3/13/2015

| |

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமையின் இயலாமையும் பலவீனமும் கிழக்கு மாகாண சபை நெருக்கடி நிலைக்கு காரணம் -சந்திரகாந்தன்

கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் ஆளும் தரப்புக்கு ஆதரவு வழங்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மாகாண சபை உறுப்பினர்கள் 15 பேரில் 10 பேர் தமது ஆதரவை விலக்கிய நிலையில் எதிர்கட்சியாக இயங்க முடிவு செய்துள்ளனர்.


 10 பேரும் முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா தலைமையில்  எதிர்கட்சி உறுப்பினர்களாக செயல்படவுள்ளார்கள்.

இதனை உறுதிப்படுத்தியுள்ள முன்னாள் மாகாண அமைச்சர்களில் ஒருவரான தேசிய காங்கிரஸை சேர்ந்த  எம். எஸ்.உதுமான்லெப்பை       ஶ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சி , தேசிய காங்கிரஸ் , தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் , தேசிய சுதந்திர முன்னனி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் 10 பேரும்  அம்பாரையில் கூடி இந்த முடிவை எடுத்துள்ளதாக   தெரிவித்தார்.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கும்  ஶ்ரீ  லங்கா முஸ்லிம் காங்கிரஸக்குமிடையிலான உடன்படிக்கையின் படி  முதலமைச்சர் பதவி மட்டுமே இரண்டரை வருட பதவிக் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸக்கு விட்டுக் கொடுக்கப்பட வேண்டும்

அதன் பிரகாரம் தற்போதைய முதலமைச்சருக்கு தங்களால் ஆளுநரிடம்  ஆதரவு உறுதிப்பத்திரம் சமர்பிக்கப்பட்டிருந்தது. அதனை தற்போது  தாங்கள் விலக்கிக் கொண்டுள்ளதாவும்  உதுமான் லெப்பை தெரிவிக்கின்றார்.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ்' அந்த ஒப்பந்தத்தை மீறி ஏற்கனவே ஆட்சியிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிளின் கூட்டு கட்சிகளை ஒதுக்கி விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பையும் இணைத்து ஆட்சி அமைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்

  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்ட உடன்படிக்கையை  மீறிய செயல் மற்றும் தமக்கு எதிரான போட்டிக் கட்சிகளை ஒரங்கட்டும் செயல்கள் காரணமாகவே  தாங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவரால் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமையின் இயலாமையும்  பலவீனமும்  இந்த நெருக்கடி நிலைக்கு காரணம் என்னின்றார் தமிழ் மக்கள் விடுதலைப்பலிகளின் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்.

' எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தாலும் மக்களுக்கு பயன் தரக் கூடிய  விடயங்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும்  அவர் கூறுகின்றார்.