4/30/2015

| |

எஸ்.சபாலிங்கம் - 21 ஆவது நினைவு தினம்

தமிழீழ விடுதலைப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரான எஸ்.சபாலிங்கம் அவர்களின் பிரான்சில்  விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 21 ஆவது நினைவு தினம் இன்று புகலிடத் தோழர்களால்  நினைவுகூரப்படுகின்றது. இவர் பிரபல அரசியல் விமர்சகரும்  புலம்பெயர் தேசங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவருமாவார்.  
பாரிஸில் உள்ள  அவரது இல்லத்தில் வைத்து  1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் “கட்டிடக்காட்டுக்குள்” என்கின்ற கவிஞர் செல்வம் அவர்களின் கவிதைத்தொகுதிஇ “எரிந்துகொண்டிருக்கும் நேரம்” எனும் கவிஞர் சேரனின் கவிதைத்தொகுப்பு போன்ற புகலிட எழுத்தாளர்களின் பல நூல்களை ஆசியா பதிப்பகம் மூலம்  வெளியிட்டு வந்தவர்.  தமிழ் இளைஞர் பேரவையின் ஸ்தாபகரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால முக்கியஸ்தருமான திரு.சி.புஸ்பராசா அவர்களால் பின்னாளில் வெளியிடப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலை ஆசியா பதிப்பகத்தின் மூலம் 1994 ஆம் ஆண்டு வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தருணத்திலேயே அந்நூல் வெளிவருவதன் ஊடாக பிரபாகரன் மீது கட்டியமைக்கப்பட்டிருந்த புனிதங்கள் எல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படும்இ பிரபாகரனது கொலைமுகம் அம்பலமாகும் என்று பயந்த விடுதலைப்புலிகளால் இந்தக்கொலை நிகழ்த்தப்பட்டது.  

இவர் பிரான்சில் வாழ்ந்த காலத்தில் மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணி இருந்தார். அந்த வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவியும்  கவிஞரும் கவிதைக்காக சர்வதேச விருதைப் பெற்றவருமான செல்வி விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு காணாமற் செய்யப்பட்டது தொடர்பாகவும் மற்றும்  விடுதலைப் புலிகளின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவும் உலகிலுள்ள மனித உரிமை அமைப்புக்களுக்கு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த காரணத்தால் விடுதலைப்புலிகள் இவர் மீது சீற்றம் கொண்டிருந்தனர் ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் நடத்திய முதலாவது படுகொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நூல் வெளியீடுகளை மட்டும் அல்ல தமிழ் சமூகத்தின் அரும்பெரும் பொக்கிசங்களான பழம்பெரும் நூல்களை மீளப் பதிப்பித்து பாதுகாக்க வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்ட அவர் யாழ்ப்பாண வைபவமாலையின் மீள் பதிப்பினையும் கூட செய்திருந்தார்.
சமூக சிந்தனையும் முற்போக்கு எண்ணங்களும் கொண்ட இப்பெருமனிதனின் இருப்பினை அழித்தொழித்த புலிகளை நோக்கி தமிழ் சமூகம் அன்று மனித உரிமைக் குரல் எழுப்பவில்லை. மாற்றுக்கருத்துகளுக்காக போராடிய அவர் சார்ந்த இலக்கியச் சந்திப்பு நண்பர்கள் போன்ற ஒருசிலர் மட்டுமே தனித்துநின்று இக்கொலையினை எதிர்த்து குரல் கொடுத்தனர்.
»»  (மேலும்)

4/28/2015

| |

பிள்ளையான் கட்டியதை தண்டாயுதபாணி திறந்தார்




கிழக்கு மாகாணசபையின் பிள்ளையானின் ஆட்சிக்காலம் ஒரு அபிவிருத்தி யுகமாக இருந்தது என்பதை அவரது எதிரிகள் கூட மறுக்கமுடியாது.முன்பொருதடவை கூட்டமைப்பு எம்பி செல்வராஜாவின் ஊரான கல்லாறு கிராமத்தில்  ஒரு திறப்புவிழாவில் பிள்ளையான் கலந்துகொண்டபோது அவ்விழாவில் தானும் கலந்துகொண்ட கூட்டமைப்பு எம்பி செல்வராஜா "முதலமைச்சர் அபிவிருத்தியில் மன்னன் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்" என்று தன வாயார புகழ்ந்தார்.


அந்த அளவுக்கு   பிள்ளையான் கிழக்கு அபிவிருத்திக்காகஅரசுடன் இணைந்து செயல்பட்ட காரணத்தால் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளை செய்திருந்தார்.அந்த நிதி ஒதுக்கீடுகளால் இதுவரை காலமும் பூரணமாகாதிருந்த கட்டிடங்களை இப்போது கூட்டமைப்பின் கிழக்குமாகாண அமைச்சர்கள் தேடித்தேடி திறந்து வைத்து வருகின்றனர்.

ஒருபுறம் அபிவிருத்தியல்ல உரிமையே வேண்டும் என்று பிள்ளையானை கிண்டலடித்த கூட்டமைப்பினர் இப்போது அபிவிருத்திபணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.ஆனால் அதைக்கூட தமது முயற்சியில் செய்ய முடியாத கிழக்கு கூட்டமைப்பு அமைச்சர்கள் பிள்ளையான் ஒதுக்கிய நிதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டிடங்களை துருவித்துருவி ஆராய்ந்து "திறப்புவிழாவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் நாங்கள் வருகின்றோம்"என்று அதிகாரிகளை பணித்து  வருகின்றனராம்..

அந்தவகையில் மட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று (28/04/2015) வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
சுமார் 4  மில்லியன் ரூபாய் செலவில் சி.சந்திரகாந்தனின் முன்மொழிவுமூலம் அமைக்கப்பட்ட  இக்கட்டிடத்தினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி வைபவரீதியாக திறந்து வைத்தார். இக்கட்டிடமானது  ஓர் அதிபர் அலுவலகத்தையும் நான்கு வகுப்பறைகளையும்இ கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
 
2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தரம் - 01 முதல் தரம் - 05 வரையான மாணவர்கள் கற்பதுடன்  மாணவர்கள் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான பலநோக்கு மண்டபத்திலும்இ  மரநிழல்களிலும் தற்காலிக கொட்டில்களிலும் தங்களது கல்வியை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அதனைத்தெடர்ந்தே சி.சந்திரகாந்தன் நிதி ஒதுக்கியிருந்தார்
»»  (மேலும்)

| |

மே தின ஊர்வலம் - மட்டக்களப்பு

Résultat de recherche d'images pour "may 1st communist"
  உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் வருடாவருடம் நடாத்தப்படும் தொழிலாளர் தின நிகழ்வு இம் முறை மட் /முறகொட்டாஞ்சேனை பிரதேசத்தில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. 

"புதிய சட்டதிருத்தங்களில் தமிழர்களின் உரிமையினை உறுதி செய்வோம்" என்ற தொனிப்பொருளில் இவ்வருடமும் உலக தொழிலாளர் தின நிகழ்வு மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை ஞானஒளி விளையாட்டு மைதானத்தில் பி.பகல் 4.30 மணிக்கு கௌரவ தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின்
தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இன் நிகழ்விற்கான வாகன பேரணி மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைமைக் காரியாலயத்தில் இருந்து பி.ப 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மோட்டார் சைக்கிள், ஓட்டோ, டக்ரர், சிற்றூர்ந்து, பேரூந்து உள்ளிட்ட வாகனங்களின் பேரணியும் ஊர்வலமும் நடைபெறவுள்ளதாக பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.கிழக்குமாகாணத்தின் மூன்று  மாவட்டங்களிலுமிருந்து பல்வேறு தொழிசங்கங்களும் இந்த ஊர்வலத்தில் பங்கெடுக்கின்றனர்.
»»  (மேலும்)

| |

நல்லாட்சியில் தமிழருக்கு ஆப்பு தமிழர்களின் 2500 ஏக்கர் காணியை அபகரிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்புகள் மற்றும் காடழிப்புகளை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ள வாகரை பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரொபட்லி நிக்ஷன், ஒரு வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வாகரை பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் செயலாளர் த.பிரபாகரன் உட்பட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த வாகரை பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரொபட்லி நிக்ஷன்,
வாகரைப்பகுதியில் நில அபகரிப்புகள்,காடு அழிப்புகள் திட்டமிட்டவகையில் நடைபெற்றுவருகின்றன.பாரியளவிலான காடுகள் அழிக்கப்பட்டு நிலங்கள் பங்கீடுசெய்யப்பட்டுள்ளது.

