3/12/2015

| |

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது குண்டு வீச்சு எம்பி யோகேஸ்வரனின் நண்பர் ஹிந்துத்துவா தீவிரவாதி ஜெயம் கைது

 


சென்னை தனியார் தொலைக்காட்சி மீது டிபன்பாக்ஸ் குண்டு வீசியவர் கோர்ட்டில் சரணடைந்தார். இந்து இளைஞரணி சேனா அமைப்பை சேர்ந்த ஜெயம் பாண்டியன் என்பவர் குண்டை வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தில் நேரடியாக வேணுகோபால், சரவணன்,சிவா, ராஜா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜெயம்பாண்டியன் அலுவலகத்தில் தினசரி ரூ. 300 கூலிக்கு வேலை செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஜெயம் பாண்டியன், முதலில்  இந்து மக்கள் கட்சியில் இருந்துள்ளார். பின்னர் அதில் இருந்து பிரிந்து வந்து இந்து இளைஞர் சேனா என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஹிந்துத்துவா தீவிரவாதிகளை கைது செய்து சட்டத்திற்கு முன்பாக தண்டிக்க வேண்டும் , தமிழக மக்களின் அமைதியாய் சீர்குலைக்க செய்யும் இந்த ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பை உடனே தடை செய்ய வேண்டும்..

எம்பி யோகேஸ்வரன் அடிக்கடி இந்தியா பயணம் செய்து இந்து தீவிரவாதிகளுடன் தொடர்புகளை மேட்கொண்டு வருவது குறித்து எமது தளத்தில் நாம் பலமுறை எச்சரித்து வந்துள்ளோம்.சிவசேன போன்ற பயங்கர வாதிகள் கிழக்கில் கால் வைக்க இவரது தொடர்புகள் உதவக்கூடும் என்பதால் அவர் இதுகுறித்து விசாரணை செய்யப்படவேண்டும்.