மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உடல் கட்டுப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30மணியளவில் ஆரம்பமானது.
கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டுப்பிரிவும் இணைந்து இந்த உடல் கட்டுப்போட்டியை நடாத்தியது.
மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாவட்ட விளையாட்டு திணைக்களத்தின் பதில் உத்தியோகத்தர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் உருவாக்கப்பட்டு முதன்முறையாக மட்டக்களப்பில் இந்த உடல்கட்டுப்போட்டி நடாத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து பெருமளவான இளைஞர்கள் பங்குகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உடற்கட்டு போட்டி நடைபெறுவதனால் அதனைக்காண்பதற்காக பெருமளவானோர் மட்டக்களப்பு மாநகரசபையில் குழுமியிருந்தனர்.