நிதி எங்கே போனதென்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 
 
»»  (மேலும்)

| |

பிரான்சில் புலி பினாமி பரமலிங்கம் தாக்கப்பட்டதன் பின்னணி என்ன?


Home

பிரான்சில் விடுதலைப்புலிகளின்பெயரை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்கள்.

Résultat de recherche d'images pour "பரமலிங்கம்"தமிழீழ மக்களையும்,தமிழீழ தேசியப் போராட்டத்தையும்,மனசில் நிலைநிறுத்தி அதற்கான மீள் கட்டுமான வேலைத்திட்டங்களை ஒழுங்கமைத்து    மிகுந்த அர்ப்பணிப்போடும், பொறுப்புணர்ச்சியுடனும்     தமிழீழம் நோக்கிய பயணிப்பை மேற்கொள்ள வேண்டிய  அனைத்துலக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப்பொறுப்பில்  உள்ளவர்கள்.அந்தப்பொறுப்புக்களை உதாசீனம் செய்யும் வகையில் நடந்து கொள்ளும்  சில  நிகழ்வுகளை நாம் இன்று கண்கூடாக  காணக்கூடியதாகவுள்ளது.  .
கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அனைத்துலக பொறுப்பினை வகித்து வந்த திரு:கோகுலன்  அவர்கள் பொறுப்பிலிருந்து விலகி திரு : நாயகன் அவர்களை 08/02/2015 அன்றைய தினம்  அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டு தெரிவு செய்யப் பட்டார் .
அதுவரை அனைத்துலக பொறுப்பு வகித்து வந்த  திரு :கோகுலன் அவர்களது  காலப்பகுதியில் ஈரோ 80,000 செலவிடப்பட்டதாக கணக்கறிக்கை  ஒன்றும்   வழங்கப்பட்டிருந்தது.ஆனால் அந்த அறிக்கையில்  80 ஆயிரம் ஈரோ எந்தவகையில்,எப்படி  செலவு செய்யப்பட்டது என்பது தெளிவுபட வழங்கப்பட்டிருக்கவில்லை 
இந்த நிலை இப்படியிருக்க அனைத்துலக பொறுப்பினை ஏற்றுக்கொண்ட  திரு: நாயகன் அவர்கள் ஒவ்வொரு கிளைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போல    மேற்கொண்டு தமிழீழம் நோக்கிய வேலைத்திட்டங்களை நகர்த்துவதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போதும்,  அவருடைய அழைப்புக்களை ஏற்றுக் கொண்டு அவருக்கு  ஒத்துழைக்கும் நோக்குடன் பெரியளவில் யாரும்   முன்வரவில்லை என்பதும், அதே  நேரம்  ஒற்றுமையை சிதைக்கும் நோக்குடன் செயற்பட்டு வரும் அனைத்துலக தமிழர்  ஒருங்கிணைப்பு குழுவும் அதற்கு  ஒத்தூதும் சில குழுக்களுமாக சிலர் பிரிந்தும் செயற்பட்டு வருவதும் தமிழீழம் பற்றிய பயணிப்பு எதிர்காலத்தில்  பெரும் பின்னடைவைக் கொண்டுவருமென்ற அச்சப் பாட்டை  இந்தச் சம்பவங்கள் எடுத்துரைத்து  நிற்கின்றன.
இன்றுள்ள இந்த சூழ்நிலையில் தாயக விடுதலையை மறந்து இரட்டைவேடம் போடும் சிலரையும் நாங்கள்  வெளிக்கொண்டுவர வேண்டியிருக்கிறது . அனைத்துலக தமிழர்  ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஆதரவாகச் செயற்படும் சிலரில்  திரு:கிருஷ்ணா   (பிட்டுக்கடை) மற்றும் திரு: ஆனந்தன்  அவர்களுடைய செயல்முறையானது.இரண்டு பக்கமுள்ளவர்களையும்   கோர்த்துவிட்டு அதில் குளிர்காயும்  வண்ணமே அமைந்துள்ளது இவரைப்போலவே அனைத்துலக தமிழர்  ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பக்கப் பாட்டு பாடுவதற்கு முனைந்துள்ளார்கள். 
இதற்கிடையில் 14/06/2015 அன்று பிரான்சு நாட்டின் கிளைப்பிரிவிற்கான பொறுப்பாளர் மாற்றம் சம்பந்தமாக  கலந்துரையாடல் ஒன்று நடாத்தப் பட்டது. இந்தக் கூட்டத்தில் திரு:அலெக்ஸ் என்பவர்  புதிய பொறுப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். இந்த நிகழ்வானது    வழமைக்குமாறாக  இடம்பெற்றிருப்பதும். விடுதலைப் புலிகளின் இரகசியசெயற்பாட்டுக்கு முற்றிலும்  முரணான வகையிலும் இடம்பெற்றிருக்கிறது. 
பொதுவாக இதுவரை காலங்களில் பொறுப்பாளரைத் தெரிவு செய்வது என்பது  கிளையில் கூடியிருப்பவர்களின் விருப்பங்களுக்கமைவதோடு, அந்தப் பொறுப்பை சரிவர ஏற்று நடாத்தக்  கூடியவகையில் அவரிருக்க வேண்டும். அதே நேரம் பழைய பொறுப்பிலிருந்தவர் புதிதாக பொறுப்பை ஏற்பவருக்கு தட்டிக்கொடுத்து அவரை வழிநடாத்த உதவவேண்டும் .
ஆனால் 14/06/2015 அன்று நடந்த இந்த நிகழ்வானது அப்படியல்லாமல் பழைய பொறுப்பாளராகவிருந்த திரு:பரமலிங்கம் அவர்கள்  சமூகளிக்காமல் அவருக்குப்பதிலாக பிரான்சு காவல் துறையை அனுப்பிவைத்துள்ளார்.இந்த அணுகு முறையானது மிகவும் வெறுக்கத்தக்க துரோகம் நிறைந்த செயற்பாடாகும்,காலாகாலமாக புலிகள் கட்டிக்காத்து வந்த ஒழுக்க விழுமியத்தை மீறிய காட்டிக் கொடுப்பாகும்,ஏன் இவர்கள் காவல்த்துறையை  அணுகினார்கள்? யாருக்கு இதனால் என்ன பயன்  ?எங்களுக்குள் உள்ள கருத்து முரண்பாடுகளை நாங்களே பேசித்தீர்த்துக் கொள்ளவேண்டாமா? இதற்குள் அந்நியர்களின் வரவு தேவைதானா ?  இதை நினைத்து இவர்கள் வெட்கப் பட வேண்டாமா ?
விடுதலைப் புலிகளின் பிரான்சு கிளை அமைந்திருக்கும்  கட்டிடத்தின் உரிமையாளரான திரு:ஆனந்தன் அவர்களும், திரு :பரமலிங்கம் அவர்களும் நெருங்கிய நண்பர்கள் ஆதலால்,தனது பொறுப்பாளர் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தானே என்றென்றும் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் என்று புலம்பித்திரியும் மதிப்புக்குரிய  திரு:பரமலிங்கம்  திரு:ஆனந்தன் மூலம் பிரான்சு கிளை அமைந்திருக்கும் அலுவலகத்தை மூடி சாவியைப் பெற்றுக்கொள்ள  அதற்கான வியூகத்தையும் ஏற்படுத்தி,தன்னிடம் சாவியை   தந்துவிடும் வண்ணம் ஆனந்தன் அவர்கள் புதிய பொறுப்பாளரிடம் வினாவியிருப்பதும் வேடிக்கையான ஒன்றாகும். அந்தக் கட்டிடம் அவருடைய சொந்த உழைப்பிலிருந்தோ அல்லது அவரது ஊரில் உள்ள சொத்துப் பத்துக்களை விற்ரெடுத்தோ வாங்கிய ஒன்றல்ல.இவர்கள் இன்று இந்த புலம் பெயர் தேசத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சொத்துக்கள் அனைத்துமே விடுதலைப் புலிகளின் தியாகத்தின் மத்தியிலும்,பொதுமக்களின் சாவிலும்,இரத்தத்திலும் வாங்கியதென்பதை மறந்துபோய் எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டு  அதிகாரம் செலுத்தும் நிலைக்கு துணிந்து விட்டார்கள்.
இவர்கள்தானே கருணா,பிள்ளையான் ,கேபி,தயாமாஸ்ரர் போன்றவர்களை துரோகி என்றதும் மற்ற அமைப்பினரை வாய் ஓயாது ஒட்டுக்குழு என்றதும். ஆனால் இன்றோ இவர்கள் செய்யும் இந்த பாதகமான செயல்களை என்ன பொருள் கொண்டு அழைப்பது ? இவர்கள் செய்வது தர்மமா? இவர்கள் செய்வது தார்மீகமா? இவர்கள் செய்வது நாகரீகமா? இவர்கள் சந்திரமண்டலத்திலோ இல்லை செவ்வாய் மண்டலத்திலோ இருந்து வந்தவர்களல்லர்  எமது ஈழ தேசத்தில் பிறந்து வளர்ந்து வந்தவர்கள்தானே ஏன் இப்படியானா இழிவான  கேவலமான நடவடிக்கைக்குள் விழுந்து போனார்கள் ? மனிதாபிமானமற்ற முறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் ? எதிரி என்று தெரிந்தால் அவனுக்கு ஏற்றால் போல் நாம் எங்களை தயார்படுத்தி செயற்பட முடியும். ஆனால் இவர்களைப் போன்ற பச்சோந்தி தன்மைபடைத்தவர்களால்  எதிர்காலப் போராட்டமே சூனியமாகிப் போய்விடுமோ என்றெண்ணத்தோன்றுகிறது.

