தேசிய கீதத்தை தமிழில் பாடுவது புதிதாக பெற்றுக் கொடுக்கப்பட்டதல்ல என, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன கூறியது அதிலுள்ள தடையை நீக்குவதாக அல்ல, தேசிய கீதத்தை தமிழில் பாடுவதில் சிக்கல் இல்லை என்பதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாராளுமன்றத்தில் தன்னிடம் தமிழில் தேசிய கீதம் பாட முடியுமா என வாய் மொழி மூலம் வினவப்பட்டதாகவும், அதற்கு தான் ஆம் என்றே பதிலளித்ததாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளார்.