5/30/2015
| |
ஐ.நா சபை தூங்குகிறது: ரிஷாட்
5/29/2015
| |
”உயிரியல் உரிமைக்கான எல்லையற்ற இயக்கம்”
| |
கலாசூரி விருதுபெறுகின்றார் கவிஞர் ராசாத்தி சல்மா மாலிக்
| |
அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
| |
சரத்பொன் சேகாவிற்கே பொது மண்ணிப்பு வழங்கிய அரசாங்கம் நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை விடுவிக்கவில்லை
கடந்த யுத்த காலத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுதலைசெய்வதற்கு இன்றுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதற்கென விசேட குழு ஒன்றை நியமித்து அந்த குழுவின் செயற்பாடுகளின் அடிப்படையில் இரண்டு வார காலத்திற்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பாராளுமன்றில் நீதியமைச்சர் குறிப்பிட்டார.; அவர் அவ்வாறு குறிப்பிட்டு இரண்டு மாதங்களைக்கடந்த நிலையிலும் இன்றுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
பல்வேறு குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்ட சரத்பொன்சேகா வினைக்கூட விடுதலை செய்து அவருக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளநிலையில் சாதாரணமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இதுவரை விடுதலைசெய்யப்படவில்லை அதுமட்டுமன்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இவ் இளைஞர்களில் பலர் நீதி மன்றில் முட்படுத்தப்படாத நிலை அல்லது நீண்ட காலத்திற்கு ஒருதடவை மட்டுமே அவர்களின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையே தொடர்கின்றது. இவ்வாறு சிறையில்வாடும் இளைஞர்களின் கும்பங்கள் சட்டத்தரணிகளுக்கு சாசுகட்டியே இன்றும் வறுமைக்கோட்டுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் தேர்தல் காலத்தில் இவர்களின் விடுதலை விரைவில் உறுதிப்படுத்தப்படும் என குறிப்பிட்டு தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொடுத்தவர்கள்கூட இவ்விடையத்தில் அதிக அக்கறை காட்டவில்லை மாறாக அதற்கான நடவடிக்கைகள் விலைவில் மேற்கொள்ளப்படும் என்றே அவர்களும் கூறிவருகின்றனர். எனகுறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.
மீள் குடியேற்றத்தின் பின் சுமார் ஐந்து தேர்தல்களை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள போதும் அவை அனைத்திலும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். தேர்தல்காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்கும் மக்கள் தேர்தலின் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்கின்றனர். அவர்கள் வாக்களித்து தெரிவு செய்த பிரதிநிதிகளைக்கூட மக்களால் பின்னர் காணமுடிவதில்லை எனவே வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு யாரிடம் கேட்பது என்ற நிர்க்கதியில் மக்கள் உள்ளனர். மேலும் தெரிவான மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு நிறைவான சேவையினை வழங்காததன் காரணத்தால் மக்கள் இன்றும் பல துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் இந்த உண்மையை இன்று மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் எனவே இனிவரும் காலங்களில் மக்கள் மிகச்சரியான தீர்மானங்களை எடுக்கவேண்டிய கடப்பாட்டில் உள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் யுத்தகாலத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விடுதலை குறித்தும் மற்றும் வீதிகின் புனரமைப்பு பிரதேசசபையினரின் அசமந்தபோக்கு உள்ளிட்ட பல விடையங்கள் குறித்து மக்களால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதில் விவேகானந்த நகரைச்சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.
5/28/2015
| |
காரைதீவில்..."குமாரசாமி நந்தகோபன்(ரகு)" ஞாபகார்த்த கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி.
| |
கருணை அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
5/27/2015
| |
குகைவாழ் மனிதன் ஆதாரத்துடன் கூடிய ஆவணப்படம்
5/26/2015
| |
மண்டூர் கொலையின் பின்னணியில் சாதி பூசல்கள்
இவரது கொலை சாதிபிரச்சனை காரணமாக நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என பரவலாக நம்பப்படுகின்றது.மண்டூர் கந்த சுவாமி கோயிலின் திருவிழாக்களை தமக்குள்ள பங்கீட்டுக்கொள்ளும் முயற்சியில் நீண்ட காலமாக அங்குள்ள ஆதிக்க சமூகங்களிடையே ஏற்பட்டுவரும் முரண்பாடுகளின் பின்னணியிலேயே இக்கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது என பரவலாக அக்கிராம மக்களிடையே பேசப்படுகின்றது.
