அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமாயின் அதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.