வாகரைப்பிரதேசமானது தமிழ் மக்களின் பூர்வீக பகுதியாகும்.அங்கு நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் காணியை தவிரவேறு காணி கிடையாது.மக்களாக காணியைப்பெற்றுக்கொண்டாலும் அதற்கு தடை விதிக்கப்படுகின்றது.அரசாங்கத்தினால் காணிகளை பிடிக்ககூடாது,காடுகளை அழிக்ககூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளநிலையில் இவ்வாறான நில அபகரிப்புகள்,காடு அழிப்புகள் எந்த அடிப்படையில் நடைபெறுகின்றது என்பது எங்களுக்கு விளங்காத நிலையே உள்ளது.பிரதேச மக்களின் தகவலின் அடிப்படையில் அமைச்சர் அமீரலி இதில் தொடர்புபட்டுள்ளதாகவும் அவரை சார்ந்தவர்கள் இங்குவந்து காடுகளை அழித்து நிலங்களை அபகரிப்பதாகவும் அறிந்திருந்தோம்.வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனாணை கிழக்கு பகுதிக்குட்பட்ட காரைநகர் மற்றும் மாங்கேணி,கிரிமிச்சை ஆகிய பகுதிகளில் இந்த காணி அபகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

வாகரை பிரதேசம் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி என்பதுடன் இப்பகுதியில் உள்ள நிலங்களை எமது மூதாதையர்கள் மிகவும் பக்குவமாக பராமரித்து பாதுகாத்துவந்த பகுதியாகும்.இப்பகுதியை பாதுகாத்து எமது எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது.
நாங்கள் விறகுக்காக ஒரு மரத்தினை வெட்டும்போது வனபாதுகாப்பு அதிகாரிகள் எங்களை தடுத்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி நீதிமன்றம் கொண்டுசெல்கின்றனர்.நாங்கள் சேனைப்பயிற்செய்கைக்காக இங்கு வந்து ஒரு ஏக்கர் காணியை துப்புரவுசெய்யும்போது அதனை அரச அதிகாரிகள் தடுக்கின்றனர்.
2500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் டோசர் கொண்டு காடுகள் அழிக்கப்பட்டு நில ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றது.அப்பகுதியில் வாழும் மக்களுக்கு சட்ட ரீதியாக காணியை வழங்குவதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பினையும் தெரிவிக்கப்போவதில்லை.ஆனால் வேறு பகுதிகளில் இருந்துவரும் செல்வச்செழிப்பு மிக்கவர்கள் இந்த காணி அபகரிப்பினை செய்கின்றனர்.இதனை நாங்கள் அனுமதிக்கமுடியாது.

குறிப்பாக ஓட்டமாவடி,ஏறாவூர் பகுதிகளில் இருந்துவரும் உயர் வர்த்தகர்களே இந்த காணிகளில் தற்காலிக தங்குமிடங்களை அமைத்துவருவதை காணமுடிகின்றது.
நீண்டகால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களினால் பெரும் பாதிப்புகளை கொண்ட இப்பகுதியில் பூவீகமாக தமிழர்கள் வாழும் பகுதியாகும்.இப்பகுதியில் உள்ள ஒரு குடும்பம் தனது பிள்ளைக்கு திருமணம் முடித்துச்செல்லும்போது வழங்குவதற்கு ஒரு துண்டு காணி இல்லாத நிலையே இருந்துவருகின்றது.இவ்வாறான அத்துமீறிய காணி அபகரிப்பு செயற்பாடானது எதிர்காலத்தில் இனங்களுக்கிடையிலான பிரச்சினையை தோற்றுவிக்ககூடிய நிலையேற்படும்.வாகரை பிரதேசம் அதிகளவு தமிழர்கள் வாழும் பகுதி அதிலும் இந்துக்கள் வாழும் பகுதி. அத்துமீறி குடியேறியவர்களினால் பள்ளிவாயல் அமைக்கப்பட்டுவருகின்றது.இதுமிக மோசமான செயலாகும்.

இதற்கு பின்னணியாக இருக்கும் அரசியல்வாதிகளோ,அரச அதிகாரிகளோ இதனை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்.இதனை இன்று நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றோம்.இது ஒரு வாரத்திற்குள் நிறுத்தப்படாவிட்டால் வாகரை பிரதேச மக்களை ஒன்றுதிரட்டி பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோம்.

காடுகளில் விறகுகளை எடுத்து துவிச்சக்கர வண்டியில் கொண்டுசெல்லமுடியாத நிலைமை.அவ்வாறு கொண்டுவந்தால் உடனடியாக பொலிஸார் கைதுசெய்கின்றனர்.ஆனால் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்படும்போது பொலிஸாரோ அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கவலைக்குரிய விடயமாகும்.
»»  (மேலும்)

4/27/2015

| |

இதற்கு தானே ஆசைப்பட்டாய் அரியேந்திரா?

Résultat de recherche d'images pour "பா.அரியநேத்திரன்"புலம்பெயர் நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்கவும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சவூதி அரேபியாவில் தொழில் புரிந்துவந்த மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரகுபதி கனகசூரியம் என்பவர், விடுமுறையில் 22ஆம் திகதி நாடு திரும்பினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கைதுசெய்யப்பட்ட ரகுபதி கனகசூரியம், தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னர் விடுமுறையில் நாடு திரும்பி மீண்டும் எந்தவித இடையூறுமின்றி ரகுபதி கனகசூரியம், சவூதி அரேபியாவுக்கு திரும்பிச் சென்றிருந்ததாகவும் முதல் முறையாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
நல்லாட்சி என்றால் தமிழ் மக்கள் இவ்வாறு கைதுசெய்யப்படலாமா?. அரசியல் காரணங்களுக்காக புலம்பெயர்ந்துள்ளோர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் முன்னாள் போராளிகள் இந்த சந்தர்ப்பத்தில் நாடு திரும்புவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின் முடிவில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 15 தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடு சென்று தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடு திரும்பியவர்களும் இதில் அடங்குகின்றனர்.
குவைத், ஓமான், சவூதி அரேபியா, இத்தாலி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து நாடு திரும்பிய பலர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எனவே இலங்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில் புலம்பெயர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்கவும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
»»  (மேலும்)

4/26/2015

| |

மட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்” நடாத்த நடவடிக்கை – எதிர்வரும் 02ஆம் திகதி ஆரம்பம்