5/23/2015
| |
ரணில் விக்ரமசிங்கவே சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபரைப் போன்று செயற்படுகின்றார் – மஹிந்த ராஜபக்ஸ
| |
அதிமுக-பாஜ கூட்டணிக்கு அச்சாரம் ; ஜெ., பதவியேற்பு விழாவில் முத்தாரம்
அதிகாரிகள், தொழில் அதிபர்கள், நீதிபதிகள், நடிர்கள் என பல்வேறு தரப்பினரையும் விழாவுக்கு அழைத்த ஜெயலலிதா, மற்ற எந்தக் கட்சியையும் அழைக்கவில்லை, பாஜவைத் தவிர.
இது தான் ஆச்சரியத்தின் உச்சம். இரு கட்சிகளும் கூட்டணியில் இல்லை. வேறு எந்தக் கட்சியையும் கண்டுகொள்ளாதவர் ஜெயலலிதா. யாரையும் நம்பி நான் இல்லை என வெளிப்படையாக காட்டிக்கொள்பவர். இப்படிப்பட்டவர் பாஜவை மட்டும் அழைத்தது ஏன்? இது பற்றி விசாரித்தபோது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாஜ நிர்வாகி, ""அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி ஏற்பட நிறையவே வாய்ப்புகள் உள்ளன. வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுபட்டதால் அவருடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு இருந்த தயக்கம் போய்விட்டது. ஏற்கனவே நாங்கள் கூட்டணி வைத்த தேமுதிக, மதிமுக போன்ற கட்சி தலைவர்கள், கூட்டணிக்கு எதிராகவே பேசக் கூடியவர்கள். இவர்களை இனி நாங்கள் நம்ப மாட்டோம்'' என்றார். இன்னொரு அதிமுக நிர்வாகி கூறும்போது, ""பாஜவில் உள்ள சுஷ்மா, ஜெட்லி, வெங்கய்யா போன்றவர்கள் ஜெயலலிதாவிற்கு நண்பர்கள். இவர்கள் இந்த கூட்டணி ஏற்படத்தான் விரும்புவார்கள். அக்கட்சி தலைவர்களை விழாவுக்கு அழைத்தபோதே எங்கள் தலைவியின் மன ஓட்டம் தெரிந்துவிட்டது'' என்றார்.
ஜெ., அப்பீல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வந்தார்கள் தமிழக பாஜ தலைவர்கள். மத்திய அமைச்சர்கள் அனைவரும் 'கொத்து கொத்தாக' தமிழகம் வந்து, ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து, கட்சியை வளர்க்கவும் திட்டமிட்டனர். தீர்ப்புக்குப் பிறகு நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது. மத்திய அமைச்சர்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் திட்டம் "பணால்' ஆகிவிட்டது.
மதுரையை சேர்ந்த திமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கூறும்போது, ""ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு அமைந்திருந்தால், பாஜவின் அணுகுமுறையே வேறு மாதிரி இருந்திருக்கும். அதிமுகவுடன் கடுமையாக மோதி இருக்கும். ஆனால் ஜெ., விடுதலை ஆனதும், மோதல் போக்கை கைவிட்டு, கைகோர்க்க தயாராகிவிட்டது பாஜ. தீர்ப்பு வரும்வரை ஜெயலலிதாவை விமர்சித்த தமிழக பாஜ தலைவர்கள், 'பெட்டிப் பாம்பாய்' அடங்கிவிட்டார்கள்'' என்றார்.
ஆக, அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணிக்கு அச்சாரம் போடப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது.
