4/22/2015

| |

ரணில் விக்கிரமசிங்கவின் ஒட்டுக் குழுவாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.

Résultat de recherche d'images pour "tna sampanthan"தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளுடன் கூட்டு வைத்திருக்கவில்லை, புலிகளை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை, புலிகளின் கொள்கையை ஏற்கவில்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு பகிரங்கமாக தெரிவித்து உள்ளார் எம். ஏ. சுமந்திரன் எம். பி.
இவ்வாறு சுமந்திரன் எம். பி தெரிவித்து உள்ளமையை தமிழ் தேசிய கூட்டமைப்போ, கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களோ இது வரை கண்டிக்கவோ, ஆட்சேபிக்கவோ இல்லை.
ஆனால் புலிகளை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செய்து வருகின்றது என்பதை மாத்திரம் சுமந்திரன் எம். பி தெரிவித்து இருக்கவில்லை.
இதே நேரம் யாருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டு வைத்து இருக்கின்றது?, யாரை கூட்டமைப்பு ஆதரிக்கின்றது? அல்லது ஊக்குவிக்கின்றது?, யாருடைய கொள்கையை கூட்டமைப்பு ஏற்றுச் செயற்படுகின்றது? என்கிற கேள்விகளுக்கான விடையை இப்பதிவில் காணலாம்.
புலிகளின் தலைவர் வே. பிரபாகரனிடம் இருந்து கருணாவை சூழ்ச்சியால் பிரித்த ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒட்டுக் குழுவாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அதிகாரத்தின் மையத்துக்கு வருகின்றமையை புலிகளின் தலைவர் விரும்பி இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை தேர்தலில் தோற்கடிக்கின்ற கைங்கரியத்தில் புலிகள் ஈடுபட்டு உள்ளனர். ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டு இருந்தனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தின் மையத்துக்கு ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வருகின்ற பகீரத முயற்சியில் மிக நீண்ட காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டு ஓரளவு வெற்றி கண்டு உள்ளது.
இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீது புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தினர். ஆனால் இதே சரத் பொன்சேகா எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் நின்றார். தமிழ் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரித்தது.
இதே போல பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. இவர் மீதும் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி இருந்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் இவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டார். இவரின் வெற்றிக்காக வடக்கு, கிழக்கில் சூறாவளிப் பிரசாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்தது.
• ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுப் பொதியை ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் எதிர்த்தது.
• ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து சிங்கக் கொடியை தூக்கிக் கொண்டு கொழும்பில் மே தினம் நடத்தியது.
• மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் நிறைவேற்றுக் குழுவில் ஒட்டிக் கொண்டு நிற்கின்றது.
• ஸ்ரீலங்காவின் சுதந்திர தின விழாவில் பங்கேற்றது.
• வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பனிப் போர் நடத்தி வருகின்றபோதிலும் பிரதமருடன் உறவாடுகின்றது.
• டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தி வெற்றி கண்டது.