IMG_4289மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஏ பிரிவு உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 02ஆம் திகதி மட்டக்களப்பில் ஆரம்பமாகவுள்ளது.
“மட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்” என்ற பெயரில் முதன்முறையாக இந்த சுற்றுப்போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு மாநகரசபை கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இலண்டன் நம்பிக்கை ஒளியின் அனுசரணையுடன் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை அமைப்பு மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து இந்த சுற்றுப்போட்டியினை நடாத்துகின்றது.
இந்த நிகழ்வில் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை அமைப்பின் பணிப்பாளர் கே.சிவகரன் உட்பட உதைபந்தாட்ட கழகங்களின் தலைவர்கள்,உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள்,மாநகரசபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட ஏ பிரிவுகள் அணிகள் பத்து இந்த சுற்றுப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இவர்களுக்கான போட்டிகள் தொடர்பிலான அணிகளும் இதன்போது குலுக்கள் முறையில் தெரிவுசெய்யப்பட்டன.
இந்த நிகழ்வின்போது “மட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்”த்துக்கான இலட்சினையும் இதன்போது வெளியிட்டுவைக்கப்பட்டது.
இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 02ஆம் திகதி பிற்பகல் 2.00மணியளவில் மட்டக்களப்பு மாநகரசபையின் பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
23சுற்றுப்போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் சனிக்கிழமைகளில் இரண்டு போட்டிகள் வீதம் நடாத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
»»  (மேலும்)

| |

கூட்டமைப்பினரின் பொல்லைக்கொடுத்து அடிவாங்கும் முட்டாள்தனம்

 புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு நூறு நாட்களில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த 16 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்குமாறு சட்டத்துக்கும் சமாதானத்துக்குமான அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதிய அரசாங்கம் இந்த நாட்டில் அமைக்கப்பட்டு 23ஆம் திகதியுடன் நூறாவது தினத்தினை பூர்த்திசெய்துள்ளநிலையில் இந்த நூறு நாட்களுக்குள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மட்டக்களப்பினை சேர்ந்த 16 இளைஞர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பூசா,மகசின்,வெலிக்கடை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு அவர்கள் மீதான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள்,இவர்கள் அனைவரும் இளம் குடும்பஸ்த்தராகும்.

விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.ஏற்கனவே சரணடைந்த பல இளைஞர்கள்,விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது.இவ்வாறான நிலையில் மீண்டும் கைதுகள் நடைபெறுவது இந்த நாட்டில் தமிழ் இளைஞர்கள் சந்தோசமாக வாழமுடியாது என்பதை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஜனநாயக வழிக்கு வந்து,திருணம் செய்து பிள்ளைகள் குடும்ப என்று வாழந்துவந்தவர்கள்.இவர்கள் உள்நாட்டில் வேலைவாய்ப்பினை பெறமுடியாத நிலை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று உழைத்துவிட்டு மீண்டும் தமது பிள்ளைகள் மனைவிமாரை பார்க்க வரும்போது இவ்வாறான நிர்க்கதி நிலைக்குள்ளாக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் மனைவிமார் என்னிடம் வந்து,நாங்கள் இந்த நாட்டில் சமாதானமாக வாழவேண்டும்,பயப்பீதி இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காக நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு வாக்களித்ததுடன் அவரின் வெற்றிக்காகவும் பாடுபட்டோம்.எங்களுக்கு புதிய அரசாங்கம் செய்யும் கைமாறு இதுதானா என்று கேட்கின்றனர்.

எனவே சட்டத்துக்கும் சமாதானத்துக்குமான அமைச்சராகிய நீங்கள் இது தொடர்பில் கவனம் எடுத்து கைதுசெய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கையெடுக்கவேண்டும்.

அத்துடன் இதுபோன்ற கைதுகள் இனிவரும் காலங்களிலும் தொடராமல் இருக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பியுள்ள கடிதத்தில்; கேட்டுள்ளார்.
»»  (மேலும்)

| |

காரைதீவு பிரதேசசபையின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு தீர்வுகள் கிடைக்குமா? க.குமாரசிறி

காரைதீவு பிரதேசசபையின் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் பிரதேச மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக 2011 ம் ஆண்டு நடைபெற்ற பிரதேசசபை தேர்தலின் பின்னர் மக்கள் ஆணையுடன் தெரிவான தவிசாளரை பதவி விலக்கி தற்போது அப்பதவியில் இருக்கின்ற தவிசாளரும் சில உறுப்பினர்களும் காரைதீவு பிரதேசத்தின் வளற்சியில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர்.
பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை சுத்தம் செய்து கழிவுகளை சூழலுக்கு பாதிப்பேற்படாவண்ணம் உரிய முறையில் கழிவுகளை பொறுபேற்கும் வாகனத்திடம் ஒப்படைத்து வருகின்றனர். ஆனால் கடந்த 30.03.2015 க்கு பின்னர் இன்றுவரைக்கும் கழிவுகள் பெறாமையினால் விபுல மண்ணின் வீதிகள் அனைத்தும் அழுக்கடைந்து காணப்படுகின்றன. இவ்வாறு பலமுறை நிகழ்ந்திருக்கின்றன.
மேலும் வீதி அபிவிருத்தி என்ற பெயரில் பாதைகளை மக்கள் பாவிக்க முடியாதவண்ணம் செய்திருக்கின்றனர்.(Apc வீதி)
இதுபோன்ற மேலும் பல மக்கள் நலனற்ற விடயங்கள் எமது பிரதேசசபையில் இடம்பெறுகின்றன. இந்த விடயங்கள் சம்பந்தமாக கடந்த பிரதேச சபைத்தேர்தலில் எமது கட்சியும் போட்டியிட்டதனாலும், பொறுப்புமிக்க கட்சி என்ற வகையிலும் இப்பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆகியோரை சந்தித்து இவற்றிற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறியும் இதுவரைக்கும் தீர்வுகள் எட்டப்படவில்லை. இவர்களால் கிறவலிடப்பட்ட வீதியை பயன்படுத்தும் மக்கள் பலமுறை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு வீதியின் நிலைமையை வந்து பார்குமாறு அழைத்தும் செவிமடுக்கவில்லை.
எனவே இவ்வாறான இவர்களது நடவடிக்கைகள் திருத்தப்பட்டு மக்களுக்கான சேவை உரிய முறையில் கிடைக்க வேண்டும் இதற்கு எங்களால் இயன்றஅனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குவோம். மாறாக தவறுகள் தொடருமாயின் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி பிரதேசசபையின் ஆட்சியை கலைத்து செயலாளரிடம் ஒப்படைத்து அவரினூடாக இம்மண்ணை கட்டியெழுப்புவோம்.
»»  (மேலும்)

| |

பாராட்டு வைபவம்

கடந்த 2015 மார்ச் 22-29 ம் திகதிகளில் நடைபெற்ற பிரான்சின் பிராந்திய நிர்வாக சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த செல்வி சேர்ஜியா மகேந்திரனும் ஒருவர். இவர் கார்ஜ் லெ கோணேஸ், ஆர்னோவீல் எனும் கிராமங்களின் நிர்வாக சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் வெற்றியை வாழ்த்தி பாராட்டும் வைபவம் நேற்று மாலை கார்ஜ் லெ கோணேசில் நடைபெற்றது. கார்ஜ் லே கோணேஸ் வாழ் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வைபவத்திற்கு பிரான்சில் பல்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழர்களும் கலந்து கொண்டு சேர்ஜியா அவர்களை வாழ்த்தி பாராட்டினார்கள். 
கோவை நந்தன் அவர்களின் தலைமையில் பாராட்டு வைபவம் நிகழ்ந்தது.
»»  (மேலும்)

4/25/2015

| |

நேபாள நிலநடுக்கத்தால் 400க்கும் அதிகமானோர் பலி

நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில். 7.9 ரிச்டர்  அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இவ் அனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளுக்கு வெளியே வைத்து சிகிச்சையளிக்கப்பட்டனர். இந் நிலநடுக்கத்தால் காத்மண்டுவில் காணப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டடங்கள் இடிந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. புறநகர்பகுதிகளில் அதிகளவான மக்கள் சிக்கியிருப்பதாகவும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளளது. அதிகளவான மக்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
»»  (மேலும்)

4/22/2015

| |

ரணில் விக்கிரமசிங்கவின் ஒட்டுக் குழுவாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.

