நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில். 7.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இவ் அனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளுக்கு வெளியே வைத்து சிகிச்சையளிக்கப்பட்டனர். இந் நிலநடுக்கத்தால் காத்மண்டுவில் காணப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டடங்கள் இடிந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. புறநகர்பகுதிகளில் அதிகளவான மக்கள் சிக்கியிருப்பதாகவும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளளது. அதிகளவான மக்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.