பதவிக்கும்,பொறுப்புக்கும் ஆசைப்படும் இவர்கள் எப்படி ஈழப்போராட்டத்தை முன்னிறுத்தி வழிநடத்தப்போகிறார்கள் ?கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப்போல் ஆளுக்காள் ஒரு குழுவாகச் செயற்பட ஆரம்பித்தால் இவ்வளவு காலமும் களத்தில் உயிர்களையும்,சொத்துபத்துகளையும் இழந்து நிற்கும் ஈழமக்களுக்கும்;கைதாகி விடுதலையாகிநிற்கும்;அங்கவீனர்களாகினிற்கும் போராளிகளுக்கும் என்ன விலைகொடுக்கப் போகிறார்கள் ?
ஏற்கனவே தாயகத்திலுள்ள  மக்களும்,போராளிகளும் புலம் பெயர்தேசத்து விடுதலை அமைப்புக்கள் மீதும், விடுதலைப் போராளிகள் மீதும் அதிருப்தியடைந்திருக்கும் இந்தவேளையில் இப்படியான பொறுப்பற்ற ,இழிவான செயல்களால்.   தாயகத்தில் உள்ள பொதுமக்கள் ,போராளிகள் மத்தியில்  வெறுப்பையும்,கோபத்தையும் உருவாக்குமென்பதை ஏன் அறியாது நடக்கிறார்கள்?
இதனால் அர்ப்பணிப்போடும் ,நல்லெண்ணத்தோடும்  மேலும் பாடுபடும் உண்மையான போராளிகளுக்கும் அவற்பெயரல்லவா  ?  
விரால் இல்லாத குளத்திற்கு
குறவை அதிகாரம் செலுத்தும்
இன்னும் பல செய்திகள் வெளிவரும்...
»»  (மேலும்)

6/22/2015

| |

நிதி ஒதுக்கீட்டில் படுவான்கரை புறக்கணிப்பு

நிதி ஒதுக்கீட்டில் படுவான்கரை புறக்கணிப்பு


Résultat de recherche d'images pour "படுவான்கரை"100 நாள் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதி முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அபிவிருத்திக்கென சுமார் 149.28 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வாழைச்சேனை மத்திக்கு 54.25 மில்லியனும், ஓட்டமாவடிக்கு 55.00 மில்லியனும் கோறளைப்பற்று தெற்கு 10.75 மில்லியனுமாக இஸ்லாமிய பகுதிகளுக்கு மொத்தமாக ரூபா 120.00 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடனான. 29.28 மில்லியன்கள் மண்முனை வடக்குக்கு 2.00 மில்லியனும், ஏறாவூர்பற்றுக்கு 6.10 மில்லியனும், கோறளைப்பற்று வடக்கிற்க்கு 6.15 மில்லியனும், கோறளைப்பற்றிற்கு 8.20 மில்லியனும், மண்முனை தென் எருவில் பற்றிற்கு 7.40 மில்லியன் ரூபாக்களுமாக இஸ்லாமிய எல்லைப் பகுதிகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 வவுணதீவு, பட்டிப்பளை, போரதீவு, பிரதேசங்களுக்கும் ஆரையம்பதி பிரதேசத்திற்க்கும், எதுவித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இது முற்றிலும் நல்லாட்சியில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், இணக்க ஆட்சி நடத்தும் நிலையில் படுவான்கரை தமிழ் பிரதேசம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 
»»  (மேலும்)

| |

சந்­தி­ர­காந்தன் தலை­மையில் உரு­வாக்­கப்­பட்ட மாகாண ஆட்­சியில் இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­தி­ய­துடன் கிழக்கில் அபி­வி­ருத்திப் பணி­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்தோம். எம்.எஸ்.உது­மா­லெப்பை