Résultat de recherche d'images pour "tna sampanthan"தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளுடன் கூட்டு வைத்திருக்கவில்லை, புலிகளை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை, புலிகளின் கொள்கையை ஏற்கவில்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு பகிரங்கமாக தெரிவித்து உள்ளார் எம். ஏ. சுமந்திரன் எம். பி.
இவ்வாறு சுமந்திரன் எம். பி தெரிவித்து உள்ளமையை தமிழ் தேசிய கூட்டமைப்போ, கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களோ இது வரை கண்டிக்கவோ, ஆட்சேபிக்கவோ இல்லை.
ஆனால் புலிகளை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செய்து வருகின்றது என்பதை மாத்திரம் சுமந்திரன் எம். பி தெரிவித்து இருக்கவில்லை.
இதே நேரம் யாருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டு வைத்து இருக்கின்றது?, யாரை கூட்டமைப்பு ஆதரிக்கின்றது? அல்லது ஊக்குவிக்கின்றது?, யாருடைய கொள்கையை கூட்டமைப்பு ஏற்றுச் செயற்படுகின்றது? என்கிற கேள்விகளுக்கான விடையை இப்பதிவில் காணலாம்.
புலிகளின் தலைவர் வே. பிரபாகரனிடம் இருந்து கருணாவை சூழ்ச்சியால் பிரித்த ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒட்டுக் குழுவாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அதிகாரத்தின் மையத்துக்கு வருகின்றமையை புலிகளின் தலைவர் விரும்பி இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை தேர்தலில் தோற்கடிக்கின்ற கைங்கரியத்தில் புலிகள் ஈடுபட்டு உள்ளனர். ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டு இருந்தனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தின் மையத்துக்கு ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வருகின்ற பகீரத முயற்சியில் மிக நீண்ட காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டு ஓரளவு வெற்றி கண்டு உள்ளது.
இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீது புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தினர். ஆனால் இதே சரத் பொன்சேகா எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் நின்றார். தமிழ் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரித்தது.
இதே போல பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. இவர் மீதும் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி இருந்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் இவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டார். இவரின் வெற்றிக்காக வடக்கு, கிழக்கில் சூறாவளிப் பிரசாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்தது.
• ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுப் பொதியை ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் எதிர்த்தது.
• ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து சிங்கக் கொடியை தூக்கிக் கொண்டு கொழும்பில் மே தினம் நடத்தியது.
• மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் நிறைவேற்றுக் குழுவில் ஒட்டிக் கொண்டு நிற்கின்றது.
• ஸ்ரீலங்காவின் சுதந்திர தின விழாவில் பங்கேற்றது.
• வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பனிப் போர் நடத்தி வருகின்றபோதிலும் பிரதமருடன் உறவாடுகின்றது.
• டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தி வெற்றி கண்டது.
»»  (மேலும்)

| |

நாடாளுமன்றத்தை கலைக்கமாட்டேன்: மைத்திரி

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் நாளை 23ஆம் திகதியுடன் நிறைவடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
»»  (மேலும்)

| |

பசில் உட்பட மூவர் கைது

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, உள்ளிட்ட மூவர் நிதி மோசடி பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 மணிநேர விசாரணைக்கு விசாரணைக்கு பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
அவருடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ரக் ரணவக்க ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்

»»  (மேலும்)

4/21/2015

| |

அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சம்: மஹிந்த

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சு பதவியை கொடுத்தமை இலஞ்சம் என்றால், அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சமாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஹம்பேகமுவ விஹாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  நாங்கள் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் கொடுத்தோம். இன்று, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள யுகமாகும். இது உண்மையிலேயே வருந்ததக்க விடயமாகும். எனக்கு பரிசொன்றை அண்மையில் வழங்கினார்கள். அதாவது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருகைதருமாறு.  நான். அது என்னவென்று பார்த்தேன். பார்த்தபோதுதான் விளங்கியது. நான், அமைச்சு பதவியை கொடுத்தது இலஞ்சமாம். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை ஜனாதிபதி வழங்கியது ஊழலாயின் அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சமாகும் என்றும் அவர் கூறினார். திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சு பதவியானது, அரசியலமைப்பில் எனக்கிருக்கின்ற அதிகாரத்தின் பிரகாரமே வழங்கப்பட்டது. தேர்தல் நிறைவடைந்து மற்றொரு நபர் பதவியேற்கும் வரையிலும் நானே ஜனாதிபதி.  இவ்வாறான பகிடிகளைதான் தற்போது பார்க்க முடியும். விசாரணைக்கு உட்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையாகும். நான் கூறவில்லை நாங்கள் முழுமையானவர்கள் என்று. எங்களில் சிலர் தவறிழைத்தனர். அவர்களை பாதுகாத்தது தான் நாம் விட்ட பெரும் தவறாகும்.  சில அமைச்சர்கள் வந்து கதிரையில் அமராமல் கீழே அமர்ந்தனர். அவ்வாறானவர்களே இன்று எதிராக கதைக்கின்றனர். இதுவா நல்லாட்சி , தவறு செய்தவர்களை பாதுகாத்தது தான் நாம் செய்த பெரும் தவறு. இல்லையெனில் நாம் செய்த தவறு ஒன்றுமில்லை என்றும் அவர் கூறினார்.   - See more at: http://www.tamilmirror.lk/144388#sthash.OUdqYmd7.dpuf
»»  (மேலும்)

| |

பஸில் ராஜபக்ஷ வந்தடைந்தார்

பஸில் ராஜபக்ஷ வந்தடைந்தார்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ, சற்று நேரத்துக்கு முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை வரவேற்பதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் இருமருங்குகளிலும் காத்திருக்கின்றனர். 

- See more at: http://www.tamilmirror.lk/144398#sthash.zBp5GDqO.dpuf
»»  (மேலும்)

4/20/2015

| |

புரட்சிகர மே தினம்

அன்புள்ள தோழர்களே நண்பர்களே!
எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிச கட்சி மக்கள் அதிகாரத்திற்கான மாற்று அரசியலை முன்னெடுப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடத்த
ுகின்றது யாழ்ப்பணத்தில் புத்தூரிலும், மலையகத்தில் மாத்தளை நகரிலும், வன்னியில் வவுனியா நகரிலும் பேரணிகள் கூட்டங்கள் நடாத்துவதற்கு கட்சி தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது.
உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் கோரிக்கைகளை முன்வைத்து தேசிய இனப்பிரசியின் அரசியல் தீர்வை வலியுறுத்தி, மேதினத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்களை அணிதிரட்டும் பிரச்சார வேலைகளில் கட்சி ஈடுபட்டுள்ளது,
மூன்று பிரதேசங்களில் மேதின நிகழ்வுகள் ஒழுங்கமைக்க பட்டுள்ளதால் இதற்கு பெரும்தொகை நிதிவளம் தேவைப்படுகின்றது. 


அதனால் தங்களாலான நிதி உதவி செய்து மேதின நிகழ்வுகள் வெற்றிபெற உதவுவீர்கள் என நம்புகின்றோம்.
நிதி அனுப்பவேண்டிய விபரம்
K.Senthivel.
V.Makenthiran.
Commercial bank(Grand pass branch-7056057)
A/C NO- 1570018335
Swift code-CCEYLKLX
தோழமையுடனும் அன்புடனும்
சி.கா.செந்திவேல்.
பொதுச்செயலாளர்
»»  (மேலும்)

| |

தேர்தல் முறை மாற்றப்படுவதை சிறிய கட்சிகள் எதிர்க்கின்றன

இலங்கையில் அமலில் உள்ள விகிதாசார தேர்தல் முறையில் மாற்றங்களை செய்வதை இலங்கையின் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் கூட்டாக எதிர்த்துள்ளன.
இது குறித்து ஆராய்வதற்காக இன்று அந்தக் கட்சிகள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற பல சிறுபான்மைக் கட்சிகளும், ஜேவிபி போன்ற பல சிறிய கட்சிகளும் அதில் கலந்துகொண்டன.
இலங்கையின் தற்போதைய தேர்தல் முறையே ஒப்பீட்டளவில் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்கு சாதகமானது என்றும் ஆகவே அதனை மாற்றக்கூடாது என்றும் அந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் மக்கள் போரினால் இடம்பெயர்ந்திருக்கும் நிலையில் அங்கு அங்கத்தவர் தொகையை உடனடியாக குறைக்கக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டதாக அந்த சந்திப்பில் கலந்துகொண்ட மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
»»  (மேலும்)

4/19/2015

| |

பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸவரன் ஆகியோர் 2003ஆம் ஆண்டுவரைஎப்போதாவது ?

கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக நடைபெற்ற பல உண்மைச் சம்பவங்களை எமது மக்களுக்கு தெரிவிப்பதற்காக தற்போது நான் புதிய முயற்சி எடுத்துள்ளேன். நான் எழுதுவதை யாரும் படிப்பதில்லை. மாறாக, அதனை படிப்பவர்கள் யாரும் அது பற்றிக் குற்றம் சொன்னதும் இல்லை.  குற்றம் சொல்பவர்கள் யாரும் படிப்பதுமில்லை’ இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர்கள் கூட்டம், மட்டக்களப்பு, தேற்றாத்தீவு கிராமத்தில் சனிக்கிழமை (18) இரவு நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,   ‘தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை வழங்கி, அவர்களை  குழப்பும் நடவடிக்கைகளை பலர் செய்துவருகின்றனர். இதனால், மக்கள் திக்கித்திணறுகின்றனர்.  இந்த நிலையில், மக்களை தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.   ஜி.ஜி.பொன்னம்பலத்தையும் தந்தை செல்வநாயகத்தையும் முதன்முதலில் சந்தித்த அரசியல்வாதி நான்.  பழைய  தலைவர்கள் இவர்கள் இருவரும் கடந்த காலத்தில் ஒன்றாக இருந்து எமது மக்களுக்காக குரல் கொடுத்திருந்தும், பின்னர் பிரிந்து செயற்பட்டு, மீண்டும் ஒன்றுசேர்ந்து செயற்பட்ட வரலாறு  உள்ளது.
1972ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து மாபெரும் பொதுக்கூட்டத்தை  திருகோணமலையில் நடத்தியது. அக்கூட்டத்தில் இரா.சம்மந்தன் பற்கேற்றிருந்தும் அவர் எந்தக் கட்சி சார்பாகவும் எதுவித பதவிகளையும் வகிக்கவில்லை. அன்றையதினம் நடைபெற்ற கூட்டத்திலேயே தந்தை செல்வா தலைமையில் உருவாக்கப்பட்டதே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியே தமிழருடைய கட்சி என்ற நோக்கத்துடன் செயற்பட்டவர் தந்தை செல்வா. 1972ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழரசுக் கட்சி இனிமேல் இயங்காது என்ற கோஷத்துடனும் தமிழரசுக் கட்சியை மேலோங்கச் செய்யவேண்டும் என்று கனவிலும்  கூட நினைக்காமலும் தந்தை செல்வா செயற்பட்டுவந்தார்.
1977ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது தமிழர் விடுதலைக் கூட்டணியே தவிர, தமிழரசுக் கட்சி அல்ல. தந்தை செல்வா இறக்க முன்னர் ஜி.ஜி.பொன்னம்பலத்தையும் தொண்டமானையும் கொணர்ந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களாக்கிவிட்டு, இனிமேல் தமிழர்களின் தலைவர்கள் இவர்களே என அறிமுகமாக்கிவிட்டு இறந்தார். தந்தை செல்வாவின் பூதவுடல்  தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் கொடி போர்த்தி எரிக்கப்பட்டது. இவை அனைத்தும் வரலாற்றுச் சான்றாகும். இதனை எமது மக்கள்  அறிந்துகொள்ள வேண்டும். தந்தை செல்வா இறந்து 26 வருடங்களுக்கு பின்னர் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, மட்டக்களப்பு மக்களை முட்டாளாக்கிவிட்டு மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியை  மீண்டும் உருவாக்கினார்.
இவை ஒரு புறமிருக்க மட்டக்களப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸவரன் ஆகியோர் 2003ஆம் ஆண்டுவரை எப்போதாவது இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்துள்ளார்களா? இல்லவே இல்லை.
2003ஆம் ஆண்டுக்கு முன்னர் அவ்வாறு அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்திருந்தால், அதனை அவர்கள் நிரூபித்துக் காட்டட்டும். அதற்கு நான் சவால் விடுக்கின்றேன். இவர்கள் அனைவரும் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி மாநாட்டில்; அக்கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார்கள். இதுவே உண்மை.
மட்டக்களப்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசனம் எவ்வாறு கிடைத்தது என்பதை நன்கு உணரவேண்டும். அவர்கள் தங்களை பற்றி சிந்தித்த பின்னரே,  மற்றையவர்களை பற்றி கதைக்கவேண்டும். தற்போது தமிழரசுக் கட்சி என்று கூறிக்கொண்டு செயற்படும் அனைத்து அரசியல்வாதிகளும் ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து செயற்பட்டவர்கள். இதனை யாரும் மறுக்கமுடியாது.
எமது மக்களுக்காக இதுவரையில் தமிழரசுக் கட்சியிலிருந்து யாரும் உயிர் நீக்கவில்லை. ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து நீலன்; திருச்செல்வம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சிவபாலன், போன்ற தலைவர்கள் இறந்துள்ளார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலத்திலேயே ஆயுதப்போராட்டம், சாத்வீகப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டன. மாறாக, இலங்கைத் தமிழரசுக் கட்சிக் காலத்தில் இவை எதுவும் நடக்கவில்லை. இதனை எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். கடந்த காலத்தில் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களில் உயிரிழந்தவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரே தவிர, இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இதற்கு யாரும் சவால் விட்டால் அதனை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளேன்’ என்றார்
»»  (மேலும்)

| |

ஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 33 பேர் பலி

அரசாங்க ஊழியர்கள் வங்கியில் தமது ஊதியத்தை பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் குண்டு வெடித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் சிறார்கள் பலர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானில் இந்த ஆண்டு நடந்துள்ள மிக மோசமான சம்பவமாக இது அமைந்துள்ளது.
இத்தாக்குலைத் தாமே நடத்தியதாக இஸ்லாமிய அரசு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே நங்கார்ஹர் மாகாணத்தில் நடந்துள்ள வேறொரு குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டும் நால்வர் காயம் அடைந்தும் உள்ளனர்.
இது ஒரு கோஷைத் தனமான ஈனச் செயல் என்று ஆப்கானிய அதிபர் அஷ்ரஃப் கானி தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஜலாலாபாத்திலேயே வழிபாட்டிடம் ஒன்றில் வேறொரு குண்டு வெடித்திருந்ததாகவும் ஆனால் அதில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வந்துள்ளன.
வங்கியில் நடந்த தாக்குதலை தாமே நடத்தியதாக ஆப்கானிஸ்தானிலுள்ள இஸ்லாமிய அரசு அமைப்பின் சார்பாகப் பேசவல்ல ஷஹீதுல்லா ஷஹீத் கூறினார்.
இன்னார்தான் குண்டு வைத்ததென்றும் அவர் சொன்னால் ஆனால் அவர் கூறிய தகவல்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
அவரது தெரிவித்தது உறுதிசெய்யப்படுமானால் ஆப்கானிஸ்தானுக்குள் இஸ்லாமிய அரசு அமைப்பு நடத்திய முதல் பெரிய தாக்குதலாக இந்த சம்பவம் அமையும்.
வங்கியில் நடந்த தாக்குதலுடன் தமக்கு சம்பந்தம் இல்லை என்றும் இத்தாக்குதலைத் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தாலிபான் சார்பாகப் பேசவல்ல ஸபீஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த வருடம் ஜலாலாபாத்தில் தாலிபான்கள் பல தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
»»  (மேலும்)