5/22/2015
| |
பேப்பர்காரர்களின் கொடூர முகம்
ஸ்ரீதேவி – Proof Reading
ஜீவதாரிணி – Type Setting
சோபா – Editorial
சீபா – Clerk
சுபோதினி – Type Setting
| |
சவுதி அரேபியா மசூதியில் தொழுகையின் போது தற்கொலை படை திவீரவாதி தாக்குதல் பலர் பலி
இந்த பள்ளியில் 150 க்கும் மேற்ட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர் எனவும் இதில் 30 பேர் வரை பலியாகி இருக்க கூடும் எனவும் நேரில் பார்த்தவர் கூறி உள்ளார்.
நாங்கள் முதல் பகுதி தொழுகையில் ஈடுபட்டு இருந்த போது வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டேன். என நேரில் பார்த்த கமல் ஜாபர் ஹசன் என்பவர் ராய்ட்டர் செய்தி ஏஜென்சிக்கு டெலிபோன் மூலம் கூறி உள்ளார்
சவுதி அரசு செய்தி ஏஜென்சி வெடுகுண்டு தக்குதல் நிகழ்ந்ததை உறுதி படுத்தி உள்ளது. பாதிக்கபட்டவர் ஒருவர் ரத்தம் தோய்ந்த படத்தை சோசியல் மீடியாவில் போட்டு உள்ளார்
| |
நான்கு அமைச்சர்கள் இராஜினாமா ரணிலுடன் செயற்பட முடியாது என அறிவிப்பு
| |
மகளிர் அமைப்பினால் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டித்து கல்லடியில் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று
கண்டன வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம், கல்லடிப் பாலம் வரை சென்று திரும்பியது.
மகளிர் அணியின் தலைவி செல்வி மனோகர் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணியின் இறுதியில்; வித்தியாவின் படுகொலைக்குக் காரணமானவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை நீதி மன்றம் வழங்க வேண்டும் என இறைவனை வேண்;டி கல்லடி பேச்சியம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் தேங்காய் உடைத்து வேண்டுதலில் ஈடுபட்டனர்.
5/20/2015
| |
சுவிஸ் உதயத்தின் 11வது ஆண்டு நிறைவு விழா
சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் தேவசகாயம் சுதர்சன் தலைமையில் காலை 10 மணிக்கு Gemeinshaft zentrum, Affoltern ZH, Bodenacker 25, 8046 Zurich எனும் இடத்தில் இடம்பெறவுள்ள இவ் ஒன்றுகூடல் நிகழ்வின்போது சுவிஸ் உதயம் அமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல்வேறான கலை கலாசார தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளும், பல்துறை போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வினபோது சிறந்த சமூக சேவையாளர்கள், கலைஞர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்டவுள்ளதோடு, அதிஷ்ட இலாபச் சீட்டுழுப்பு நடத்தப்பட்டு அதில் அதிஷ்டம் கிட்டுபவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன் சுவிஸ் உதயம் உறவுகளிடையே போட்டி நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோருக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இதன்போது இளையராகம் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளதுடன் சுவிஸ் உதயம் உறவுகள் மத்தியில் கலைத் துறை மேம்பாட்டுக்கான விஷேட செயற் திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் உறவுகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகின்றனர்.
| |
நாளை 21 ம் திகதி காலை மட்டக்களப்பில் 10 மணிக்கு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரிக்கு எதிரில் கவனயீர்ப்பு போராட்டம்
| |
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை
5/18/2015
| |
பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்!
வித்தியாவுக்கு நேர்ந்த கதிக்கு எதிராக 98 பெண்ணிய செயற்பட்டாளர்கள் கையெழுத்திட்டு ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.அவ்வறிக்கை கீழ்வருமாறு
ஆணாதிக்கக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்எமது சமூகத்தில்பெண்கள் குடும்பத்துக்குள்ளும்,வெளியுலகிலும், வேலைத்தளங்களிலும், பாடசாலைகளிலும்,மத நிறுவனங்களிலும்,அரசின் கையிலும்நாளாந்தம் அனுபவித்துவரும்வன்முறைகளின் நீட்சியே வித்யாவிற்கு நிகழ்ந்த இக்கோரச்சம்பவம்ஆகும். பெண்கள்சுதந்திரமாகப் பயமின்றி ஆண்களுக்குச் சமமாக எங்கும்உலவி வரவும்,அவர்கள் சுயவெளிப்பாட்டுடன்பொதுவெளியில் இயங்கவும், அவர்களுக்குத் தகுந்த உத்தரவாதமற்றநிலை தொடருவதன்சாட்சியங்களே இச்சம்பவங்கள்.
