3/03/2015

| |

கிழக்கு மாகாண புதிய அமைச்சரவை முழு விபரம்


தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பை  உள்ளடக்கிய  புதிய  கிழக்கு மாகாண அமைச்சரவை இன்று (03/03/2015) நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்ட இரண்டு கிழக்கு மாகாண அமைச்சர்களின் பதவிகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.


இதனையடுத்து முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தலைமையில் ஐந்து பேரைக் கொண்ட இந்த புதிய அமைச்சரவை கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்தது.


இதற்கமைய கிழக்கு மாகாண அமைச்சரவையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முதற் தடவையாக அங்கம் வகிக்கின்றது.


புதிய அமைச்சரவையின் விபரம்:

ஹாபீஸ் நசீர் அஹமட் - கிழக்கு மாகாண முதலமைச்சர், நிதி, திட்டமிடல் சுற்றுலா மற்றும் உள்ளூராட்சி

சீ. தண்டாயுதபானி – கிழக்கு மாகாண கல்வி , கலாலாசார விளையாட்டு அமைச்சர்

துரை ராஜசிங்கம் - கிழக்கு மாகாண விவசாய, கிராமிய அபிவிருத்தி அமைச்சர்

எம்.ஐ.எம்.மன்சூர் - கிழக்கு மாகாண சுகாதார, சுதேச, கூட்டுறவு மற்றும் சமூக சேவைகள் அமைச்சர்

ஆரியவதி கலபதி – காணி, வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நெடுஞ்சாலைகள் அமைச்சர்