5/08/2015

| |

சம்பூரில் 818 ஏக்கர் காணி நேற்று விடுவிப்பு: வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ஒப்பம் இட்டார்

Résultat de recherche d'images pour "சம்பூரில்"சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளை மக்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் கையொப்பமிட்டுள்ளார்.
இதற்கமைய முதற்கட்டமாக சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு வழங்கிய 818 ஏக்கர் காணிகளை விடுவித்து அவற்றை மக்களின் மீள்குடியேற்றத்துக்கு வழங்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி நேற்றுமாலை கையொப்பமிட்டார்.
முதற்கட்டமாக முதலீட்டுச் சபைக்கு வழங்கப்பட்ட 818 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கும் அடுத்த கட்டமாக கடற்படை முகாம் அமைந்துள்ள 237 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டுச் சபைக்கு வழங்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டு வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது. இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டதும் சம்பூர் மக்களை மீளக்குடியமர்த்த முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது