3/12/2015

| |

ஆசிரியர் இடமாற்றமும், வடக்கு மாகாண கல்வியமைச்சின் இயலாமையும்..............?

வக்கில்லாத வடக்கு மாகாண கல்வித் திணைக்களம்.
Résultat de recherche d'images pour "தம்பிராசா குருகுலராசா"இறந்த ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கர்ப்பிணி ஆசிரியர்கள், நோய் பீடித்த ஆசிரியர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு இடமாற்றம் வழங்கும் துப்புக் கெட்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சு. உண்மையில் கஷ்ட பிரதேசங்களில் பணியாற்றிய ஆசிரியர்களை மதிப்பதில்லை.
பல்வேறு பகுதிகளில் இருந்து சென்று வன்னிப் பகுதிகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மிகுந்த அர்பணிப்புகளை மேற்கொண்டு பல்வேறு வகையான இடையூறுகளையும் எதிர்கொண்டு பலவருடங்கள் சேவையாற்றிய பின்னர் தமது சொந்த இடங்களில் கற்பிக்க விரும்புவது அவர்களின் அடிப்படை உரிமை.
இவர்களுக்கு இடமாற்றம் வழங்கி அவர்களின் இடங்களுக்கு வேறு ஆசிரியர்களை நியமிப்பது மாகாண கல்விப் பணிமனையின் இன்றியமையாத பணி. அதைச் செய்ய முடியவில்லையானால் பணிமனையை இழுத்து மூடிவிட்டு வேறு வேலை பார்கலாம்.
தை மாதம் செய்ய வேண்டிய இடமாற்றம் ஏப்ரல் மாதத்தில் செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட அப்பாவி மாணவர்களின் கல்வியை குழப்பி அடிக்கும் வடக்கு மாகாண கல்வி பணிமனையின் அராஜகம் கண்டிக்கப்பட வேண்டும்.
தமது ஐந்து வருட பணிக்காலத்தில் ஒரு நாள் போதாமல் விட்டாலும் மீண்டும் ஒருவருட காலம் கட்டாயம் சேவையாற்றி இடமாற்றம் கோரும் ஆசிரியர்களின் கோரிக்கை என்ன காரணத்திற்காகவேனும் நிராகரிக்க முடியாது.
வன்னிப் பகுதிகளில் கடமையாற்றும் கடமையாற்றிய ஆசிரியர்கள்
-யுத்த காலத்தில் களத்தில் நின்று நாதியற்ற மாணவர்களுக்கு அர்பணிப்புடன் பணியாற்றினார்கள்.
-அதிகஸ்டப் பிரதேசங்களில் பணியாற்றிய பலர் பெண்கள் உட்பட அனேகர் உழவு இயந்திரம் மற்றும் மணல் ஏற்றும் டிப்பர் வாகனங்களில் சென்று கூட கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் வந்தனர்.
-எத்தனை பெண் ஆசிரியர்களுக்கு கருக் கலைந்திருக்கும்.
- குழந்தை பெறும் பாக்கியத்தை இழந்த ஆசிரியர்களுக்கு என்ன பதில் சொல்வது
- எத்தனை ஆசிரியர்களுக்கு நாரி நோ, முள்ளம்தண்டு வருத்தம் ஏற்பட்டு இருக்கும்.
- தூரப்பாடசாலைகளுக்குச் செல்வதற்காக நடுச்சாமம் எழும்பி சமையல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர். நடுஇரவில் சென்று இரவில் வீடு திரும்பும் ஆசிரியர்கள்.
- உழைக்கும் காசு அனைத்தையும் போக்குவரத்து, சாப்பாடு போன்றவற்றுக்காக தாரைவார்த்த ஆசிரியர்கள் உள்ளனர்.
- குடும்ப பிரிவு, பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியுமால் பரிதவிக்கும் ஆசிரியர்கள் உள்ளனர்.
இது போன்ற பல்வேறு இடர்களையும் சகித்துக் கொண்டு இன்முகத்துடன் கடமையாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப் பட வேண்டும்.
பொன்னாடை போர்த்தி மரியாதை செய்ய வேண்டிய ஆசிரியர்களை அசௌகரிகத்துக்கு உள்ளாக்காமல் விட்டாலே போதும்.
வடக்கு மாகாண சபை இதுவரை செய்தவை.
1. திடமான இடமாற்ற கொள்கை இல்லை
2. நீதியான முறையில் இடமாற்றங்களை வழங்க வில்லை.
3. கஸ்டப் பிரதேசங்களில் பல ஆண்டுகளாக கடமையாற்றும் ஆசிரியர்களை மதிப்பதில்லை.
4. அரசியல் செல்வாக்கால் சீரழியும் இடமாற்றமும் கல்வியும்
5. பழிவாங்குதல், மோசமான இடமாற்றம் வழங்குதல்.
6. குதர்க்கம் பேசுவது
7. அதிகாரிகளின் நண்பர்கள், உறவினர்களுக்கு வசதியான வாய்ப்பான பாடசாலை.
குற்றச்சாட்டு
1. பலநேரங்களில் வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் பணி எதுவென்று விளங்குவதில்லை.
2. வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த பதவிக்கு பொருத்தம் இல்லை.
3. ஆசிரியர் சங்கம் இதற்கு குரல் கொடுப்பதில்லை.
4. தொடர்ந்தும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு சுகம் அனுபவிக்கும் செல்வாக்கு உடைய ஆசிரியர்களை கிளப்ப முடிவதில்லை.
5. ஆசிரியர் இடமாற்றம் வந்தவுடன் சுகதேகியான பலருக்கும் இல்லாத வருத்தமெல்லாம் வந்துவிடும்.
6.அப்பாவி ஆசிரியர்கள் ஏமாற்றப்படல்.
சிங்கள மக்களிடம் உரிமைக்காப் போராடும் தமிழினம் தமிழர்களாலே சிதைக்கப்படுகின்றனர்.
அனுபவம் புதுமை
ஜெ.றஜீவன்

நன்றி முகனூல்