மாங்குளத்தைச் சேர்ந்த மாணவி சரண்யா கூட்டுவன்முறைக்குஉட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு இரண்டு மாத இடைவெளிக்குள்வித்யாவிற்கு இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இலங்கையில் மட்டும் 2012 க்கும் 2014க்கும் இடையிலானகாலத்தில் 4393 வன்கொடுமைச்சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.இவை முன்னையஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 20 வீதமாக அதிரித்துள்ளன.
இலங்கையில் கடந்த காலங்களிலிருந்து இன்றுவரை பொலிஸாரினாலும்,இராணுவத்தினராலும், பெண்கள் பாலியல்பலாத்காரங்களிற்கும் வன்கொடுமைகளிற்கும்உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இத்தகையபாலியல் வன்கொடுமைகள்எமது சமூகத்தின்சக உறுப்பினர்களினாலும்,உறவுகளினாலும் நடத்தப்படுவதும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை பதிவுக்குள்ளாக்கப்படுவதோ,கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதோமிகவும் அரிதாகவேஉள்ளது என்பதுஎமது கடந்தகாலஅனுபவமாகும்.
பெண்களிற்கு நீதி வழங்க வேண்டிய அரசும்,அரச நிறுவனங்களும்குற்றவாளிகளைக் காப்பாற்றும் காரியத்தையே தொடர்ந்தும் செய்துவருகின்றன. இலங்கையில் இத்தகைய வன்கொடுமையாளர்களைச் சட்டத்தால் தகுந்த முறையில் தண்டிக்கப்படக்கூடிய வலுவானசட்டங்கள் அமுலில்இல்லாததும் இவ்வகையான வக்கிரங்கள் தொடர்வதற்கு முக்கியகாரணமாகும்.
இக் கொடூரச்செயலுக்கு நாம்எமது வன்மையானகண்டனத்தை தெரிவிப்பதோடுகீழ்க்கண்ட கோரிக்கைகளையும் முன்வைக்கிறோம்.
• வித்யாவின் சம்பவத்துடன் தொடர்பானகுற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனையளிக்கப்படவேண்டும்.
· • இலங்கையில்பெண்களிற்கெதிரான சகல வன்முறைகளையும் தண்டிக்கும் முகமாகவலுவான சட்டங்கள்இயற்றப்பபடவேண்டும்.
· நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் மீள்பரிசீல ணை செய்யப்பட்டு, அவை பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து நீதி வழங்கும் முகமாக அமுல்படுத்தப்படவேண்டும்.
• பாடசாலைகள் மற்றும் கல்விநிறுவனங்களில்பெண்களிற்கெதிரான வன்முறைகளை எதிர்கொள்ளல் மற்றும் அவற்றைத்தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கும் சகல மட்டங்களிலும்விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்களைஅமுல்படுத்தல் வேண்டும்.
• மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளைநடைமுறைபடுத்த இலங்கையில் இயங்கும் சகல அரசியல்சமூக ஜனநாயகமனிதவுரிமை அமைப்புகள் அரசாங்கத்திற்குஅழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
பெண்கள் சந்திப்புத்தோழிகள் மற்றும்பெண்ணிய சமூகசெயற்பாட்டாளர்கள்.
