5/18/2015

| |

மிலேச்சத்தனமான தாக்குதலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது

p.pirasanthanகிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிராக நடந்த மிலேச்சத்தனமான தாக்குதலை தாம் வன்மையாக்க் கண்டிப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
  (16.05.2015) இடம்பெற்ற இத்தாக்குதலில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தரான பத்தக்குட்டி சுமன் என்பவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
குறிப்பாக மணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலானது மாணவர்கள் மத்தியில் இனக்குரோதத்தினை அதிகரிக்கச் செய்துவிடுமோ என அஞ்சத்தோன்றுகின்றது இன்னிலையினை தடுத்துநிறுத்துவதுடன் இத்தாக்குதலை மேற்கொண்ட சிங்கள மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிருவாகம் விசாரணை நடத்துவதுடன் இனங்களுக்கான உணர்வுகளையும் மற்ற சமுகத்தினை மதிக்கும் தன்மையினையும் தெளிவுபடுத்தவும் முன்வர வேண்டும்.
பெருமளவான தமிழ் பேசும் மாணவர்கள் பயில்வது மட்டுமல்லாது தமிழ் பிரதேசத்திலே அமைந்துள்ள எமது கிழக்குப் பல்கலைகழகத்தில் தமிழ் மொழி மூலமான தேசிய கீதத்துக்கான எதிர்ப்பு என்பது சிறிதளவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.
மேலும்  இச் சம்பவமானது தேசிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்தி சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாக்க முடியும் என எதிர்பார்த்து வாக்களித்த தமிழ் பேசும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுக்கு வாக்களியுங்கள் தமிழருக்கு உரிமை பெற்றுத்தருகிறோம் எனக்கூறி பெற்ற வாக்கினால் இன்று அரசின் பங்காளிகளாக இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று திருடனுக்கு தேள் கொட்டியதைபோல் பரிதாபமான நிலையில் கையாலாகாதவர்களாக  இருப்பது கவலையளிக்கிறது.இதுதானா இவர்கள் கூறும் நல்லாட்சி? எனவும் கேள்வி எழுப்பினார்.