79ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொறியியல் துறை பட்டப்படிப்பிற்காக இதற்கு முன்னர் 20 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டுவந்தது. எனினும் அந்தக் கட்டணம் தற்போது 62 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாவல பகுதியிலுள்ள திறந்த பல்கலைக்கழக வாசலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் 79ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சாதாரண குடும்பத்திலுள்ள மாணவர்கள் இவ்வளவு பெரிய பணத்தை எவ்வாறு செலுத்த முடியும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.