4/19/2015

| |

ஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 33 பேர் பலி

அரசாங்க ஊழியர்கள் வங்கியில் தமது ஊதியத்தை பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் குண்டு வெடித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் சிறார்கள் பலர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானில் இந்த ஆண்டு நடந்துள்ள மிக மோசமான சம்பவமாக இது அமைந்துள்ளது.
இத்தாக்குலைத் தாமே நடத்தியதாக இஸ்லாமிய அரசு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே நங்கார்ஹர் மாகாணத்தில் நடந்துள்ள வேறொரு குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டும் நால்வர் காயம் அடைந்தும் உள்ளனர்.
இது ஒரு கோஷைத் தனமான ஈனச் செயல் என்று ஆப்கானிய அதிபர் அஷ்ரஃப் கானி தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஜலாலாபாத்திலேயே வழிபாட்டிடம் ஒன்றில் வேறொரு குண்டு வெடித்திருந்ததாகவும் ஆனால் அதில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வந்துள்ளன.
வங்கியில் நடந்த தாக்குதலை தாமே நடத்தியதாக ஆப்கானிஸ்தானிலுள்ள இஸ்லாமிய அரசு அமைப்பின் சார்பாகப் பேசவல்ல ஷஹீதுல்லா ஷஹீத் கூறினார்.
இன்னார்தான் குண்டு வைத்ததென்றும் அவர் சொன்னால் ஆனால் அவர் கூறிய தகவல்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
அவரது தெரிவித்தது உறுதிசெய்யப்படுமானால் ஆப்கானிஸ்தானுக்குள் இஸ்லாமிய அரசு அமைப்பு நடத்திய முதல் பெரிய தாக்குதலாக இந்த சம்பவம் அமையும்.
வங்கியில் நடந்த தாக்குதலுடன் தமக்கு சம்பந்தம் இல்லை என்றும் இத்தாக்குதலைத் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தாலிபான் சார்பாகப் பேசவல்ல ஸபீஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த வருடம் ஜலாலாபாத்தில் தாலிபான்கள் பல தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.