2. நளினிரட்ணராஜ்(இலங்கை)
3. ஸர்மிளாஸெயித்(இலங்கை)
4. தமயந்திகே.எஸ்(தமிழ்கவி)(இலங்கை)
5. சுவர்ணசிறிஆர்.எம்(இலங்கை)
6. மாலினிமாலா(இலங்கை)
7. பிரியந்தினிஆனந்தசிவம்((இலங்கை)
8. வாணிகுமாரவேல்(பிரான்ஸ்)
9. நிலாலோகநாதன்(இலங்கை)
10. ரஹிமாபைசால்(இலங்கை)
11. அப்துல்ஹக்லறினா(இலங்கை)
12. பிரசன்னாஇராமசுவாமி(இந்தியா)
13. வினோதினிசச்சியானந்தன்
14. ஜெயராணிநோர்பேர்ட்
15. விஜி(பிரான்ஸ்)
16. புஸ்பராணி(பிரான்ஸ்)
17. தர்மினி(பிரான்ஸ்)
18. வசந்தி(பிரான்ஸ்)
19. ஷீலா(பிரான்ஸ்)
20. வனஜா(பிரான்ஸ்)
21. நிர்மலாஇராஜசிங்கம்(இங்கிலாந்து)
22. நவஜோதியோகரட்ணம்(இங்கிலாந்து)
23. மீனாள்நித்தியானந்தன்(இங்கிலாந்து)
24. சந்திராரவீந்திரன்(இங்கிலாந்து)
25. ரஞ்சனாராஜ்( இங்கிலாந்து)
26. வாணிலாமகேஸ்
27. ராஜேஸ்வரிபாலசுப்பிரமணியம்(இங்கிலாந்து)
28. ரஜிதா(இங்கிலாந்து)
29. தினேஷா(இங்கிலாந்து)
30. நிவேதாஉதயன்(இங்கிலாந்து)
31. சசிநவரட்ணம்(இங்கிலாந்து)
32. பானுபாரதி(நோர்வே)
33. ஜெயசிறிரவீந்திரன்(நோர்வே)
34. தனுஜாதுரைராஜா(சுவிற்சிலாந்து)
35. மேனகாஉமாகாந்தன்(சுவிற்சிலாந்து)
36. பத்மபிரபா((சுவிற்சிலாந்து)
37. பாமதிசோமசேகரம்(அவுஸ்ரேலியா)
38. சுமதி(கனடா)
39. நிருபா(கனடா)
40. பிரதீபாகனகாதில்லைநாதன்(கனடா)
41. காவோரிவேலழகன்(கனடா)
42. கோசல்யாசொர்ணலிங்கம்(ஜேர்மனி)
43. மல்லிகா(ஜேர்மனி)
44. மங்கையற்கரசி((ஜேர்மனி)
45. மேரி(ஜேர்மனி)
46. தேவா(ஜேர்மனி)
47. கமலா(ஜேர்மனி)
48. தர்சனா(ஜேர்மனி)
49. உமா(ஜேர்மனி)
50. தமிழ்மகளிர்மன்றம்-ஸ்ருட்காட்((ஜேர்மனி)
51.ராணிநகுலேந்திரம்(இங்கிலாந்து)
52.ஓவியாநகுலேந்திரம்(இங்கிலாந்து)
53.அநாமிகாநகுலேந்திரம்(இங்கிலாந்து)
54.சிவயோகம்தியாகராசா(இங்கிலாந்து)
55.நாகேஸ்வரிதவரட்ணம்(இங்கிலாந்து)
56.ஈஸ்வரிசோமசுந்தரம்(ஜேர்மனி)
57. திருமகள்வலன்ற்றைன் (ஜேர்மனி)
58. சிந்துஜா கரோல்( பிரான்ஸ் )
59. ரூபி(பிரான்ஸ்)
60.அர்ச்சுனி ஜெபா(பிரான்ஸ்)
61.அஜந்தா சுந்தரலிங்கம்( பிரான்ஸ்)
62.மதுமிதா (பிரான்ஸ்)
63.லுணுகல சிறி(இலங்கை)
64.ஞானசக்தி சிறிதரன்(இந்தியா)
65.மாதவி சிவலீலன்(இங்கிலாந்து)
66.வரலக்சுமி ராகவன்(ஜேர்மனி)
67. கமலா வாசுகி(இலங்கை)
68.விஜிதாலோகநாதன்(ஜேர்மனி)
69.சுருதிகண்ணன்(ஜேர்மனி)
70.மகாலக்சுமிகுருசாந்தன்(இலங்கை)
71.ஸி.எஜ்.ஜெயந்தா(இலங்கை)
72.டி.லிசாந்தி(இலங்கை)
73.ஸி.எஜ்.கமிலா(இலங்கை)
74.எஸ்.ஜி.நிஷாந்தி(இலங்கை)
75.பி.அருள்சிலி(இலங்கை)
76.எல்.சுபாஷினி(இலங்கை)
77.எஜ்.லிண்டா(இலங்கை)
78. எ.டபிள்யு.எப் அக்கரைப்பற்று(இலங்கை)
79.வாணி(இலங்கை)
80.ராஜலெட்சமி(சுமி)(இலங்கை)
81.கனகா(இலங்கை)
82.குணா(இலங்கை)
83.மாலதி(இலங்கை)
84.சுமிதி(இலங்கை)
85.ராஜலட்சுமி சுப்பிரமணியம்- MWDRF(இலங்கை)
86.சுரஸ்தாஸ் சிவகலா- MWDRF(இலங்கை)
87.ராஜ்மோகன் ப்ரியா-MWDRF(இலங்கை)
88.வலுப்பிள்ளை மிதுனா-MWDRF(இலங்கை)
89.ஹம்தூன் ஜூமானா- MWDRF(இலங்கை)