4/18/2015

| |

மட்டக்களப்பு களுதாவளை குளத்தில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் உள்ள நீர்நிலை பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களுதாவளை நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகில் உள்ள நீர்நிலைப்பகுதியிலேயே இந்த 
சடலம் இன்று பிற்பகல் 3.00மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் கடந்த 10 நாட்கள் கடந்ததாகவுள்ளதாகவும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
»»  (மேலும்)

4/14/2015

| |

புலிகள் குறித்தான இன்றைய இலக்கியங்களும், அதன் நோக்கங்களும்

  Résultat de recherche d'images pour "நிலாந்தன்" அண்மைக் காலமாக புலிகளின் காலத்தைய ஒட்டிய இலக்கிய படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புலிகளின் அதிகாரம் நிலவிய காலத்தையும், இறுதி யுத்தம் நடந்த காலத்தையும், யுத்தத்துக்கு பிந்தைய காலத்தையும் மையப்படுத்திய இந்த இலக்கியங்களின் அரசியல் தான் என்ன? இவை ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களில் இருந்து வெளிவருகின்றனவா? என்பது சமூக அக்கறையுள்ளவர்கள் முன்னுள்ள கேள்வியாகும். 
"இலக்கியம் இலக்கியத்துக்கே" என்று கூறும் மக்களை பற்றிய அக்கறையற்றவர்கள், மக்கள் விரோத இலக்கியப் போக்கை நியாயப்படுத்துகின்ற இலக்கிய - அரசியல் வெளியில், வெளிவரும் இலக்கியங்களின் அரசியல் போக்குகள் குறித்து ஆராய்வோம்.
இன்று வெளிவரும் புலிகளின் கால இலக்கியங்கள், அக்கால அரசியல் மீதான விமர்சனத்தில் இருந்து வெளிவரவில்லை. புலிகளின் கால அரசியல் போக்கில் தமது அரசியல் இருப்பை நியாயப்படுத்தும் அடிப்படையில், படைப்புகளை தகவமைத்துக் கொள்கின்றனர்.
இந்த வகையான இலக்கிய போக்கு புலிகள் மீதான விமர்சனத்தை புலிகள் கொண்டிருந்த அரசியல் இருந்து அணுகுகின்றது என்பதில் இருந்து, படைப்புகளின் நோக்கத்தை இனம் கண்டு கொள்ள முடியும். இந்த நூல்கள் தொடர்பான விமர்சனங்கள் - பகுப்பாய்வுகளுக்கு இது தான் அளவுகோள்.
புலிகள் மீதான விமர்சனமானது புலிகள் கொண்டிருந்த அரசியல் ரீதியானதே ஒழிய; சம்பவங்கள் ரீதியானதோ, புலிகளின் நடத்தைகள் தொடர்பானவையோ அல்ல. அரசியலுக்கு வெளியில் புலிகளின் காலத்தை அணுகும் பார்வையானது, யாழ் மேலாதிக்க வெள்ளாள சாதிய சிந்தனை வகைக்கு உட்பட்டதே. எந்த அரசியல் புலியை உருவாக்கியதோ, அதற்குள் குண்டுச்சட்டியை ஓட்டுவதாகும். அரசியல் ரீதியான விமர்சன இலக்கியத்திற்கு பதில், அதை நியாயப்படுத்தும் வண்ணம் சம்பவங்கள், நடத்தைகள் தொடர்பான தனிமனித நலன் சார்ந்த இலக்கியங்களாகவே அண்மைய இலக்கியங்கள் வெளிவருகின்றன.
இத்தகைய நூல்களை எழுதுகின்றவரின் நோக்கம் மக்கள் நலன்கள் சார்ந்த தெரிவோ அல்லது சமூகம் சார்ந்த நடத்தையோ கிடையாது. புலிகளின் காலம் பற்றிய நூல்களை எழுதுவதன் மூலம் பணம் சம்பாதிக்க இருக்கும் இன்றைய வாய்ப்புகளையும், புலி அல்லாத புதிய சூழலில் தங்களை இலக்கிய பிரமுகராக நிலைநாட்டும்... தனிநபர் நலன் சார்ந்த நோக்கிலுமே, இத்தகைய படைப்புகள் வெளிவருகின்றதை பொதுவில் காண முடிகின்றது.
புலிப் பாசிசம் நிலவிய போது அதற்கு ஒத்தூதி பிழைத்த இலக்கிய சந்தர்ப்பவாதிகள், புலிப் போராட்டத்தின் காலத்தில் மட்டுமல்ல இன்றும் புலியை சொல்லி பிழைக்கும் இலக்கிய போக்கிரிகளாக மாறி இருப்பதையே காண முடிகின்றது. எந்த சமூக நோக்கற்றதும், கடந்த காலத்தை உழைக்கும் மக்களை சார்ந்து அரசியல் மூலம் நோக்காத, இத்தகைய இலக்கிய படைப்புகளின் மக்கள் விரோத தன்மையை இனம் கண்டு அணுக வேண்டும்.
புலிகள் இருந்த வரை வலதுசாரிய வர்க்க உள்ளடக்கத்தையும், அதன் மக்கள் விரோத பாசிசப் போக்கையும் இலக்கிய படைப்பாக்கியவர்கள், மறுபடியும் வலதுசாரிய மக்கள் விரோத இலக்கியத்தையே இன்று முன்தள்ளுகின்றனர் என்பதே உண்மை.
மக்கள் குறித்து அக்கறையுள்ளவாகளும், நடைமுறையில் சமூக மாற்றத்தை நோக்கிய பயணிக்கின்றவர்களும் மக்கள் விரோதமான இந்த இலக்கிய போக்கின் அரசியலை இனம் கண்டு கொள்வது இன்று அவசியமானதாகும். இத்தகைய இலக்கியமானது மூடிமறைக்கும் அரசியல் சூக்குமத்தலானது. குறிப்பாக கடந்த கால அரசியலை பாதுகாக்கும் எல்லைக்குள்ளேயே, அதன் அரசியல் வரம்புக்குள்ளேயே, இவர்களின் இலக்கியங்கள் வெளிவருகின்றன. இதை வரலாற்று ரீதியான கடந்த அரசியல் போக்கின் ஊடாக புரிந்து கொள்ள முனைவோம்.
1980 களில் தோன்றிய தேசியவாத இலக்கியம்
வடகிழக்கு மக்கள் மத்தியில் தேசியம் முதன்மை முரண்பாடாக மாறியதன் பின்னான இலக்கியம் குறித்தும், தேசியம் தமிழ் இனவாதமாக மாறியதன் பின்னான இலக்கியம் குறித்தும் பொதுப் புரிதல் அவசியமானது.
1970 களில் தொடங்கிய தேசியவாதம் 1980 களில் முதன்மை பெற்ற போது இலக்கியத்திலும் அதன் தாக்கத்தைக் காணமுடியும். முற்போகக்கான இடது தேசியவாதத்தை அடிப்படையாக கொண்ட கருநிலை இலக்கியப் படைப்புகள் தோன்றின. இயக்கச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், உதிரியான படைப்புகளில் இந்த இலக்கியப் போக்கைக் காண முடியும்.