????????????????????????????????????கிழக்கு மாகா­ணத்தில் பெரும் தியா­கத்­திற்கு மத்­தியில் உரு­வாக்­கப்­பட்ட இன ஒற்­றுமை இன்று சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்டு இனங்­க­ளுக்­கி­டையே விரி­சலை தோற்­று­வித்­துள்­ளது என கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் எம்.எஸ்.உது­மா­லெப்பை தெரி­வித்தார்.
கிழக்கு மாகாண சபையில் நல்­லாட்­சிக்­கான நிதிக் கொள்கை அமுல்­ப­டுத்­தப்­படல் வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் இரா. துரை­ரெட்ணத்தினால் கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வின் போது சமர்ப்­பிக்­கப்­பட்ட தனி நபர் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பன இணைந்து கூட்­டாட்சி அமைத்து 3 மாத காலம் சென்ற நிலையில் ஆளும் தரப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் இரா. துரை­ரெட்ணம் கிழக்கு மாகாண சபையின் செயற்­பா­டுகள் தொடர்­பா­கவும் கூட்­டாட்சி தொடர்­பா­கவும் சந்­தேகம் தெரி­வித்து நல்­லாட்­சிக்­கான கொள்­கையை சரி­யாக வழி நடத்­து­மாறு கிழக்கு மாகாண சபையை கோரும் தனி நபர் பிரே­ர­ணையை சமர்ப்­பிக்கும் நிலை இன்று உரு­வா­கி­யி­ருப்­பது துர­திஷ்­ட­மா­ன­தொன்­றாகும். கிழக்கு மாகா­ணத்தில் கடந்த கால யுத்த சூழ்­நிலை கார­ண­மாக இனங்­க­ளுக்­கி­டையே சந்­தே­கங்­களும் பகை உணர்­வு­களும் விதைக்­கப்­பட்ட சூழ்­நி­லை­யில்தான் கிழக்கு மாகா­ணத்தின் முத­லா­வது மக்கள் பிர­தி­நி­தி­களின் ஆட்சி கடந்த 2008 இல் உரு­வா­கி­யது.
இந்­நி­லையில் முன்னாள் முத­ல­மைச்சர் சந்­தி­ர­காந்தன் தலை­மையில் உரு­வாக்­கப்­பட்ட மாகாண ஆட்­சியில் இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­தி­ய­துடன் கிழக்கில் அபி­வி­ருத்திப் பணி­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்தோம். கிழக்கு மாகாண அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் ஊடாக மூவின மக்­களின் இன ஒற்­று­மைக்கும் வித்­திட்டோம். கிழக்கு மாகா­ணத்தில் மூவின மக்­களும் வாழ்­வ­தனால் மாகாண சபையின் செயற்­பா­டு­களின் மூலம் மூவின மக்­களும் நம்­பிக்கை வைக்கும் நிலை உரு­வா­கி­யது.
இவ்­வாறு பெரும் தியா­கத்தின் மத்­தியில் உரு­வாக்­கப்­பட்ட இன ஒற்­று­மையை தற்­போ­தைய கூட்­டாட்­சியின் கீழ் நடை­பெறும் சில தவ­றான செயற்­பா­டுகள், சமூ­கங்கள் மத்­தியில் சந்­தேக நிலை­மையை உரு­வாக்­கி­யுள்­ளது. எனவே கிழக்கு மாகாண சபையின் செயற்­பா­டு­களில் தொடர்ந்தும் இனங்­க­ளுக்­கி­டையில் சமத்­து­வத்­தையும் ஒற்­று­மை­யையும் வளர்த்­தெ­டுப்­ப­தற்கு நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு வட­மா­காண சபை ஒரு வரு­டத்­திற்கு 6 மில்­லியன் ரூபா அபி­வி­ருத்­திக்­காக வழங்கி வரு­கி­றது. கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு அபி­வி­ருத்தி நிதி­யாக இந்த வருடம் 5 மில்­லியன் ரூபா வழங்­கு­மாறு வரவு செலவு திட்­டத்தில் கோரிக்கை விடுத்தோம். அதற்கு 4 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கித்­த­ரு­வ­தாக சபையில் முத­ல­மைச்­ச­ரினால் தெரி­விக்­கப்­பட்டு அதற்­கான வேலைத்­திட்­டங்­களும் உறுப்­பி­னர்­க­ளிடம் கேட்­கப்­பட்டு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அது தற்­போது நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கிழக்கு மாகாண மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கே இந்த நிலை ஏற்­பட்­டுள்­ளதை நினைத்து நாம் எல்­லோரும் கவ­லைப்­பட வேண்­டி­யுள்­ளது.
மஹிந்த அர­சாங்­கத்­தினால் நிதி ஒதுக்­கீடு செய்த கட்­டி­டங்­களை அண்­மையில் திறந்து வைக்க அட்­டா­ளைச்­சே­னைக்கு வருகை தந்த முத­ல­மைச்சர் கிழக்கில் முஸ்லிம் முத­ல­மைச்­ச­ரான தன்னை இல்­லாமல் செய்­வ­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனை சந்­தித்து சதி செய்­த­தாக முஸ்லிம் மக்கள் மத்­தியில் இன­வாத உணர்வை தூண்டும் முக­மாக முத­ல­மைச்சர் பேசி­யுள்ளார். முத­ல­மைச்சர் மீது நம்­பிக்கை இழந்து அவரின் நய­வஞ்­சக செயற்­பாட்­டால்தான் நாம் எதிர்க்­கட்­சியில் அமர்ந்தோம்.
கிழக்கு மாகாண சபையின் செயற்­பா­டுகள் வெளிப்­ப­டை­யாக தெரி­விக்­கப்­பட வேண்டும். அன்று ஆளுங்­கட்­சியின் அமைச்­ச­ரா­கவும் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரா­கவும் கடமை புரிந்த நான் அன்­றைய கிழக்கு மாகாண சபையின் அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­க­ளையும் செயற்­பா­டு­க­ளையும் நட­வ­டிக்­கை­க­ளையும் வெளிப்­ப­டை­யாக தெரி­வித்தேன்.
முஸ்லிம் காங்­கி­ரஸும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் சேர்ந்து கூட்­டாட்சி உரு­வாக்­கப்­பட்டு 3 மாதங்கள் சென்ற பின்னும் இது­வரை கிழக்கு மாகாண சபையின் செயற்­பா­டுகள் வெளி­வ­ர­வில்லை. அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களும் வெளியே வர­வில்லை. வரவு செலவு திட்ட நிதி ஒதுக்­கீ­டுகள் தொடர்­பாக ஆளுங்­கட்­சி­யி­னர்­க­ளுக்கே விப­ரங்கள் தெரி­யாது என்ற நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. கிழக்கு மாகாண ஆட்­சியின் பங்­கா­ளர்­க­ளான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மக்­க­ளுக்கு பொறுப்புக் கூற வேண்­டிய தார்­மீகக் கட­மையை மறந்து விடக் கூடாது. கிழக்கு மாகாண கூட்­டாட்­சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரியான பாதையில் செயற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. இந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு உள்ளது என்றார்.
»»  (மேலும்)

6/20/2015

| |

கிழக்கு மாகாணசபையில் இனங்களிடையே நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்தும் வகையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் ஆட்சி நடைபெற வேண்டும்.

கிழக்கு மாகாணசபையில்
நியாயம் இல்லாத
அநீதியான
ஆட்சியொன்று
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உண்மையான ஆட்சியை நடாத்தவேண்டிய இரண்டு
பிரதான கட்சிகளும் குழப்ப நிலையினை
ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் முதலமைச்சரும்
கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை
சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை அமர்வில்
நிதியொதுக்கீடு தொடர்பில்
கொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான
விவாதத்தின் போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்இ
ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்ட
வேலைகளை மாற்றம் செய்திருப்பதுதான்
மிகப்பெரிய பிரச்சனையாக நாங்கள்
பார்க்கின்றோம்.
எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வாய்ப்பளிக்காத
வண்ணம் நிதிகளை பங்கீடு செய்வதில் இரண்டு
கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து கவனம்
செலுத்தினால் பல பிரச்சனைகளை
தீர்த்துக்கொள்ள முடியும். இந்த அரசியல்
மாற்றத்திலே நூற்றி ஐம்பது நாட்களை
நெருங்கிய போதுதான் கிழக்கு மாகாணத்தின்
எதிர்க்கட்சித் தலைவரை சபாநாயகர்
அறிவித்திருக்கின்றார். நாங்கள் எதிர்க்கட்சித்
தலைவராக முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர
திசாநாயக்க அவர்களை அறிவிக்க காரணம் அவர்
நேர்மையான மனிதர்.
2014ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட
திட்டங்களே 2015ஆம் ஆண்டு
நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவற்றில் மாவட்ட
பிரச்சினைகளோ இனவிகிதாசார பிரச்சினைகளோ இல்லை.
அதேபோன்று முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை
அவர்களின் கடந்த கால ஒதுக்கீடுகளிலும்
இனவிகிதாசாரம் பேணப்பட்டது.
2008 ஆம் ஆண்டு தொடக்கம் எந்தவித
பிரச்சினையும் இன்றி கிழக்கு மாகாணசபையினை
சரியான முறையில் வழிநடாத்தினோம்.
முன்னுதாரணமாக இந்த மாகாணம் திகழ்ந்தது.
ஆனால் 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி
கூறிவந்ததும் கிழக்கு மாகாணசபையில் நியாயம்
இல்லாதஇ அநீதியான ஆட்சியொன்று
ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான ஆட்சியை
நடாத்த வேண்டிய இரண்டு பிரதான கட்சிகளும்
குழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளது மிகவும்
கவலையளிக்கும் விடயமாகவுள்ளது.
இந்த இடத்தில் உதாரணமாக கூறப்போனால்
சுகாதார அமைச்சரின் செயற்பாடுகளை
கூறவேண்டும். அவர் இந்த அமர்வுக்கு வந்திருக்க
வேண்டும். ஆனால் வரவில்லை. மட்டக்களப்பு
மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட பல
திட்டங்களை அவரது சொந்த ஊரான
சம்மாந்துறைக்கு மாற்றியுள்ளார்.
களுவாஞ்சிகுடிக்கு ஒதுக்கப்பட்ட ஒருகோடி ரூபா நிதியை
அப்படியே கொண்டு சென்று
சம்மாந்துறையில் கட்டியுள்ளார். கிராமிய
வைத்தியசாலைக்கு பராமரிப்புக்கு என ஒதுக்கப்பட்ட
80 இலட்சம் ரூபா நிதியை அப்படியே சம்மாந்துறைக்கு
ஒதுக்கியுள்ளார். அதேபோன்று வைத்தியர்களின்
கட்டிடத்துக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி ருபா
சம்மாந்துறையில் அவரது வைத்தியசாலைக்கும்
ஆயுர்வேத வைத்தியசாலைக்கும் எடுக்கப்பட்டுள்ளது.
அவரது அரசியலை பயன்படுத்தி இன்னுமொரு
மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்திகளை
பிடிங்கிக்கொண்டு சென்று அவரது
கிராமத்தினை அபிவிருத்தி செய்து அதனை
அரசியலுக்காக பயன்படுத்துவது என்பது
ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும். இது
மாவட்ட விகிதாசாரத்தினை பாதிக்கும்இ அத்துடன்
ஒரு இனத்தினை இன்னுமொரு இனம் சந்தேகம்
கொண்டுபார்க்கும் நிலையேற்படுகின்றது.
இதனை முதலமைச்சரும் அமைச்சரவையுமே
பொறுப்பேற்க வேண்டும்.
இந்த மாகாணசபை முன்னுதாரணமான
மாகாணசபையாக இயங்க வேண்டுமானால்
இதனை மீள்பரிசீலணை செய்ய வேண்டும். கிழக்கு
மாகாணசபையினால் முன்மொழியப்பட்ட
திட்டங்களை அப்பகுதிலேயே நடைமுறைப்படுத்த
வேண்டும்.சுகாதார துறையிலேயே இவ்வாறான
மோசமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
நாங்கள் நியாயமான விடயங்களை
சுட்டிக்காட்டும்போது அதனை ஏற்றுக்கொள்ள
வேண்டும். ஆனால் முதலமைச்சர் இந்த
மாகாணத்தில் மீண்டும் இரத்தக்களறி ஏற்பட
போகின்றதுஇ நாங்கள் கையாலாகாத அரசியல்
செய்கின்றோம் என்ற பத்திரிகைகளில் அறிக்கைகளை
வெளியிடுகின்றார். நாங்கள்
அவ்வாறானவர்கள் அல்ல.
இன்றுள்ள தமிழ் தலைவர்களில் முதுகெழும்புள்ள
தலைவராகஇ மக்கள் நம்பிக்கை கொள்ளும்
வகையிலேயே நாங்கள் அரசியல் பணியை
மேற்கொண்டு வருகின்றோம்.
தெளிவற்ற விடயங்களை இனகுரோதங்களை
கொண்டதான அடிப்படையில் அறிக்கைகளை
பத்திரிகைகளில் வெளியிடுவதை முதலமைச்சர்
தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள்
நியாயமான விடயங்களை பேசுகின்றோம். அதனை
மறுப்பதாக இருந்தால் அதனை ஆவணங்களுடன்
வெளிபடுப்படுத்துங்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும்இ ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரசும் ஒரு நிலைக்கு வரும்போதே எதிர்க்கட்சிக்கு
எதுவித வேலையும் இல்லாத நிலையேற்படும்.
முக்கியமாக 2015ஆம் ஆண்டுவந்துள்ள
குளறுபடிகளை இல்லாமல் செய்வதற்கு
குழுவொன்றினை அமைக்க வேண்டும். அதற்கு
அமைச்சர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்த ஆண்டின் நிதி ஆண்டு அரை வருடம் கடந்து
விட்டது.1200மில்லியன் ரூபா கிழக்கு
மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்டது. அதில் நூறு
மில்லியன் ரூபாதான் வந்து சேர்ந்துள்ளது. தற்போதைய
நாட்டின் நிதியமைச்சர் தேவையான பணம் உள்ளது
என்கிறார். இந்த நாட்டில் உள்ள மக்களை
ஏமாற்றும் நல்லாட்சியே இங்கு நடைபெற்று
வருகின்றது.
ஆகவே கிழக்கு மாகாணசபையில் இனங்களிடையே
நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்தும் வகையிலும்
வெளிப்படைத்தன்மையுடனும் ஆட்சி நடைபெற
வேண்டும். இங்கு ஏற்படும் பலவீனத்துக்கு அடிப்படை
காரணம் அமைச்சரவையில் இணைந்து
செயற்படாத தன்மையும் நெருக்கமான
கருத்துப்பரிமாற்றமும் வெளிபடுத்தன்மையும்
தோன்றாமையே காரணமாகும். நான் இங்கு
குறிப்பிட்ட குற்றசாட்டுகளுக்கு ஆதாரங்கள்
என்னிடம் இருக்கின்றது எனத்
தெரிவித்துள்ளார்.
»»  (மேலும்)

