5/20/2015

| |

சுவிஸ் உதயத்தின் 11வது ஆண்டு நிறைவு விழா

சுவிஸ் உதயம் அமைப்பின் 11வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட ஒன்றுகூடல் வைபவம் எதிர்வரும் 2015.05.24ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் தேவசகாயம் சுதர்சன் தலைமையில் காலை 10 மணிக்கு Gemeinshaft zentrum, Affoltern ZH, Bodenacker 25, 8046 Zurich எனும் இடத்தில் இடம்பெறவுள்ள இவ் ஒன்றுகூடல் நிகழ்வின்போது சுவிஸ் உதயம் அமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல்வேறான கலை கலாசார தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளும், பல்துறை போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.


இந்நிகழ்வினபோது சிறந்த சமூக சேவையாளர்கள், கலைஞர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்டவுள்ளதோடு, அதிஷ்ட இலாபச் சீட்டுழுப்பு நடத்தப்பட்டு அதில் அதிஷ்டம் கிட்டுபவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன் சுவிஸ் உதயம் உறவுகளிடையே போட்டி நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோருக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இதன்போது இளையராகம் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளதுடன் சுவிஸ் உதயம் உறவுகள் மத்தியில் கலைத் துறை மேம்பாட்டுக்கான விஷேட செயற் திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் உறவுகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகின்றனர்.