1960 களில் தோன்றிய இடதுசாரி இலக்கியத்தின் வீச்சான அதன் மரபு வழியில், இந்த இடது தேசிய இலக்கியம் கருக் கொண்டது. அரசியலில் இந்த இடதுசாரிய தேசியம் ஏற்படுத்திய தாக்கம், இலக்கியத்திலும் பிரதிபலித்தது. கருத்தளவில் மக்களை சார்ந்தாக தோன்றிய இந்த இடதுசாரிய தேசிவாத இலக்கியப் போக்குகளுக்கு மக்கள் சார்ந்த நடைமுறை இருக்கவில்லை. மறுபக்கத்தில் மக்களை ஒடுக்கும் வலதுசாரிய தேசியவாத போக்கு நடைமுறை கொண்டதாக காணப்பட்டது. இடது தேசியவாத கருத்துக்கும், வலது தேசியவாத நடைமுறைக்குமான முரண்பாட்டை வன்முறை மூலம் தீர்த்த வலதுசாரிய போக்கானது, இடது தேசியவாத இலக்கியப் போக்கின் வளர்ச்சியைத் தடுத்தது நிறுத்தியது.
இதனால் இடது தேசிவாதமாக கருக் கொண்ட இலக்கியம், வலதுசாரிய வன்முறைக்கு எதிரான இலக்கியமாக மாறியது. மக்கள் விரோத வலதுசாரிய தேசியவாத போக்கைச் சாடி, எள்ளி நகையாடும் இலக்கியமாக வெளிவந்தது.
1990 களில் வலதுசாரிய தேசியம் தன் அதிகாரத்தை முற்றாக நிறுவிக் கொண்டதன் மூலம், வலதுசாரிய தேசியவாதத்துக்கு எதிரான இலக்கியப் போக்கு முடிவுக்கு வந்தது. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் அது வெளிபடத் தொடங்கியது. இந்த வகையில் பல சிறு சஞ்சிகைகள் வெளி வந்தன. புலம்பெயர் இலக்கிய மரபில் தொடங்கிய இடது தேசியவாத இலக்கிய போக்கு; கருத்துக்கும் நடைமுறை வாழ்கைக்குமான முரண்பாட்டால் மெது மெதுவாக மறையத் தொடங்கியது.
இதற்கு வலு சேர்க்கும் வண்ணம் வலதுசாரிய தேசியம் புலித் தேசியமாக குறுகி, தன் தேசியக் கூறுகளை இழந்தது. தேசியதுக்கு பதில் இனவாதத்தை தேசியமாக வெளிபடுத்தத் தொடங்கிய சமகாலத்தில், கருத்து நிலையில் இருந்த புலம்பெயர் இடதுசாரிய தேசியவாதமும் காணமல் போனது.
மாறாக இலக்கியமும் - அரசியலும்; படிப்படியாக புலி எதிர்ப்பு - புலி ஆதாரவாக மாறிய சூழலில், இலக்கியமும் அதற்குள் முடங்கிப் போனது.
அதே நேரம் புலியல்லாத புலம்பெயர் இலக்கிய நோக்கம் என்பது, தன்னை முதன்மைப்படுத்தும் பிரமுகர்த்தன இலக்கியமாக குறுகியது. புலிக்கு வெளியிலான இந்த இலக்கியம், ஒன்றில் புலியெதிர்ப்பு இலக்கியமாக அல்லது தன்னை முதன்மைப்படுத்தும் இலக்கியமாக வெளிப்பட்டது. புலிகளின் அரசியலுக்கு மாறான உழைக்கும் மக்களை முன்னிறுத்திய இலக்கியத்தை படைக்கவில்லை. அரசியல் விமர்சனத்திலும் இது தான் நடந்தேறியது.
புலியெதிர்ப்பு – பிரமுகர்த்தனம் என்ற வட்டத்துக்குள் குறுகிபபோன புலம்பெயர் இலக்கியம் மற்றும் அரசியல், மக்களுக்கு எதிரான கருத்து நிலையை முன்தள்ளியது.
மறுபக்கம் புலியை வைத்து பிழைக்கும் புலி ஆதரவு இலக்கியம் தோன்றியது. அது புலிகளின் வலதுசாரிய பாசிசத்தை பலப்படுத்தி பாதுகாக்கும் இலக்கியமாக மாறியது. இடதுசாரிய சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகளின் தலைமையில், இந்த மக்கள் விரோத புரட்டு இலக்கியம் புலிக்குள் தோன்றியது. மக்களை ஒடுக்கியபடி பாசிசத்தை நடைமுறையாக்கிய புலித்தேசிய இனவாதத்தை நியாயப்படுத்தியது இந்த இலக்கிய போக்கு.
புலி இருந்த வரை புலி ஆதரவு – புலியெதிர்ப்பு என்ற இவ்விரண்டுக்குள்ளும் பிரமுகர்த்தன இலக்கியப் போக்கு காணப்பட்டது. இதை மூடிமறைக்க "இலக்கியம் இலக்கியத்துக்காக" என்ற மூகமுடி அணித்து கொண்டு இலக்கியத்தின் அரசியலை மறுதளித்தனர். அதே நேரம் மக்கள் சார்ந்த வாழ்வியல் இலக்கியத்தை நிராகரித்தபடி, அதை வெறும் பிரச்சார இலக்கியமாகவும் வரட்டுத்தன… இலக்கியமாகவும் காட்டி, மக்கள் இலக்கியத்தை நிராகரித்தனர்.
புலிகள் அழிந்த பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தில் மக்கள் அரசியலை முன்வைத்து அரசியல் செய்யாத ஒரு உண்மையை எப்படி எதார்த்தமானதோ, அது போல் மக்கள் நலன் சார்ந்த இலக்கியம் என்பது இலக்கியத்தில் இருந்ததில்லை. மக்கள் விரோத இலக்கியம், அதாவது இலக்கியம் இலக்கியத்துக்கே என்றதனை தாண்டி எதுவும் இருக்கவில்லை.
தங்களை பிரமுகராக முதன்மைப்படுத்தும் நோக்கில் இலக்கியஙகள் படைக்கப்பட்டன. படைப்பாளிக்கு சமூக நோக்கம் இருந்ததில்லை. மக்களின் அவலங்கள், துயரங்கள், விடிவில் அக்கறையற்றவர்களின் படைப்புகளே படைப்புகளாக இருந்தன.
புலிக்கு பிந்தைய சூழல்
புலிகளின் அழிவிற்கு பின்பு புலி ஆதரவு இலக்கிய போக்கு முடிவுக்கு வந்தது. புலிக்குள் இருந்த வலதுசாரிய இலக்கிய பிரமுகர்கள், தங்களை முன்னிறுத்தி நிலைநிறுத்தும் வண்ணம் புதியதொரு இலக்கிய போக்கை வெளிபடுத்தத் தொடங்கி இருக்கின்றனர். இது இன்று புலி, புலியெதிர்ப்பு மற்றும் பிரமுகர்களை இலக்கியம் இலக்கியத்திற்கே என்னும் புள்ளியில் சந்திக்க வைத்துள்ளது. மக்களைந் சாரதா இந்த இலக்கிய நடத்தைகள் அனைத்தும், முரண்ணற்ற வகையில் பரஸ்பரம் அங்கீகாரத்துடன் ஒன்றாக பயணிக்கத் தொடங்கி இருக்கின்றன.
கடந்த காலத்தில் புலிகளுக்குள் இருந்து முன்வைத்த, உழைக்கும் மக்கள் விரோத இலக்கியத்தின் தொடாச்சியாக இன்றைய படைப்புகள் வெளி வருகின்றன. அரசியல் ரீதியாக புலிகளின் அரசியலை ஆதரித்து, அதில் தங்கள் அரசியல் நடத்தையும் மறுதளிக்காத, அதே அரசியல் தொடர்ச்சியாகவும் இந்த இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன.
எந்த நிகழ்வையும் அதன் கால அரசியல் ஊடாக அணுகாத படைப்புகள், அந்த அரசியலை பாதுகாக்கின்றதையே தொடர்ந்து செய்கின்றது.
வெளிவரும் படைப்புகள் கொண்டு இருக்கக் கூடிய விமர்சனப் போக்குகள்
புலிக்கு பின்னான முன்னாள் புலி இலக்கிய பிரமுகர்களின் படைப்புகள், புலிகள் பற்றிய விமர்சனங்களைக் கொண்டது தான். ஆனால் அவை அரசியல் விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல. மாறாக சம்பவங்கள், நடத்தைகள் மீதானது. தங்கள் மத்தியர வர்க்க வலதுசாரிய அதிருப்தியையும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் அடிப்படையாகக் கொண்ட விமர்சனம். இவை யாழ் மேலாதிக்க சாதிய சிந்தனையின் புளுக்கங்கள்.
புலிகள் இருந்த வரை புலிகளை அண்டி நக்கிப் பிழைத்தவர்கள், இனறு புலிகள் இல்லாத நிலையில் புலியை திட்டிப் பிழைப்பதுமாக இலக்கிய சூழல் மாறி இருக்கின்றது. புலிகளுடன் இறுதி வரை அதன் மக்கள் விரோத பாசிச அரசியலை நியாயப்படுத்திவர்கள் இன்று நேரெதிராக புலிகளை திட்டுகின்ற இலக்கியம் படைக்கின்றனர். இந்த நடத்தை ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து படைக்கும் இலக்கியமல்ல.
வர்க்க ரீதியான தங்களின் வலதுசாரிய மேட்டுகுடி பிரமுகர்த்தன புலி வாழ்வின் போது, சொந்த நலன்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையே இன்று புலிக்கு எதிரான விமர்சனமாக முன்வைக்கின்றனர். தங்கள் பிரமுகர்த்தன சுயநல நடத்தையையும், அதற்கு ஏற்பட்ட பாதிப்பையும், ஒட்டுமொத்த சமூகத்தின் மனிதாபிமான பிரச்சனையாக காட்டுகின்ற வக்கிரமே அண்மையில் வெளிவந்த இலக்கிய படைப்புகளின் கருவாக கொட்டிக் கிடக்கின்றது. சுயநலம் சார்ந்த தங்கள் குறுகிய பிரச்சனையை, சமூகத்தின் பிரச்சனையாக காட்டியே இந்த மக்கள் விரோத இலக்கியத்தைக் கடை விரிக்கின்றனர். இத்தகைய படைப்புகள் மூலம் புலிக்கு பிந்தைய புதிய அவதாரத்தைப் பெற முனைகின்றனர்.
இந்த இலக்கியமும் அது கொண்டுள்ள விமர்சனங்களும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களில் இருந்தோ, சமூக நோக்கில் இருந்தோ முன் வைக்கப்பபடுவதில்லை என்பதே உண்மை. மக்களை சொல்லி பிழைக்கும் பிரமுகர் பிழைப்புவாதமாகும்.
பிரமுகர்கள் கடந்த சூழலில் கைதிகளா?
"நடந்தவை எதற்கும் நாங்கள் பொறுபாளிகளல்ல. நாங்களும் சூழலின் கைதிகளானோம்". இதை இலக்கிய பிரமுகர்கள் மட்டுமல்ல, எல்லா இயக்க அரசியல் பிரமுகர்களும் கூறுகின்றனர். இதன் மறுபக்கம் தான், நடந்த தவறுகள் அனைத்துக்கும் பிரபாகரனுக்கோ அல்லது தலைமைக்கோ சம்பந்தம் இல்லை என்று கூற முனைகின்ற தர்க்கங்கள் கூட.
யாழ் மேலாதிக்க சாதிய சிந்தனை முறை நடந்ததை தவறாக காட்டுகின்றது. அதனை அரசியலாக பார்ப்பதை மறுக்கின்றது. இந்த தவறுக்கு இயக்கத்தில் இருந்த தாழ்ந்த சாதிகளின் நடத்தையாக கூட விளக்கமளிக்கின்றது. இப்படி இந்த இலக்கிய உள்ளடக்கத்துக்கும் யாழ் சிந்தனை முறைக்கும் இடையில் ஓற்றுமை இருக்கின்றது.
நடந்த தவறுகளுக்கு தங்களின் வலதுசரிய அரசியல் காரணம் அல்ல என்று கூறி, அதை மற்றவர்கள் மேல் சுமத்தி விடுகின்றதும், இயக்கத்தில் இருந்த தாழ்ந்த சாதிகளில் நடத்தையாக்கி விடுகின்றதும் யாழ் மேலாதிக்க வெள்ளாத்தனமாகும். இயக்கங்களை அண்டிப் பிழைத்த இலக்கியவாதிகள்; சம்பவங்கள் ஊடாக புலியை தவறாக காட்டி, அரசியல் ரீதியாக புலியை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் தங்களின் அன்றைய மற்றும் இன்றைய அரசியல் நிலைப்பாடுகளை சரியானதாக காட்டும் பித்தலாட்டத்தை இலக்கியமாக படைக்கின்றனர்.
கடந்த காலத்தில் அரசியல், கலை-இலக்கியம், ராணுவத்திற்கு தலைமை தாங்கிய அல்லது அதை வழிநடத்தியவர்கள் கடந்தகால சம்பவங்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்பது அடிப்படையில் தங்கள் கடந்த அரசியலை நியாயப்படுத்துவதாகும். இவர்கள் மறுத்தால் யார் இதற்கு பொறுப்பு? நாங்களும் அந்த சூழலின் கைதிகள் என்று கூறிக் கொண்டு தப்பித்துக் கொள்ளும் போக்கு, அன்று போல் இன்றும் தங்களின் அறிவுத் திறமை மூலம் தங்களை முன்தள்ளி பிழைத்துக் கொள்ளும் போக்காக இருப்பதை இன்று காணமுடிகின்றது.
அரசியல், கலை-இலக்கிய, இராணுவ தலைமைகளினால் வழி நடத்தப்பட்ட சாதாரண உறுப்பினர்களும், கூலிப் படையாக பயன்படுத்தப்பட்டவர்களும் மட்டுமே அன்றைய சூழலின் கைதிகள். அவர்கள் கடந்த கால மனித அவலங்களுக்கு பொறுப்பாக முடியாது. மாறாக மற்றவர்களை முன்னின்று வழி நடத்திய இராணுவம், அரசியல், கலை-இலக்கிய துறையினர் அனைவருமே அந்த அரசியலுக்கும், அதன் விளைவுக்கும் பொறுப்பாளிகளாவர். நடந்தது சம்பவங்கல்ல, மாறாக அரசியலாகும்.
இந்த வகையில் கடந்த காலத்தில் அரசியல் - இலக்கியம் மூலம் மற்றவர்களை வழி நடத்தியவர்கள், இன்று அதற்கு பொறுப்பு ஏற்க மறுத்து மக்களை சாராத இலக்கியங்களை தொடர்ந்து படைப்பதையே தங்கள் பிழைப்பாக்குகின்றனர். தங்களை சூழலின் கைதியாக காட்டிக் கொள்ளும் சந்தர்ப்பவாதத்தையே இங்கு காண முடிகின்றது. கடந்த காலத்தில் எல்லா இயக்கத்திலும் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்கள், இதையே இன்று பொதுவான போக்காக கையாள்வதனைக் காணலாம்.
நடந்தவை தனிபட்ட மனிதர்களின் தெரிவல்ல, மாறாக ஒரு அரசியல் வழிமுறை. அந்த அரசியலை முன்னெடுத்த, அதை வழி நடத்தியவர்களே அந்த அரசியலுக்கு பொறுப்பாளிகள். இன்று வரை கடந்த கால வலதுசாரிய வர்க்க அரசியலை நிராகரித்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம் சார்ந்து சிந்திக்கவும் வாழவும் மறுக்கின்ற போக்கில், நேர்மையான மக்களைச் சார்ந்து இயங்கும் சுயவிமர்சனத்துக்கு இடமில்லை. இந்த சுயவிமர்சனமற்ற அரசியல் தன்மையே, இன்றைய இலக்கிய போக்காகும்.
நன்றி .புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இணையத்தளம் 


»»  (மேலும்)