6/18/2015

| |

மாதர் சங்க தலைவிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஜோன்சன் திலீப் குமாரிற்கு எதிராக சிறுவர் துஸ்பிரயோகம் ஒன்றினை கல்லடி உப்போடை மாதர் சங்கத் தலைவி செல்வி மனோகர் 2013ம் ஆண்டு வெளிக்கொணர்தார்.இவ்வழக்கு சம்பந்தப்பட்ட  முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பிணையில் விடுவிக்கப்பட்;ட நிலையில் இக் குற்றச்சாட்டை வெளிப்படுத்திய மாதர் சங்க தலைவிக்கு எதிராக தன்னை தாக்க வந்ததாக கூறி பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவ் வழக்கு கடந்த ஒரு வருட காலமாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இதற்கான தீர்ப்பானது 16.06.2015 அன்று பொய்யான குற்றச்சாட்டென நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
»»  (மேலும்)

| |

2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையான நல்லாட்சி நடத்திக்காட்டினோம்.


16.06.2015 அன்று கிழக்கு மாகாணசபை அமர்வில் கிழக்கு மாகாண வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார அமைச்சு மூலம் ஒதுக்கப்பட்ட பெருந்தொகையான நிதி திட்டமிட்ட முறையில் அம்பாறை மற்றும் சம்மாந்துறைக்கு மாற்றப்பட்டது தொடர்பாக வெளிப்படையான அறிக்கை இடப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாணத்தில் நிதி ஒதுக்கீட்டிலும், வேலை வாய்ப்புக்களின் போதும் இன வீதாசாரம் போணப்பட வேண்டும் எனவும் சி.சந்திரகாந்தனினால் தனி நபர் பிரரேரணை கிழக்கு மாகாணசபையில் முன்வைக்கப்பட்டது. இப் பிரேரணை தொடர்பாக இடம் பெற்ற விவாதத்தின் போது குறிக்கிட்ட கோ.கருணாகரன் (ஜனா) அவ்வாறு நிதிகள் மாற்றப்படவில்லை கிழக்கில் இணக்க ஆட்சி சிறப்பாக நடை பெறுகின்றது என நியாயப்படுத்த முற்பட்ட போது கருத்து தெருவித்த சி.சந்திரகாந்தன் நான் முதுகெலும்பு இல்லாத ஆட்சி நடத்தவில்லை 2008 – 2012 வரை மூன்று சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையான நல்லாட்சி நடத்திக்காட்டினோம்.
இன முறுகலோ அரசியல் பேதங்களோ அன்று காணப்படவில்லை ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை வைத்துக் கொண்டு 07 ஆசனங்களைக் கொண்டுள்ள ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரசின் இழுப்புக்கு இழுபடுகின்றீர்கள் இவ்வாறு முதுகெலும்பு இல்லாத ஆட்சியை நாங்கள் நடத்தவில்லை  வாக்களித்த  சமுகத்தினை நடுக்கடலில் தவிக்க விட்டு பெயரளவில் கூக்குரலிட்டுத் திரிவதில் எந்தப் பயனும்  ஏற்படப் போவதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் போர்வைக்குள் மறைந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ரெலோ தனித்து நின்று வெற்றி பெற்றுக் காட்டுங்கள் மக்கள் வாக்களிப்பார்களா? அல்லது உங்களை விரும்புகின்றார்களா? என்று அப்போது தெரியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அப்படியல்ல மக்களால் ஏற்றிக் கொள்ளப்பட்டு மக்களுக்காக தனித்து நின்று குரல் கொடுக்கின்ற கட்சி என்பதனை யாரும் மறந்து விட கூடாது கிழக்குமாகாண நிதி ஒதுக்கீட்டில் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக சுகாதார அமைச்சின் நிதி ஓதுக்கீட்டில் பாதிக்கப்படுகின்றது என்றால் கிழக்கில் ஆளும் கட்சிக்கு முட்டுக் கொடுக்கின்ற நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும் மாறாக பிள்ளையான் சொல்கின்றான் என்பதற்காகவோ அல்லது அமைச்சரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவோ ஓர் இனம் பாதிக்கப்படும் நிலையில் உண்மையை மறைத்து முட்டுக் கொடுக்க முற்படக் கூடாது மக்களின் வாக்குகளைப் பெற்றுவந்த அரசியல் தலைமைகள் உண்மையாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

