மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஏ பிரிவு உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 02ஆம் திகதி மட்டக்களப்பில் ஆரம்பமாகவுள்ளது.
“மட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்” என்ற பெயரில் முதன்முறையாக இந்த சுற்றுப்போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு மாநகரசபை கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இலண்டன் நம்பிக்கை ஒளியின் அனுசரணையுடன் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை அமைப்பு மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து இந்த சுற்றுப்போட்டியினை நடாத்துகின்றது.
இந்த நிகழ்வில் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை அமைப்பின் பணிப்பாளர் கே.சிவகரன் உட்பட உதைபந்தாட்ட கழகங்களின் தலைவர்கள்,உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள்,மாநகரசபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட ஏ பிரிவுகள் அணிகள் பத்து இந்த சுற்றுப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இவர்களுக்கான போட்டிகள் தொடர்பிலான அணிகளும் இதன்போது குலுக்கள் முறையில் தெரிவுசெய்யப்பட்டன.
இந்த நிகழ்வின்போது “மட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்”த்துக்கான இலட்சினையும் இதன்போது வெளியிட்டுவைக்கப்பட்டது.
இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 02ஆம் திகதி பிற்பகல் 2.00மணியளவில் மட்டக்களப்பு மாநகரசபையின் பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
23சுற்றுப்போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் சனிக்கிழமைகளில் இரண்டு போட்டிகள் வீதம் நடாத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.