3/23/2015

| |

கடற்கரைப்பள்ளி வாசலின் 193வது வருடாந்த கொடியேற்ற விழா ஆரம்பம்

கல்முனைக்  கடற்கரைப்பள்ளி வாசலின் 193வது வருடாந்த கொடியேற்ற விழா சனிக்கிழமை (21.03.2015) மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.


இஸ்லாமியக் கணக்கீட்டின் படி இன்று முதற் பிறையன்று  இஸ்லாமிய பெரியார் அப்துல் காதிர் நாகூர் சா{ஹல் ஹமீது மீராசாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் ஞாபகார்த்தமாக 193 வது வருட கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமாகின்றது.

கல்முனை முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு  கடற்கரைப்பள்ளிவாசலின் மினராக்ககளில் ஏற்றப்பட்டது.

பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில் சன்மார்க்கப் பிரச்சாரங்கள், திக்று, ராத்திபு,மௌலித் ஆகிய விடயங்கள் இடம் பெறும்.

இவ்விழாவின் இறுதிநாளான்று கொடி இறக்கப்பட்டு விஷேட துஆப்பிரர்த்தனையுடன் கந்தூரி அன்னதானமும் இடம்பெறும்.