6/17/2015

| |

இலங்கை - இந்தியாவுக்கு இடையில் நெடுஞ்சாலை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெடுஞ்சாலையொன்றை அமைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்துக்கான புதிய பரிமாணத்தை உருவாக்க இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. இந்தியாவுடன் இலங்கையை தரைவழியாக இணைப்பதற்காக இந்திய பெறுமதியில் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது என இந்திய மத்திய அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா நேற்று செவ்வாய்க்கிழமை (16) கையெழுத்திட்டது. அப்போது இந்தியா - இலங்கையை தரைவழியாக இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விவரித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்திய பெறுமதியிலான 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா - இலங்கையை இணைக்கும் திட்டம் உருவாக்கப்படுகிறது. தமிழகத்தின் தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது அல்லது பாம்பன் நகரையும் தலைமன்னாரையும் (29 கிலோமீற்றர்) இணைப்பது என்பது ஒரு திட்டம். இந்த இரண்டும் பொருந்தாத சமயத்தில் கடலின் கீழே சுரங்கப்பாதை அமைத்து இணைக்கவும் இந்தியா திட்டமிடப்பட்டு வருகிறது' என நிதின் கட்காரி கூறினார். - See more at: http://www.tamilmirror.lk/148511#sthash.bbH4co43.dpuf
»»  (மேலும்)

6/16/2015

| |

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அமைச்சர் திகா..?

Thigambam MP 01அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இதனை சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை கட்சிகளின் யோசனைகள் 20ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்படாவிட்டால், அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும்.
சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தவறினால் அரசாங்கத்தை விட்டும், அமைச்சுப் பதவியை விட்டும் விலகத்தயார்.
சிறுபான்மை இன சமூகங்கள் தொடர்பில் நிறைவேற்றப்பட வேண்டிய சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தொடர்ந்தும் நம்புகின்றேன்.
நுவரெலியா மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கான ஆசனங்களின் எண்ணிக்கை நான்காக அறிவிக்கப்பட வேண்டும்.
கொழும்பு, ஹங்குராங்கெத்த, வலபனை, கண்டி, பதுளை
»»  (மேலும்)

