4/14/2015

| |

இரவுநேர கலாசார விளையாட்டு விழா

WP_20150414_11_49_28_Proகளுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 57 வது கலாசார விளையாட்டு விழா இன்று (14.04.2015 ) மாலை 4.30 மணியளவில் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் த.கோகுலகுமாரன் தலைமையில் இடம்பெற உள்ளது.

இக்காலாசார விளையாட்டு விழாவானது 4.30 மணியளவில் ஆரம்பமாகி இரவுநேர கலாசார விளையாட்டு இடம்பெற இருப்பது சிறப்பானதாக அமையவுள்ளது.
இக்கலாசார விளையாட்டு விழாவானது சித்திரைப் புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக இன்றைய தினம் 2.30 மணியளவில் இடம்பெற ஏற்பாடுகள் இடம்பெற்றுவந்தன. இன்றைய சித்திரை வருட கொண்டாட்டத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியமைக்க இன்று 4.30 மணியளவில் நிகழ்வுகளை ஆரம்பித்து இரவுநேர கலாசார விளையாட்டு விழாவாக மாற்றம் செய்திருப்பதாக கழகத்தின் தலைவர் த.கோகுலகுமாரன் தெரிவித்தார்.
இவ்விளையாட்டு விழாவில் பல கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் த.கோகுலகுமாரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை, மீன்பிடி, நீர்ப்பாசன, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் க.சிவநாதன், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூகசேவைகள், மற்றும். சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் க.கருணாகரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், சிறைச்சாலை அத்தியட்சகர் இ.இராஜேஸ்வரன், உட்பட பல உயர் அதிகாரிகள், விளையாட்டு உத்தியோகஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.