5/29/2015

| |

சரத்பொன் சேகாவிற்கே பொது மண்ணிப்பு வழங்கிய அரசாங்கம் நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை விடுவிக்கவில்லை

Photo de Chandrakumar Murugesu.
சரத்பொன் சேகாவிற்கே பொது மண்ணிப்பு வழங்கிய அரசாங்கம் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை இதுவரை விடுவிக்க முயற்சி எடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று விவேகானந்த நகர் மக்களைச் சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்.
கடந்த யுத்த காலத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுதலைசெய்வதற்கு இன்றுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதற்கென விசேட குழு ஒன்றை நியமித்து அந்த குழுவின் செயற்பாடுகளின் அடிப்படையில் இரண்டு வார காலத்திற்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பாராளுமன்றில் நீதியமைச்சர் குறிப்பிட்டார.; அவர் அவ்வாறு குறிப்பிட்டு இரண்டு மாதங்களைக்கடந்த நிலையிலும் இன்றுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
பல்வேறு குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்ட சரத்பொன்சேகா வினைக்கூட விடுதலை செய்து அவருக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளநிலையில் சாதாரணமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இதுவரை விடுதலைசெய்யப்படவில்லை அதுமட்டுமன்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இவ் இளைஞர்களில் பலர் நீதி மன்றில் முட்படுத்தப்படாத நிலை அல்லது நீண்ட காலத்திற்கு ஒருதடவை மட்டுமே அவர்களின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையே தொடர்கின்றது. இவ்வாறு சிறையில்வாடும் இளைஞர்களின் கும்பங்கள் சட்டத்தரணிகளுக்கு சாசுகட்டியே இன்றும் வறுமைக்கோட்டுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் தேர்தல் காலத்தில் இவர்களின் விடுதலை விரைவில் உறுதிப்படுத்தப்படும் என குறிப்பிட்டு தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொடுத்தவர்கள்கூட இவ்விடையத்தில் அதிக அக்கறை காட்டவில்லை மாறாக அதற்கான நடவடிக்கைகள் விலைவில் மேற்கொள்ளப்படும் என்றே அவர்களும் கூறிவருகின்றனர். எனகுறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.
மீள் குடியேற்றத்தின் பின் சுமார் ஐந்து தேர்தல்களை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள போதும் அவை அனைத்திலும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். தேர்தல்காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்கும் மக்கள் தேர்தலின் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்கின்றனர். அவர்கள் வாக்களித்து தெரிவு செய்த பிரதிநிதிகளைக்கூட மக்களால் பின்னர் காணமுடிவதில்லை எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு யாரிடம் கேட்பது என்ற நிர்க்கதியில் மக்கள் உள்ளனர். மேலும் தெரிவான மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு நிறைவான சேவையினை வழங்காததன் காரணத்தால் மக்கள் இன்றும் பல துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் இந்த உண்மையை இன்று மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் எனவே இனிவரும் காலங்களில் மக்கள் மிகச்சரியான தீர்மானங்களை எடுக்கவேண்டிய கடப்பாட்டில் உள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் யுத்தகாலத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விடுதலை குறித்தும் மற்றும் வீதிகின் புனரமைப்பு பிரதேசசபையினரின் அசமந்தபோக்கு உள்ளிட்ட பல விடையங்கள் குறித்து மக்களால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதில் விவேகானந்த நகரைச்சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.