90.சுமதி அமலதாஷ் -MWDRF(இலங்கை)
91.ருசீகா ரஜப்டீன் -MWDRF(இலங்கை)
92.அனீஸ் நஸிரா-MWDRF(இலங்கை)
93. யன்சிலா மஜித்-MWDRF(இலங்கை)கவிதா94.சண்முகநாதன்(இங்கிலாந்து)
95.அதீதாசிவானந்தன்(கனடா)
96.வளர்மதி (சுவிற்சிலாந்து)
97 ஜெயந்தி பிரான்ஸ்)
98 ரதி (பிரான்ஸ்)
| |
மிலேச்சத்தனமான தாக்குதலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது
| |
மோர்ஸிக்கு மரணதண்டனை: 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
5/13/2015
| |
மட்டக்களப்பில் நகரின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் தொடர்பில் ஆராயும் நிகழ்வு
மட்டக்களப்பில் நகரின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் தொடர்பில் ஆராயும் நிகழ்வு மட்டக்ளப்பில் நடைபெற்றது.
இலங்கையின் கிழக்கு கரையில் நாகர் கி.மு.2 நூற்றாண்டில் ஆட்சிசெய்து வாழ்ந்தார்கள் என்பதற்கான தொல்லியல் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களுடன் விளக்கும் வகையில் இந்த நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உள்ள பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க ஆய்வுகூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தொல்லியல் ஆய்வாளர்கள்,எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட பொருட்கள் மற்றும் இப்பகுதியில் நாகர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் தொடர்பில் பேராசிரியரினால் விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, நாவற்குடா, மாமாங்கம், வந்தாறுமூலை,வாகரை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது 40க்கும் மேற்பட்ட நாகர்களின் ஆதாரங்கள் கொண்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக்கு விஜயன் வருகைக்கு முன்பாக கிழக்கு கரையினில் நாகர்கள் ஆட்சி அதிகாரங்களுடன் வாழ்ந்தார்கள் அவர்களின் நாகரிகம் வழிபாட்டு முறைகளின் ஆதாரங்கள் இங்கு பேராசிரியரின் விரிவாக சமர்ப்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே உள்ளதுடன் அறியமுடியாத,மறைந்துகிடந்த வரலாறுகள் தற்போது முகம்காட்டும் நிலை உருவாகிவருவதாக பேராசிரியர் பத்மநாதன் இங்கு தெரிவித்தார்.
குறிப்பாக கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் நாகர் இப்பகுதியில் வாழ்ந்துள்ளதுடன் அவர்கள் மணிநாகன் என்ற பெயரில் தெய்வ வழிபாட்டைக்கொண்டிருந்ததாகவும் இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி வன்னிப்பகுதியிலும் கடந்த ஆறு மாதகாலமாக மணிநாகன் தொடர்பான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இவ்வாறான வரலாற்று தடயங்கள் காணப்படுவதாகவும் அவற்றினையும் வெளிக்கொணரும் வகையில் பொதுமக்கள் பங்களிப்பினை வழங்கவேண்டும் எனவும் எங்காவது வரலாற்று சான்றுகள் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் அறியத்தருமாறும் பேராசிரியர்கள் தெரிவித்தார்.