| |

ஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கு 72 வயது

ஆறிலிருந்து  எழுபதையும்  கடந்து  தொடரும் கலைப்பயணத்தில்   மகாபாரதம்  சார்வாகனனை எமக்கு  படைப்பிலக்கியத்தில்  வழங்கிய  பன்முக ஆளுமை
                                              - முருகபூபதி
ProfMounakuruஇலக்கியப்பிரவேசம்   செய்த  காலப்பகுதியில்  சென்னை   வாசகர் வட்டம்   வெளியிட்ட அறுசுவை  என்ற  ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற   நூலைப்படித்தேன்.   அதில்  சார்வாகன்  என்ற  பெயரில் ஒருவர்  அமரபண்டிதர்  என்ற  குறுநாவலை   எழுதியிருந்தார்.
அவர்   ஒரு  மருத்துவநிபுணர்  என்ற  தகவல்,   நான் அவுஸ்திரேலியாவுக்கு  வந்த பின்னர்தான்  தெரியும்.   அவர் தொழு நோயாளர்களுக்கு  சிறந்த  சிகிச்சையளித்தமைக்காக  இந்திய அரசினால்   பத்மஸ்ரீ  விருதும்  வழங்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டவர். எங்கள்    மூத்த  தமிழ்  அறிஞர்  கி. இலக்ஷ்மண  அய்யரின் துணைவியார்   பாலம்  அவர்களின்  ஒன்றுவிட்ட  சகோதரர். மெல்பனுக்கு   அவர்  வந்தபொழுது   எனக்கு  அறிமுகப்படுத்தினார் திருமதி  பாலம்  லக்ஷ்மணன்.
 சார்வாகன்  அவரது  இயற்பெயரல்ல.  அந்தப்  புனைபெயரின் பின்னாலிருந்த   கதையை    தமிழக  சார்வாகனே   சொன்னார்.
மகாபாரதத்தில்    குருஷேத்திர  களத்தில்  கௌரவர்களை   அழித்து வெற்றிவாகைசூடிய   பாண்டவர்கள்,   தருமருக்கு  பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில்    அந்தச் சபையிலிருந்து  எழுந்து  அந்த  வெற்றியின் பின்னாலிருக்கும்    பேரழிவை   சுட்டிக்காண்பித்து  கடுமையாக விமர்சித்தவர்   சார்வாகன்  என்ற  முனிவர்.   அவரது  கூற்றால் வெகுண்டெழுந்த  மக்கள்  அவரை    அடித்தே  கொன்றுவிட்டார்களாம். சார்வாக  மதம்  என்ற  புதிய  கோட்பாடு  உருவானது  என்றும் பாஞ்சாலியும்   அந்த   மார்க்கத்தை  பின்பற்றியதாக  கதை இருப்பதாகவும்   சார்வகன்  என்ற  புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர்    ஸ்ரீனிவாசன்  சொன்னபொழுது  மகாபாரதத்தின் மற்றுமொரு  பக்கத்தை   தெரிந்துகொண்டேன்.
துணிவுடன்  தனக்கு  சரியெனப்பட்டதைச் சொன்ன,  சார்வாகன் பற்றிய    முழுமையான  கதையை    பல  வருடங்களின்  பின்னரே இலக்கியப்பிரதியாக  படித்தேன்.
கடந்த   9-06-2015  ஆம்  திகதி  தமது   72   வயது   பிறந்த  தினத்தை கொண்டாடிய    பேராசிரியர்  சின்னையா   மௌனகுரு அவர்களைப்பற்றித் தெரிந்தவர்கள்,  அவர் சார்ந்த   நாடகம்,   கூத்து, விமர்சனம்,    கல்வி   முதலான  துறைகளின்  ஊடாகத்தான்   அவர் பற்றிய    பதிவுகளை    எழுதுவார்கள்.   பேசுவார்கள்.  ஆய்வுசெய்வார்கள்.
ஆனால் ,  அவருக்கும்  படைப்பிலக்கிய  பக்கம்  ஒன்று  இருக்கிறது என்பதை   கலை - இலக்கிய  உலகிற்கு  தெரியப்படுத்தியது பேராசிரியரின்   மணிவிழாக் காலத்தில்  வெளியான  மௌனம் என்னும்   சிறப்பு மலர்.
2003   ஆம்   ஆண்டு  வெளியான  அந்த  மலர்  எனது  கைக்கு கிடைப்பதற்கு ProfMounakuru.01jpg   முன்னர்  மௌனகுரு  எழுதிய  சார்வாகன்  குறுநாவல் பற்றி    சிலர்  விதந்து  சிறப்பித்து  என்னிடம்  தொலைபேசி ஊடாகச்சொன்னபொழுது  -  2004  ஆம்    ஆண்டில்  அவுஸ்திரேலியா கன்பரா  மாநிலத்தில்   நடந்த  எமது  நான்காவது  எழுத்தாளர் விழாவுக்கு    வருகைதந்த  சகோதரி -  சிரேஷ்ட  ஊடகவியலாளர் தேவகௌரியிடம்   சொல்லி    எனக்கு  ஒரு  பிரதியை   தருவித்தேன்.
இம்மலருக்கு   பதிப்புரையும்  அறிமுகவுரையும்  எழுதியிருக்கும் பிரதேச   செயலாளர்  வெ.தவராஜா,   ஐந்து  பகுதிகளைக்கொண்டது எனக்குறிப்பிட்டு -  மலரின்    ஐந்தாவது  பகுதி  பேராசிரியரின் படைப்புகளை    உள்ளடக்கியது  என்றும்  அது    அவருடை இன்னுமொரு    பக்கத்தைக்காட்டும்  எனவும் குறிப்புணர்த்துவதிலிருந்து,    மௌனகுரு   ஈழத்து  இலக்கிய வளர்ச்சியிலும்    காத்திரமான  பங்களிப்பை    வழங்கியவர்  என்ற பெரும்பாலானவர்களுக்குத்   தெரியாத  மற்றும்  ஒரு  விடயத்தையும் புரிந்துகொள்கின்றோம்.
சார்வாகன்   என்ற   அவருடைய  குறுநாவல்  படைப்பிலக்கியத்தில் மிக    முக்கியமானதொரு  கதை.   எழுத்தாளர்கள்,   வாசகர்கள் அவசியம்   படிக்கவேண்டியது.
அண்மைக்காலங்களில்   என்னுடன்  இலங்கையிலிருந்து தொடர்ச்சியான    மின்னஞ்சல்  தொடர்பில்  இருப்பவர்களில் பேராசிரியர்   மௌனகுரு  முக்கியமானவர்.    அவருக்கும்  எனக்குமான நட்புறவுக்கு   நான்கு  தசாப்தகாலம்  கடந்துவிட்டது.   இத்தனைக்கும் நான்    அவரது  மாணவனும்  இல்லை.  அவரது அரங்காற்றுகைகளுடன்   தொடர்புகொண்டவனுமில்லை. இலக்கியம்தான்   எமது  பாலம்.
அவர்   சித்திரலேகாவை   திருமணம்  செய்துகொண்ட  1973 காலப்பகுதியில்  அவர்களை  தம்பதி  சமேதராக  நான்   சந்தித்த இல்லம்    கொழும்பில்  கலை,   இலக்கியவாதிகள்  அடிக்கடி  சந்திக்கும்   ஒரு  கலாபவனம்  ஆகும்.
பாமன்கடையில்  அப்பல்லோ   சுந்தா  சுந்தரலிங்கம்  தம்பதியர்  தமது மகளுடனும்    கவிஞர்கள்  முருகையன்,   சிவானந்தன்  ஆகியோரும் தங்கியிருந்த   அந்த  மாடி  வீட்டில்தான்  மௌனகுருவும் சித்திரலேகாவும்  இருந்தனர்.   அங்கு  அடிக்கடி  சந்திப்புகள்  நடக்கும். யாழ்ப்பாணத்தில்    பல்கலைக்கழக  வளாகம்  அமைக்கப்பட்டதும் கொழும்பிலிருந்த  பலரை   தம்முடன்  அழைத்துக்கொண்டு  சென்றார் பேராசிரியர்  கைலாசபதி.   அவ்வாறு   மௌனகுருவும்  சித்திரலேகாவும்  அங்கு  இடம்பெயர்ந்து  சென்றபின்னரும் எமக்கிடையிலான   நட்புறவு  தொடர்ந்தது.
1975  இல்  வெளியான  எனது  முதலாவது  சிறுகதைத்தொகுதி சுமையின்  பங்காளிProfMounakuru.03jpgகள் -  மல்லிகைப்பந்தல்  சார்பாக  யாழ். வீரசிங்கம்   மண்டபத்தில்  வெளியிடப்பட்ட  வேளையில்  வருகைதந்து    உரையாற்றி  ஷோசலிஸ  யதார்த்தப்பார்வை   குறித்து தனது   பார்வையை   சொன்னவர்.  அவருடனான  நட்புறவு  நான் புலம்பெயர்ந்துவந்த    பின்னரும்  இன்றுவரையில்  நீடிக்கிறது.
எனக்கு   மௌனகுருவைப்பற்றி  நினைக்கும்தோறும்  சிறுவயதில் நான்  விரும்பி  ஓடிய  அஞ்சலோட்டம்தான்  நினைவுக்கு  வருகிறது. மைதானத்தில்  ஒருவரால்  தொடங்கப்படும்  அஞ்சல்  ஓட்டம் அந்தக்கோலுக்காக  துடிப்போடு  காத்து  நிற்கும்  மற்றவர்களின் தொடர்  ஓட்டத்தால்  முடித்துவைக்கப்படும்.   அதே  சமயம்  மீண்டும் ஓடலாம்   என்ற  எண்ணத்தையும்  தோற்றுவிக்கும்.
1964   ஆம்  ஆண்டு  காலப்பகுதியில்   பேராசிரியர்  சு. வித்தியானந்தன்   உருவாக்கிய   இராவணேசன்  கூத்தில்  தமது பல்கலைக்கழக    மாணவப் பருவத்தில்  இராவணேசனாக  தோன்றிய  மௌனகுரு   அவர்கள்  தொடர்ந்தும்  அதனை   முன்னெடுத்து வந்ததுடன்    தமது  மாணாக்கர்களையும்  பயிற்றுவித்து அரங்காற்றுகை      நிகழ்த்திவருகிறார்.   தமது  70  வயதிலும்  அந்த வேடத்தில்    உற்சாகமாக  திகழ்ந்தார்.   இந்த  அஞ்சலோட்டம்  அரங்காற்றுகையாக   தொடர்கிறது.    தலைமுறைகள்  கடந்தும் பேசப்படுகிறது.
அவரிடம்   கல்வித்துறை   சார்ந்து  பயின்ற  எனது  மனைவி  மாலதிக்கு   அவர்  மீதுள்ள  உயர்ந்த   மரியாதையை   அவர்பற்றி வீட்டில்  நாம்  நினைக்கும் வேளைகளில்  சொல்வதிலிருந்தும் மெல்பனில்   வதியும்  சகோதரி  திருமதி  ரேணுகா  தனஸ்கந்தா தானும்    அவருடைய  மாணவிதான் எனப்பெருமிதமாகச்  சொல்வதிலிருந்தும்    -  சமீபத்தில்  அவருடைய  மாணக்கர் மோகனதாசன்   தினக்குரலில்  எழுதியிருந்த  கட்டுரையிலிருந்தும் மணிவிழா  மலரில்  அவர்  பற்றி  பலரும்  எழுதியிருக்கும் ஆக்கங்களிலிருந்தும்   அவர்  எம்மத்தியில்  வாழும்  பெறுமதியான மனிதர்    என்பதற்கு  நிரூபணம்  என்றே    கருதுகின்றேன்.
இறுதியாக   கடந்த  (2015)  பெப்ரவரியில்   அவரை   மட்டக்களப்பில் சந்தித்தேன்.    அச்சமயம்  அங்கு  வெளியாகும்  மகுடம்  இதழை அதன்   ஆசிரியர்  மைக்கல்  கொலினிடம்  பெற்றுக்கொண்டேன். அதில்    வெளியாகியிருந்தது  நீண்டதொரு  நேர்காணல்.
சங்க  காலம்  முதல்  சமகாலம்  வரையில்  என்ற  தலைப்பில் இடம்பெற்ற    அந்த  நேர்காணலில்  பேராசிரியர்  செ. யோகராசா கேட்டிருந்த   கேள்விகளும்,  அதற்கு  மௌனகுரு  வழங்கிய பதில்களும்   கலை   இலக்கிய  வாசகர்களுக்கு  மிகுந்த பயனைத்தரவல்லவை.    மெல்பன்  திரும்பியதும்  அதனை முழுமையாக    படித்துவிட்டு  மௌனகுருவுக்கு  22-03-2015  ஆம்   திகதி   ஒரு   மடல்  வரைந்தேன்.   அதில்    இவ்வாறு  குறிப்பிட்டேன்.Ravanesan
  தங்களின்   நேர்காணல்    மகுடம்  இதழில்   வெகு  சிறப்பாக  வந்துள்ளது.  முதலில்    தங்களுக்கும்  மகுடம்  இதழுக்கும்  நண்பர்  யோகராசாவுக்கும்  வாழ்த்துக்கள்.    நேர்காணலை   எவ்வாறு  பதிவுசெய்யவேண்டும்  என்பதற்கு  சிறந்த   உதாரணமாக  தங்களுடனான   நேர்காணல்  அமைந்திருந்தது.   ஆனால் - மகுடம்  போன்ற   சிற்றிதழ்களுக்கும் -  குறைந்த  வாசிப்பு பரப்புக்கும்  மாத்திரமே   ஏற்றதாக  இருக்கும்.  வெகுஜனபத்திரிகைகளுக்கு இதன்   பெறுமதி  தெரியாது.   சிலவேளை   கைலாஸ்   இருந்திருப்பின் - அதுவும்  ஏதும்  பத்திரிகையில்  இருந்திருப்பின்  இதுபோன்ற  நேர்காணல்   சாத்தியம்.    இல்லையேல்    தொடக்கத்திலும்     இடையிலும்     முடிவிலும்  வெட்டிக்கொத்தி    அரைகுறையாக   பிரசுரித்திருப்பார்கள்.   பக்கப்பிரச்சினை   என்று  சமாதானம்     கூறுவார்கள்.     நீங்கள்   பல   விடயங்களை   மனம்  திறந்து    சொல்லியிருக்கிறீர்கள்.   அத்துடன்  எவரையும்  காயப்படுத்தாமல்    கண்ணியமாக    சொல்லியிருக்கிறீர்கள்.   இந்த  நேர்காணல்     பரவலான  வாசிப்புக்கு    அனுப்பப்படல்   வேண்டும்.   ஏதும்     இணைய    இதழ்களில்   மறுபிரசுரம்    செய்வதற்கு  ஆவன செய்யுங்கள்.
புலம்பெயர்ந்தவர்களின்    பிள்ளைகளின்  எதிர்காலத்தமிழ்  பற்றியும்    சொல்லியிருந்தீர்கள்.    மெத்தச்சரியான  கூற்று.   மொழிபெயர்ப்பு    பற்றியும்     சொல்லியிருந்தீர்கள்.  அது  பற்றி  இன்னும்   மேலும்    நீங்கள்   சொல்லியிருக்கலாம்  போலத்தோன்றியது.    மொத்தத்தில்  அந்த    நேர்காணல்    எனது  மனதுக்கு     நிறைவானது.  
-----
கடந்த  12  ஆம்   திகதி  குறிப்பிட்ட  நீண்ட  நேர்காணல்  தனிநூலாக மட்டக்களப்பில்   பேராசிரியரின்  பிறந்த  நாளை   முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.    இதனை   மகுடம்  நடத்தி  பேராசிரியருக்கு மகுடம்    சூட்டியிருக்கிறது.
அவரது   ஆற்றுகையிலிருந்தும்  ஒரு  பெயரை  அவுஸ்திரேலியா இரவல்   வாங்கியிருக்கிறது  என்பதையும்  இங்கு  சொல்லத்தான் வேண்டும்.
அவர்  இலங்கையில்  மட்டக்களப்பு  புனித  மைக்கேல்  கல்லூரி மாணாக்கர்களுக்ProfMounakuruBookCoverjpgகாக   எழுதி  இயக்கியது  வேடனை   உச்சிய வெள்ளைப்புறாக்கள்.   எமக்கு    நன்கு  தெரிந்த  ஒற்றுமையை வலியுறுத்தும்    கதைதான்.   மௌனகுரு    அதனை   எவ்வாறு அரங்காற்றினார்   என்பது  தெரியாமலேயே   அந்தப்பெயரை தலைப்பாகக்கொண்டு   சிட்னி  கலைஞர்  சந்திரஹாசன்,  ஒரு கவிதை    நாடகம்  எழுதினார்.   அதில்  ( மெல்பனில்)  எனது பிள்ளைகளும்   நண்பர்களின்    பிள்ளைகளும்  நடித்தனர்.  ஆனால்,  இந்தத்தகவல்    மௌனகுரு  அறிவாரா...? என்பது எனக்குத்தெரியவில்லை.
வழக்கமாக   நாம்   நாட்டுக்கூத்து  என்றே  அழைக்கின்றோம்.   ஆனால் அப்படியல்ல  கூத்து  என்றே    எழுதுங்கள்,  பேசுங்கள்  என்று எம்மைத் திருத்தியவர்  அவர்.
எப்படி  சார்வாகன்  ஊடாக   சமூகத்துக்கு  ஒரு  செய்தியை சொன்னாரோ  அதுபோன்று   இராவணேசன்  மனைவி   மண்டோதரி ஊடாகவும்   சமூகத்துக்கு  முக்கியமான  செய்தியை   வெளியிட்டார்.
சார்வாகன்  போரின்  அழிவைச்  சாடினார்.   மண்டோதரி  போரினால் வரக்கூடிய  இழப்புகளைச் சொன்னாள்.  இரண்டு  செய்திகளும் மௌனகுருவின்  எழுத்திலும்  ஆற்றுகையிலும்  அழுத்தமாக பதிந்துள்ளன.
கொழும்பில்   அமரர்  நீலன்  திருச்செல்வம்  நினைவு அமைப்பினருக்காக  அவர்  இராவணேசனை   மீண்டும்  2010  இல் நவீனப்படுத்தி   அரங்கேற்றினார்.   அதன்  பின்னால்  பலருடைய உழைப்பு    இருந்ததையும்  அவர்  சுட்டிக்காட்டி  மேடையில் அவர்களை    அறிமுகப்படுத்தினார்.   சுமார்  இரண்டு  மணிநேரங்கள் இடம்பெறும்   இராவணேசன்  சிறந்த  ஒளிப்பதிவுடன்  எமக்கு இறுவட்டாக    கிடைத்துள்ளது.    அத்துடன்  மௌனகுரு  தமது  70 வயதில்    பங்கேற்ற  இராவணேசனும்  மண்டோதரியும்  சந்திக்கும் இறுதிக்காட்சி   சுமார்  20   நிமிடங்கள்.    இரண்டையும்  பார்க்கும் சந்தர்ப்பம்  அவுஸ்திரேலியாவில்  பலருக்கும்  கிடைத்தது.
1964   ஆம்  ஆண்டு  முதல்  2015  வரையில்   அஞ்சலோட்டமாகவே தொடர்த்து   வருகிறான்  இராவணேசன்.   அந்த  தொடர்  ஓட்டத்தில் பேராசிரியர்  மௌனகுருவின்  அயராத  உழைப்பினைக் காண்கின்றோம்.
அகவையில்  73  ஆம்   வயதில்  காலடி   எடுத்துவைத்துள்ள அவர் நல்லாரோக்கியத்துடன்   மேலும்   பல்லாண்டு  வாழ்ந்து அரங்காற்றுககைளில்   மேலும்   பல  மாணாக்கர்களை  உருவாக்குவார் என்ற   நம்பிக்கையுடன்  வாழ்த்துகின்றோம்.
-----0---
letchumananm@gmail.com
நன்றி *தேனீ 
»»  (மேலும்)

