தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வரும் வெருகல் படுகொலை நினைவு தினம் எதிர்வரும் 10.04.2015ம் திகதி பி.ப 4.30 மணிக்கு மட்ஃவாகரை வெருகல் மலை மக்கள் பூங்காவில் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
2004ம் வருடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கெதிராக ஏப்ரல் மாதம் 10ம் திகதி அதிகாலை வன்னியில் இருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையெடுப்பினால் முதலாவது சமர் ஆரம்பித்த இடமாக மட்ஃவாகரை வெருகல் மலை அமைந்துள்ளது.
207க்கு மேற்பட்ட கிழக்குப் போராளிகள் ஆண் பெண் பேதமின்றி சுட்டும் வெட்டியும் சகோதரப்படுகொலை செய்யப்பட்டனர். சகோதரப் படுகொலையின் உச்சக் கட்டமாக நடைபெற்ற இச் சமரே பின் சகோதரப் படுகொலைக்கும் முற்றுப் புள்ளியாக அமைந்தது.
கிழக்கு மாகாணத்தின் சுமுக நிலை தோன்றி மாகாண ஆட்சி நடைபெறுவதற்கு வித்திட்ட வீர மறவர்களின் நினைவாக நடைபெறும். இவ் நினைவு தின நிகழ்வில் கட்சித் தலைவர் சி.சந்திரகாந்தனின் வெருகல் படுகொலை நினைவுப் பேருரையும் உயிர் நீத்தவர்களின் ஞாபகார்த்தமாகவும் அவர்களின் ஆத்ம சாந்திக்காக வெருகலம்பதி ஆலயத்தில் விஷேட பூசையும் அன்னதான நிகழ்வும் ஒளித்தீபம் ஏற்றுதலும் நடைபெறவுள்ளதாகவும் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.