ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவிலிருந்து சிலரை நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்யபோவதாக அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான விமலவீர திஸாநாயக்க அறிவித்துள்ளார். இதேவேளை, தனது இராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சிகாலத்தில் இவர் கல்வியமைச்சராக பணிபுரிந்தவர் ஆவார்.