3/05/2015

| |

இராணுவத்தினரின் சப்பாத்து துடைக்கும் நகுலன்,ராம்- போன்ற புலித்தளபதிகள்முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்


சரணடைந்த புலித்தளபதிகள் மற்றும்  காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினர் தமது சப்பாத்துக்களைத் துடைப்பதற்கும், வேறு வேலைகளுக்கும் அவர்களைப் பயன்படுத்துவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் காணாமல்போன உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து, மகஜர் ஒன்றினையுமகையளித்திருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்டபோதே முதலமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். 
யுத்தத்தின் போது  சரணடைந்த புலித்தளபதிகள் பலரும்  இப்படியான வெட்ககேடான முறையில் தம் உயிரைக்காக்க  இராணுவத்துடன் வாழ்ந்து வருவது ஒன்றும் இரகசியம் அல்ல.மகளீர் படைத்துறை தலைவி தமிழினி,தமிழீழ விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாப்பா, புலிகளின் சார்ல்ஸ் அண்ரனி சிறப்புத்தளபதி நகுலன்,மட்டகளப்பு அம்பாறை தளபதியான ராம் போன்றோர் இன்னும் இராணுவத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள்.இவர்கள் எல்லாம் ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு கழுத்தில் சயனைட் குப்பிகளை கட்டி காளமனுப்பியவர்கள் ஆகும்.ஆனால் இறுதி யுத்தத்தில் குப்பிகடிக்க திராணியற்று சரணடைந்து இப்போ இப்படி அலைக்கழிகின்றார்கள்.அவர்கள் சப்பாத்து துடைக்கின்றார்களோ இல்லையோ மிக அண்மைக்காலம் வரை வெலிகந்த,   மின்னேரி இராணுவ தளங்களில் குசினிக்குள் மிளகாய், வெங்காயம் வேட்டிக்கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. சார்ல்ஸ் அண்ரனி சிறப்புத்தளபதி நகுலன்,மட்டகளப்பு அம்பாறை தளபதியான ராம் போன்றோர் இப்போது மட்டகளப்பு இராணுவமுகாமில் வைக்கப்பட்டுள்ளார்கள். கடந்த மூன்று  மாதங்களுக்கு முன்னர் ராமின் தாயார் காலமானதால் அவரது இறுதி சடங்குக்காக   அவரை இரு நாள் விடுமுறையில் வெல்லாவெளிக்கு சென்று வர அனுமதித்திருந்தனர்இராணுவத்தினர். இவர்களைத்தான், இந்த தளபதிகளைத்தான்,இவர்கள் தலைமையேற்றிருந்த புலிகள் அமைப்பைத்தான் தமிழர்களின் வீரகாலமாக, பொற்காலமாக,தன்மானத்தின் அடையாளமாக தமிழ் தேசியவாதிகள் புகழ்ந்து வருகின்றார்கள். ஆனால் புலிகள்  உண்மையில் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத அவமானச்சின்னமாகும்.