6/14/2015

| |

20க்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்: ஹக்கீம்

Résultat de recherche d'images pour "ரவூப் ஹக்கீம்"சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் கருத்துகளை கவனத்தில் கொள்ளாது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை வர்த்தமானியில் பிரசுரித்தால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமாறு ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தங்களுடைய கருத்துகள் தொடர்பில் பரிசீலனைக்கு உட்படுத்தவிட்டால்  அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்தை மூன்றிரலிண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதனை தடுப்பதற்கு ஆகக்கூடிய நடவடிக்கையை எடுக்கபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
»»  (மேலும்)

6/13/2015

| |

கிழக்கு மாகாண சபை ஊடாக தமிழர்களின் நில,நிர்வாக,நிதி ஆக்கிரமிப்புக்களையும் அத்துமீறல்களையும் அனுமதிக்கமுடியாது

கிழக்கு மாகாண சபை ஊடாக தமிழர்களின் நில,நிர்வாக,நிதி ஆக்கிரமிப்புக்களையும் அத்துமீறல்களையும் அனுமதிக்கமுடியாது
நல்லாட்சி என்று கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைமுக ஆதரவுடன் தமிழ் மக்களின் அடிக்கடை உரிமைகளையும்,அபிவிருத்தியையும் திட்டமிட்ட வகையில் தட்டிப்பறிப்பதை வன்மையாக கண்டித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பிரிவினரால் மட்டக்களப்பு நகரில் மக்கள் விழிப்பூட்டல் துண்டுப் பிரைசுரம் (13.06.2015)வெளியிடப்படட்து. இத் துண்டுப் பிரசுரத்தில் சுட்டிக் காட்ப்பட்டுள்ள மேற்படி விடயங்கள் உண்மைக்கு முறணானதாக இருப்பின் சம்மந்தப் பட்டவர்கள் நேரடி விவாதத்திற்கு வருமாறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளது.