இதேபோன்று தென்னிலங்கையிலும் பல பகுதிகளில் நாகர்கள் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.குறிப்பாக புத்தளத்தில் நாகர்களின் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவை மறைக்கப்பட்டன.1986ஆண்டும் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுசெய்யப்பட்ட நிலையில் அவற்றில் தமிழ் பிராமிய எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.அது தொடர்பில் ஒரு ஆங்கில சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருந்தது.
5/11/2015
| |
மட்டக்களப்பில் முதன்முறையாக நடைபெற்ற உடல்கட்டுப்போட்டி
கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டுப்பிரிவும் இணைந்து இந்த உடல் கட்டுப்போட்டியை நடாத்தியது.
மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாவட்ட விளையாட்டு திணைக்களத்தின் பதில் உத்தியோகத்தர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் உருவாக்கப்பட்டு முதன்முறையாக மட்டக்களப்பில் இந்த உடல்கட்டுப்போட்டி நடாத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து பெருமளவான இளைஞர்கள் பங்குகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உடற்கட்டு போட்டி நடைபெறுவதனால் அதனைக்காண்பதற்காக பெருமளவானோர் மட்டக்களப்பு மாநகரசபையில் குழுமியிருந்தனர்.
| |
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக, கடந்த 1996ஆம் ஆண்டில், சுப்ரமணியன் சுவாமி கொடுத்த புகாரின் பேரில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து.
45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3 மாதங்களுக்குள் மேல் முறையீட்டு விசாரணையை முடித்த நீதிபதி, மார்ச் 12ஆம் தேதி முதல் தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினார்.
இந்நிலையில் திமுக தரப்பின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது. எனவே மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானிசிங் முன்வைத்த வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஏப்ரல் 27ஆஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நீதிபதி குமாரசாமி ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மேல்முறையீட்டில் மீண்டும் தீர்ப்பை திருத்தி எழுதும் பணியைத் தொடங்கினார். இந்நிலையில், தீர்ப்பு எழுதும் பணிகள் முடிவடைந்த நிலையில் மே 11ஆம் தேதி காலை 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பாட்டீல் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிமுகவினர் தொடர்ந்து குவிந்ததால் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சரியாக 11 மணிக்கு மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி , ஜெயலலிதா உள்பட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் ஏற்று, அவர்களை விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் முன்வைத்த வாதங்களை ஏற்று, பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ரத்து செய்வதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதனால், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்தாகி விடுகிறது.
3 நிமிடத்தில் தீர்ப்பின் முக்கிய அம்சத்தை மட்டும் வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி, தனது அறைக்கு திரும்பினார். தீர்ப்பு மொத்தம் 900 பக்கங்கள் கொண்டதாக உள்ளதாகவும், அது விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| |
“இப்படி பிழைப்பதை விட ரோட்டில் துண்டுபோட்டு பிழைக்கலாம்” என்ற தலைப்பில் கூட்டமைப்புக்கு எதிராக வெல்லாவெளியில் துண்டுப்பிரசுரம்
“இப்படி பிழைப்பதை விட ரோட்டில் துண்டுபோட்டு பிழைக்கலாம்” என்ற தலைப்பில் கூட்டமைப்புக்கு எதிராக வெல்லாவெளியில் துண்டுப்பிரசுரம்
வெல்லாவெளி பிரதேச சபையின் புதிய கட்டிடம் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் அதையொட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வருகைக்கு எதிராக வெல்லாவெளி பிரதேசத்தில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த பிரதேச சபை வெல்லாவெளிக்கு இடம் மாற்றுப்படும் போது அது அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இப்போது அதன் திறப்பு விழாவுக்கு செல்வதையிட்டே இவ்வெதிர்ப்பு துண்டுப்பிரசும் வெளியிடப்பட்டுள்ளது.
“இப்படி பிழைப்பதை விட ரோட்டில் துண்டுபோட்டு பிழைக்கலாம்” என்ற தலைப்பில் இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
5/10/2015
| |