மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயஸ்ரீ என்ற பெண்மணி சிகிரிய ஓவியங்களைப் பார்க்கச் சென்ற போது அவ் ஓவியங்களை சேதப்படுத்தியதாக குற்றஞ் சாட்டப்பட்டு, 2 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினர் மைத்திரிபால சிறிசேனவுக்கு குறித்த பெண்ணை விடுதலை செய்யக்கோரி கருணை மனு ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி. செல்வி மனோகர் கையொப்பம் இட்டு அனுப்பியுள்ள இக் கருணை மனுவில், யுத்தத்தின் அச்சத்தினால் வீட்டை விட்டு வெளியில் வராமல் குடும்பச் சுமைகளுடன் வேதனைகளுக்கு மத்தியில் வாடிக் கொண்டிருந்த நிலை தற்போது தான் படிப்படியாக மாறி வருகின்றது.
எமது கிழக்கு மாகாணப் பெண்கள் யுத்தத்தினால் ஒடுக்கப்பட்ட சூழலில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ள ஆரம்பித்துள்ள சூழலில் மேற்படி கைதானது, ஏனைய தமிழ் பெண்கள் மத்தியில் மீண்டும் ஒரு அச்ச நிலையினைத் தோற்றுவிக்கும் நிலையினை ஏற்படுத்தும். என அஞ்சுகின்றோம்.
புராதன பொருட்களை அழிப்பதோ, சேதப்படுத்துவதோ, தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். ஆயினும் யுத்த அடக்கு முறைக்குள் இருந்து வெளியில் வந்த எமது பெண் சமூகம் மேற்படி சட்ட விதிகளை குறிப்பாக புராதன பொருட்களை பேணும் சட்டமூலங்களை அறிந்திருக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டது. அது மட்டுமின்றி குறித்த பெண் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வாதாரத்தினை நடத்தி வரும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தினைச் சேர்ந்தவர் ஆகும். சி.உதயஸ்ரீயின் வருமானத்திலேயே அவரின் குடும்பம் அன்றாட வாழ்க்கையினை நடத்தி வருகின்றனர்.எனவே தாங்கள் பெருமனதுடன் குறித்த பெண்ணின் குடும்ப மற்றும் எதிர்கால வாழ்வினை கருத்திற் கொண்டு தங்களின் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய ஆவண செய்யுமாறு கோரி நிற்பதாக அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.