2015ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபை வரவு செலவு திட்டத்தில் தமிழ் பகுதிகள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிக மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக களுவாஞ்சிக்குடி சமூகசேவைதிணைக்களத்திற்குஒதுக்கப்பட்டபணம் சம்மாந்துறைபிரதேசத்திற்குமாற்றப்பட்டுள்ளது.
அதேபோன்றுமட்டக்களப்புசுகாதாரபயிற்சி நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபா பணம் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்கும்இ ஆயுள்வேத வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளது.
கிழக்குமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் எவ்வித வெளிப்படுத்தலுமே பேணப்படாமல் முதலமைச்சரும்இ மாகாணசுகாதார அமைச்சரும் இணைந்து திட்டமிட்;ட வகையில் நிதி ஒதுக்கீட்டினை அம்பாறை முஸ்லிம் பகுதிகளுக்கும்இ மட்டக்களப்பு முஸ்லிம் பகுதிகளுக்கும் கொண்டு செல்கின்றனர் .இதனை மாகாண சபை வாரியத்;தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு அமைச்சர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.
இதனைவிட மாகாணசபையினால் வழங்கப்பட்டு வருகின்ற நியமனங்களில் தமிழ் இளைஞர்இயுவதிகள் புறக்கணிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் நியாயமாக நடக்கின்ற தமிழ் உயர் அதிகாரிகள் முதலமைச்சரின் பணிப்புரையினால் இடமாற்றம் செய்யப்பட்டு அவ்விடத்திற்கு தமது முஸ்லீம் சமூகத்தினரை நியமித்து மாகாணத்தின் நிதிஇநிருவாக மூல ஆதாரங்களையும் தம்வசப்படுத்தி வருகின்றனர்.
ஏறாவூரைச் சேர்ந்த 53 பேருக்கு அரசியல் ரீதியான நியமனம் வழங்க முயற்ச்சித்த போது அதற்கு தடையாக இருந்த தமிழ் அரச உயர் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் இது தான் முஸ்லிம் காங்கிரசும்இதமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து நடாத்துகின்ற நல்லாட்சியா?
மாகாண சபை இவ்வாறு தமிழர்களின் உரிமையை பறித்துக் கொண்டிருக்க மறுபுறம் வாழைச்சேனையில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அடாத்தாக கையகப்படுத்தி வருகின்றனர். முறாவோடை பிரதேசத்தில் தமிழருக்கு சொந்தமான காணிகள் முஸ்லிம்களினால் வேலியிடப்பட்டு தமது காணிகள் என உரிமைகோரி வருகின்றனர்.
இப்பிரச்சனை 2010ம் ஆண்டு எமது கட்சித் தலைவர் மாகாண முதலமைச்சராக இருந்த போது சுமுகமாக தீர்வு கண்டு நீதிமன்ற உதவியுடன் தமிழர்களின் காணிகளை பாதுகாநல்லாட்சி என்று கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைமுக ஆதரவுடன் தமிழ் மக்களின் அடிக்கடை உரிமைகளையும்இ அபிவிருத்தியையும் திட்டமிட்ட வகையில் தட்டிப்பறிப்பதை வன்மையாக கண்டித்து இன்று 13.02.2015ம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பிரிவினரால் மட்டக்களப்பு நகரில் மக்கள் விழிப்பூட்டல் துண்டுப் பிரைசுரம் வெளியிடப்படட்து. இத் துண்டுப் பிரசுரத்தில் சுட்டிக் காட்ப்பட்டுள்ள மேற்படி விடயங்கள் உண்மைக்கு முறணானதாக இருப்பின் சம்மந்தப் பட்டவர்கள் நேரடி விவாதத்திற்கு வருமாறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளது.
2015ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபை வரவு செலவு திட்டத்தில் தமிழ் பகுதிகள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிக மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக களுவாஞ்சிக்குடி சமூகசேவைதிணைக்களத்திற்குஒதுக்கப்பட்டபணம் சம்மாந்துறைபிரதேசத்திற்குமாற்றப்பட்டுள்ளது.
அதேபோன்றுமட்டக்களப்புசுகாதாரபயிற்சி நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபா பணம் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்கும்இ ஆயுள்வேத வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளது.
கிழக்குமாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் எவ்வித வெளிப்படுத்தலுமே பேணப்படாமல் முதலமைச்சரும்இ மாகாணசுகாதார அமைச்சரும் இணைந்து திட்டமிட்;ட வகையில் நிதி ஒதுக்கீட்டினை அம்பாறை முஸ்லிம் பகுதிகளுக்கும்இ மட்டக்களப்பு முஸ்லிம் பகுதிகளுக்கும் கொண்டு செல்கின்றனர் .இதனை மாகாண சபை வாரியத்;தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு அமைச்சர்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.
இதனைவிட மாகாணசபையினால் வழங்கப்பட்டு வருகின்ற நியமனங்களில் தமிழ் இளைஞர்இயுவதிகள் புறக்கணிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் நியாயமாக நடக்கின்ற தமிழ் உயர் அதிகாரிகள் முதலமைச்சரின் பணிப்புரையினால் இடமாற்றம் செய்யப்பட்டு அவ்விடத்திற்கு தமது முஸ்லீம் சமூகத்தினரை நியமித்து மாகாணத்தின் நிதிஇநிருவாக மூல ஆதாரங்களையும் தம்வசப்படுத்தி வருகின்றனர்.
ஏறாவூரைச் சேர்ந்த 53 பேருக்கு அரசியல் ரீதியான நியமனம் வழங்க முயற்ச்சித்த போது அதற்கு தடையாக இருந்த தமிழ் அரச உயர் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் இது தான் முஸ்லிம் காங்கிரசும்இதமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து நடாத்துகின்ற நல்லாட்சியா?
மாகாண சபை இவ்வாறு தமிழர்களின் உரிமையை பறித்துக் கொண்டிருக்க மறுபுறம் வாழைச்சேனையில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அடாத்தாக கையகப்படுத்தி வருகின்றனர். முறாவோடை பிரதேசத்தில் தமிழருக்கு சொந்தமான காணிகள் முஸ்லிம்களினால் வேலியிடப்பட்டு தமது காணிகள் என உரிமைகோரி வருகின்றனர்.
இப்பிரச்சனை 2010ம் ஆண்டு எமது கட்சித் தலைவர் மாகாண முதலமைச்சராக இருந்த போது சுமுகமாக தீர்வு கண்டு நீதிமன்ற உதவியுடன் தமிழர்களின் காணிகளை பாதுகாப்பதற்காக எல்லையை பிரித்து வீதி அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டபோது பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அதனை தடுத்தார்.(தமிழரின் காணியைஅடாத்தாய் பிடித்;த முஸ்லீம் இளைஞர் அமைப்புக்கு தனது பன்முகப்படுத்தப் படுத்தப்பட்ட நிதியில் இருந்து 50000.00 நிதியும் கொடுத்துள்ளார்)
இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுமைஅற்றஇ செயற்திறன் அற்றஇ தூரநோக்கற்ற செயற்பாட்டையே காட்டுகின்றது.
வாகரை காரமுனையில் திட்டமிட்ட குடியேற்றம் ஆரையம்பதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பும் திடிர் பள்ளி வாயல்களும் இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க ஆட்சி…..?
மட்டக்களப்பில் தமிழரின் இருப்பை இல்லாமல் செய்வதற்கான இரகசிய இணக்கப்பாடா கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல்?
தமிழர்;களின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது அதனை கண்டும் காணாமல் இருப்பது மட்டும் அல்லாமல் அதனைக் கொண்டு அரசியல் பிழைப்பை நடார்த்துகின்ற ஈனத்தனமான செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ப்பதற்காக எல்லையை பிரித்து வீதி அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டபோது பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அதனை தடுத்தார்.(தமிழரின் காணியைஅடாத்தாய் பிடித்;த முஸ்லீம் இளைஞர் அமைப்புக்கு தனது பன்முகப்படுத்தப் படுத்தப்பட்ட நிதியில் இருந்து 50000.00 நிதியும் கொடுத்துள்ளார்)
இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுமைஅற்றஇ செயற்திறன் அற்றஇ தூரநோக்கற்ற செயற்பாட்டையே காட்டுகின்றது.
வாகரை காரமுனையில் திட்டமிட்ட குடியேற்றம் ஆரையம்பதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பும் திடிர் பள்ளி வாயல்களும் இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க ஆட்சி…..?
மட்டக்களப்பில் தமிழரின் இருப்பை இல்லாமல் செய்வதற்கான இரகசிய இணக்கப்பாடா கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியல்?
தமிழர்;களின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது அதனை கண்டும் காணாமல் இருப்பது மட்டும் அல்லாமல் அதனைக் கொண்டு அரசியல் பிழைப்பை நடார்த்துகின்ற ஈனத்தனமான செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
»»  (மேலும்)