வங்குரோத்தடைந்துள்ள ரணில் - மைத்திரி அரசு நாடு முழுவதும் பெருகிவரும் மகிந்த அலையைக் கட்டுப்படுத்தவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி தேசிய அரசை ஸ்தாபித்துள்ளது - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்தன.
மேலும் தமது அனுமதி இன்றியும், தீர்மா னம் எடுக்காமலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைந்ததனூடாக மக்கள் ஆணையை காட்டிக்கொடுத்துள்ளது என்றும் அவை தெரிவித்தன.
100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டதன்படி ஏப் ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைக்க அரசு ஏன் அஞ்சுகின்றது எனக் கேள்வி எழுப்பியதுடன், அடுத்த பொதுத் தேர் தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்துடன் வெற்றி பெற்று புதிய அரசை உரு வாக்கு வோம் என்றும் சூளுரைத்தன.
கொழும்பிலுள்ள தேசிய நூல கத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப் பின்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மேற்கண்டவாறு தெரிவித்தன.
இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார � தெரிவித்தவை வருமாறு:- ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து புதிய அரசொன்றை உருவாக்கிவிட்டு தேசிய அரசு என்று பெயர் சூட்டியுள்ளன.
மக்கள் தமக்கு வழங் கிய ஆணையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இதை எதிர்த்து நாம் செயற்படுவோம். அடுத்து இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வின் தலை மையின் கீழ் வெற்றிபெற்று ஜனநாயக �இடதுசாரி சக்தி களின் அரசொன்றை உருவாக் குவோம் �என்றார். இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் தினேஷ்; குணவர்தன எம்.பி. தெரிவிக்கையில்: ரணில் �மைத்திரி அரசு வங்குரோத்தடைந்துள்ளது.�
அதனால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி லுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி தேசிய அரசொன்றை ஸ்தாபித்துள்ளது. அரசு வங்குரோத்தடைந்துள்ளமை இதனூடாகத் தெளிவாகியுள்ளது என்றார். இதையடுத்து, கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சரான விமல் வீரவன்ஸ நாட்டில் தற்போது கலப்புக் குழந்தையொன்று பிறந்துள்ளது.
இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் 100 நாள் திட்டம் என்றனர். ஆனால், 60 நாட்களுக்குள்ளேயே ஐஸ் கரைவது போல இந்த அரசு கரைந்து வரு கின்றது. �மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பெருகிவரும் மக்கள் அலைக்கு அஞ்சியே இந்தத் தேசிய அரசு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் உறுதியளித்ததுபோல 100 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலையுங்கள். ஏன் அஞ்சுகின்றீர்கள்?- என்றார்.